Monday, January 14, 2008

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், வேளாண் விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையும் இணைந்து www.tnagmark.tn.nic.in என்ற வலைதள முகவரியில் "உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்" ஆரம்பித்துள்ளார்கள்.


வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை விலை விபரம்,
பொருட்களின் வரத்து (Quantity ) ,
குறிப்பிட்ட பயிருக்கான முன்னறிவிப்புக்கள் ,
ஏற்றுமதி பற்றிய விபரம் தருகிறார்கள்.

நாட்டின் பல்வேறு சந்தைகளின் விலை விபரம் தமிழில் கிடைப்பது இதன் சிறப்பு.பயனுள்ள இந்த வலைதளம் உழவர் பெருமக்களால் சரியாக பயன்படுத்தப்பட்டால் விவசாய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும். விலை விபரம் தெரிவதால் இடைதரகர்களின் தொல்லை குறைகிறது. அதே நேரத்தில் நுகர்வோரும் இதனை அறிந்து கொள்வது நல்லது. தமிழக மக்கள் தொகையுடன் வலைதளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது வருகை மிக மிக குறைவு. மாறிவரும் வியாபார சூழலில் இதுபோன்ற வலைதளங்கள் இன்றியமையாதவை.

அனைவருக்கும் இனிய, வளமான பொங்கல் நல்வாழ்த்துகள்.

Monday, December 31, 2007

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மலை பகுதியின் ஆரோக்கியமே (மரம்) சமவெளியின் வாழ்வாதாரம். (நீர்)

Friday, December 28, 2007

மருத்துவ தாவரங்கள் பயிரிடுவோருக்கு மத்திய அரசு நிதியுதவி.

உலகமயம், தாராளமயத்தினால் விவசாயமே கடினமாக இருக்கும் போது அதன் ஒரு பிரிவான மருத்துவ தாவர வளர்ப்பு இன்னும் சரியான சந்தை வாய்ப்புக்கள் இன்மையால் மேலும் கடினமாகிறது. ஆனால் உலகளவில் அதன் தேவைகள் அதிகரித்து வருவதால் நிதியுதவி செய்து சுமார் 32 வகை தாவரங்களை பயிரிட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முன்வந்துள்ளது.

இச்செய்தியை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.