Monday, December 31, 2007

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மலை பகுதியின் ஆரோக்கியமே (மரம்) சமவெளியின் வாழ்வாதாரம். (நீர்)

Friday, December 28, 2007

மருத்துவ தாவரங்கள் பயிரிடுவோருக்கு மத்திய அரசு நிதியுதவி.

உலகமயம், தாராளமயத்தினால் விவசாயமே கடினமாக இருக்கும் போது அதன் ஒரு பிரிவான மருத்துவ தாவர வளர்ப்பு இன்னும் சரியான சந்தை வாய்ப்புக்கள் இன்மையால் மேலும் கடினமாகிறது. ஆனால் உலகளவில் அதன் தேவைகள் அதிகரித்து வருவதால் நிதியுதவி செய்து சுமார் 32 வகை தாவரங்களை பயிரிட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முன்வந்துள்ளது.

இச்செய்தியை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, December 21, 2007

அழகு தரும் மலர் மரங்கள் - புகைப்படம்.

குளிர் காலத்தில் பூத்துக் குலுங்கும் பெங்களூரு நகரையும், பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்த மேல் நாட்டு தொழிற்சாலை, பல்கலைகழக,கல்லூரி வளாகங்களை புகைப்படத்தில் பார்க்கும் பொழுது மனதில் புத்துணர்ச்சி வருகிறது. பொதுவாக நமது நகரங்களும், பல்கலைகழக, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்கள் மரங்களின்றி கோடைகாலங்களில் வறட்சியுடன் காணப்படுகின்றன. நிழல் தரும் மரங்களுடன் அழகு தரும் மலர் மரங்களையும் நட்டு நிழலுடன் புத்துணர்ச்சியும் பெறலாமே!!!!! மரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகுமே.


உங்கள் பார்வைக்காக சில மலர் மரங்கள்.






ஒன்றிரண்டை தவிர மற்றவை தமிழகத்தில் நன்கு வளரும்.




Friday, December 7, 2007

புகைப்பட போட்டிக்கு எனது மலர்கள்

முதல் இரண்டும் போட்டிக்கு மற்றவை பார்வைக்கு.








சேணைக்கிழங்கின் பூ துர்வாசனை தாங்க இயலாது. ஈ அமர்ந்திருப்பதை காணலாம்.



Thursday, December 6, 2007

தமிழகத்தில் பேரீட்சை மரம்!!!!!!!

பன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை மேலும்
குழப்பத்திலும், நஷ்டத்திலும் வாழ வைத்து, அவர்கள் தற்கொலையை (பார்க்க The Hindu Dt 12-15 Nov 2007 ) நோக்கி போய்கொண்டிருக்கும் வேளையில் வறட்சியை தாங்கி, செலவும் பராமரிப்பும் குறைந்த, அதிக லாபம் தரும்
ஒரு நீண்ட கால மாற்றுப் பயிரை அறிமுகப்படுத்தி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஒரு விவசாய அமைதி புரட்சியை செய்து கொண்டிருப்பவர் தருமபுரி விவசாயி திரு.S.நிஜாமுதீன்.



திரை கடலோடி திரவியம் தேடி கூடவே ஒரு மாற்றுப்பயிரையும் கண்டு அதனை தன் நிலத்திலேயே நட்டு சோதனை செய்து வெற்றியடைந்த பின் அறிமுகம் செய்து இன்று சுமார் 2000 ஏக்கர் தமிழகத்திலும் சுமார் 700
ஏக்கர் அண்டை மாநிலங்களிலும் விரும்பி பயிரிடப்படுகின்றது என்பது திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

கீழ்கண்ட நன்மைகள் இதைப் பயிரிடுவதால் கிடைக்கின்றது.

1. குறைந்த நீர்.

2. பராமரிப்பு செலவு குறைவு.

3. ஆடு,மாடுகள் சேதப்படுத்துவதில்லை.

4. களர் நிலத்திலும் வளர்கிறது.

5. நீண்ட நாட்கள் பழங்களைப் பதப்படுத்தி பாதுகாக்கலாம்.

6. நீண்ட காலப்பயிர் 5-100 ஆண்டுகள் வரை.

7. நல்ல மகசூல் சுமார் 100 - 300 கிலோ/ஆண்டு.

8. விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கின்றது.

9. சிறந்த சத்துள்ள (இரும்புச்சத்து) பழம்.

10. தரிசு நிலம் மேம்படுவதோடு வேலை வாய்ப்பும் பெருகுகின்றது.

11. முக்கியமாக அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது.


உலகிலயே பேரீட்சையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான்.

==============================================
ஆண்டு ------ இறக்குமதி----------மதிப்பு.

----------------------மெ.டன்---------அமெ.டாலர்(,000)

==============================================

1998 -------------244088 -----------------54591

1999 -------------238195 -----------------45798

2000 ------------192619 ------------------41554

2001 ------------244367 ------------------52786

2002 ------------171523 ------------------27798

2003-------------193755-------------------33011

2004-------------247875-------------------46407

=============================================
Source : FAO/UN



இறக்குமதியை குறைத்தாலே அந்நிய செலவாணி மிச்சப்படுகிறது. எனவே தமிழக அரசும், மத்திய அரசும் தங்கள திட்டங்களில் இதனை அறிமுகம் செய்தால் அடுத்த 10-20 ஆண்டுகளில் நிறைய அந்நிய செலவாணியை மிச்சபடுத்தமுடிவதோடு நிலத்தின் பயன்பாட்டையும் அதிகரிக்கமுடியும்.மிகச் சிறந்த ஒரு மாற்றுப்பயிரை நமக்கு அறிமுகம் செய்த திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடர்புக்கும் விளக்கங்களுக்கும்
கீழ் கண்ட வலைதளத்தைக் காணுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



WHERE THERE IS A WILL THERE IS A WAY.