Sunday, September 9, 2007

புற்று நோயும், கோதுமை புல் சாறும்.

மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, பயிற்சி, கிரியை என சில சாதாரண காரியங்களில் நாம் கவனம் செலுத்தினாலே 75% நோய்களை நாம் தவிர்க்க முடியும். இவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் வர காரணமாகிறோம்.இவைகளில் அதிகமாக தாக்குவதும் அதிக பணச் செலவு வைப்பதும் இரு நோய்கள். 1. இருதய நோய் 2. புற்று நோய்.

புற்று நோய் :

இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும்.தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள்.நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது. இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும்.இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே. தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.

இதனை தவிர வெண்நுணா (Morinda citrifolia ) என்ற தாவரத்தின்
பழச்சாறும் மிகவும் சிறந்தது.இதனை நோனி (Noni)என்ற பெயரில் விற்பனை
செய்கிறார்கள்.இந்திய தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம்.பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன.


வீடியோ காட்சி காண Click

ஆங்கில கட்டுரை படிக்க Click

மேலும் அறிய கூகிள் தேடுதளத்தை பயன்படுத்துங்கள்.


புற்று நோயை எதிர்க்கும் மேலும் சில உணவுகள் பற்றிய விபரங்களை கீழேயுள்ள வலைதளம் விரிவாக கூறுகிறது. படித்து பயன்பெறுவீர்.

http://www.cancure.org/cancer_fighting_foods.htm

பதிவர் திருமதி.அனுராதா அவர்களின் உறுதியான போராட்டத்திற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.அவர் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

3 comments:

வெங்கட்ராமன் said...

மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான்.

இதையெல்லாம் யாராவது பஞ்ச் டயலாக்கா பேசுனாவாவது மக்கள் கேக்குறாங்களான்னு பார்ப்போம்.

வின்சென்ட். said...

நன்றி திரு.வெங்கட்ராமன்

kuppusamy said...

புற்று நோயுக்கு எழிமையான இயற்கை மருந்து. நன்றி.