Friday, February 29, 2008

விருது வாங்கித் தந்த வெட்டி வேர்

இந்தோனேஷ்யாவின் பாலி பகுதி மலை கிராம மக்கள் வெளி உலக தொடர்பின்றி நோயினாலும், சாலை வசதியின்றி, கல்வி பெறாமல் இருந்த போது கட்டிட பொறியாளர் திரு.டேவிட் பூத் MBE தன் தொழிலில் சிறந்து இருக்கும்போது அதனை உதறிவிட்டு சேவை நோக்குடன் 1998 ஆம் ஆண்டு அங்கு வந்து தங்கி வெட்டி வேர் உதவியுடன் சாலை அமைத்து, குழந்தைகளுக்கு கல்வி தந்து, வெட்டி வேரின் மூலம் மண் அரிப்பை தடுத்து, இயற்கை விவசாயம் செய்ய வைத்து, மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கிராம தன்னிறைவு அடைய உதவியதற்காக இங்கிலாந்து இராஜாங்கம் அவருக்கு 2005 ஆம் ஆண்டு MBE என்ற உயர்ந்த விருது அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
அதன் PDF காட்சியை காண இங்கே click செய்யவும்.


கொச்சி நகரில் நடந்த பயிலரங்கத்திற்கு வந்தவர்களின் பாராட்டுகளை வெகுவாகப் பெற்றது அவரது செயல் விளக்கம். அவரைப் பற்றிய கட்டுரையை MillionaireAsia என்ற பத்திரிக்கை பிரசுரித்து கௌரவப்படுத்தியுள்ளது.

நாம் திரு. வவ்வால் அவர்கள் பின்னூட்டத்தில் (விவசாயப்பார்வையில் களைச்செடியாக தான் வெட்டி வேர் வகைப்படுத்தப்பட்டுள்ளது.)கூறியது போல் " வெட்டி வேரை "களை என்று வகைப்படுத்தியுள்ளோம். எது உண்மை ????

Wednesday, February 27, 2008

வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?

கீழே உள்ள படத்திற்கு துல்லியமான வரலாறு தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் . உடை , குதிரை இவைகளை வைத்து சுமார் 80 - 100 ஆண்டுகள் என கொள்ளலாம்??? வீழ்ந்த மரத்தின் மேல் குதிரைகள் செல்வதை சற்று கவனமாக உற்று நோக்கினால் பார்க்கலாம். இதுபோன்ற மரங்கள் நிறைந்த இப்பூவுலகை மனிதன் தன் சுய நலத்திற்காக அழித்துக் கொண்டு வருங்கால சந்ததியினரையும் பிற உயிரினங்களையும் அழித்து வருகிறான். இவ்வாறு செய்வதை வளர்ச்சி என்பதா? அல்லது வீழ்ச்சி என்பதா? முடிவை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
படத்தின் வரலாறு யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.

Tuesday, February 26, 2008

இந்திய வெட்டி வேர் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் விலாசம்

கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினைப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விலாசம் கேட்டிருந்தாரகள். அவர்களுக்காக அந்தந்த பொருட்களின் புகைப்படத்தில் தந்திருக்கிறேன் வாங்கி பயன் பெறுங்கள்.

Monday, February 25, 2008

தாய்லாந்து நாட்டின் வெட்டிவேர் கைவினைப் பொருட்கள்.

நீங்கள் பார்க்கின்ற கைவினைப் பொருட்களின் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்தும் வெட்டி வேரின் புல்(இலை) கொண்டு செய்யப்பட்டவை. தாய்லாந்து நாட்டின் மன்னர் வேரை உபயோகிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டத்திற்கு இணங்க (வேரை எடுத்தால் மண் அரிப்பு ஏற்படும்) இந்த அழகான பொருட்கள்.
உயர் அழுத்ததில் இலை கொண்டு உருவாக்கப்பட்ட பலகை. (Board)

Sunday, February 24, 2008

வெட்டி வேர் கைவினை பொருட்கள்

கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினை பொருட்களின் காட்சி. முழுவதும் வேரினால் செய்யப்பட்டது. அழகாகவும், மணத்துடனும் நேர்த்தியாகவும் இருந்தது.

Saturday, February 23, 2008

ஆனந்த விகடனில் எனது வலைப்பூ

வெட்டிவேர் பயிற்சி பட்டறையின் முதல் நாள் முடிந்து மகிழ்ச்சி,ஆதங்கம், வருத்தம் என பல மனநிலைகளுடன் இருந்த போது நண்பர் திரு. மகாலிங்கம் அவர்கள் ஆனந்த விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்திருப்பதாக அறிவித்த போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். காரணம் வெட்டிவேர் பற்றி மேலும் மக்கள் அறிய ஒரு வாய்ப்பை தந்த ஆனந்த விகடனுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
மகிழ்ச்சி
ஒரு பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருந்தது. நானும் ஆரம்பித்து ''வெட்டிவேர்'' என்றவுடன் மாணவர்களிடையே ஒரு ஏளனப் புன்னகை. ஆனால் பயிற்சி பட்டறையில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தாலும் உச்சரிப்பு பல்வேறாக இருத்தாலும் அனைவரும் ''வெட்டிவேர்'' என்றது மகிழ்ச்சியாயிருந்தது.
ஆதங்கம்
திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE ( Chairman ,The Vetiver Network International USA ) அவர்கள் வெட்டிவேர் தாவரங்களில் ''ரோல்ஸ் ராய்ஸ்''என்றார். மற்ற நாடுகள் சரியாக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி காணும் போது நாம் அதனை சரியாக பயன்படுத்தாமல் வெள்ளம், வறட்சி என பொருளாதார வீழ்ச்சியில் உள்ளோம் திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE அவர்கள் தலைமையுரை
வருத்தம்
தாய்லாந்து, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் அரசுகள் பெருமளவு உதவிசெய்து வெட்டிவேரை பிரபலப்படுத்துவது மகிழ்ச்சியாக இருந்தாலும் நமது அரசுகள் அந்த அளவிற்கு இல்லை என்பது வருத்தமாகவுள்ளது.
வரும் ஆறு அல்லது ஏழு பதிவுகள் வெட்டிவேர் பற்றியதாக இருக்கும் எனவே எனது வலை பூ பக்கம் வரும் வாரங்களில் வந்து வெட்டிவேர் பற்றி அறிந்து கொண்டு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.

Saturday, February 2, 2008

இந்தியாவின் முதல் வெட்டிவேர் பயிலரங்கம்.

இந்தியாவின் முதல் வெட்டிவேர் பயிலரங்கம் பிப்ரவரி மாதம் 21 முதல் 23 முடிய கேரளா மாநிலத்தின் கொச்சி மாநகரிலுள்ள ஹோட்டல் சரோவரம் ( HOTEL SAROVARAM ) என்ற இடத்தில் நடைபெறுகிறது. அது சமயம் திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE ( Chairman ,The Vetver Network International USA ) , திரு.பால் டிருங் (Director,TVNI and Managing Director, Vetiver Consulting, Australia ) , திரு. ஹரிதாஸ், திரு. லட்சுமணபெருமாள்சாமி போன்ற வல்லுனர்கள் விளக்கமளிக்கவுள்ளனர். மிகவும் பயனுள்ள இந்த வெட்டிவேர் பயிலரங்கத்திற்கு உங்களை அழைக்கிறேன்.


விளக்கங்களுக்கும், பதிவுக்கும்

Sri..P.HARIDAS
Mobile : 0991 94470 60057
Sri. Mohan Alembath
Mobile : 0991 94472 23179


வெட்டிவேர் பற்றிய எனது பழைய பதிவை இங்கே காணலாம்.