Friday, April 3, 2020

மேற்கு வங்கத்தில் புத்துயிர் பெற்ற "வெட்டிவேர்".

  5 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத இருக்கிறேன். தொடர்ச்சியாக   வெளி மாநிலங்களில் மண்அரிப்பு மற்றும் வெட்டிவேருக்கான பயணங்கள், குறுங்காடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் மற்றும் அதன் தொடர்பான கண்காணிப்பு என இருந்ததில் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.  தொடர்பில் இருப்பவர்களின் விருப்பம், உபயோகமான சில அனுபவங்கள், விவசாயத்திற்கு உதவும் சில யுக்திகள்,  கட்டாய வீட்டு இருப்பு மீண்டும் என்னை எழுதத் தூண்டியுது.

நதியா மாவட்டநிர்வாகத்தின் காணொளி

2015 ஆண்டு துவக்கத்தில் மேற்கு வங்க மாநில தொண்டு நிறுவனம் ஒன்றிலிருந்து ஓர் அழைப்பு. ஆற்றோரங்களில் மண்அரிப்பை தடுக்க வெட்டிவேர் பயன்பாடு குறித்து ஆலோசனைக்கு அழைத்திருந்தார்கள். 2011 ஆண்டே அவர்கள்   வெட்டிவேர் மூலம் மண்அரிப்பை தடுக்க ஆரம்பித்திருந்தார்கள். இருப்பினும் என்னை ஏன் அழைக்க வேண்டும் ?  கேள்விகளுடன் சென்ற எனக்கு பிரமிப்பு காத்திருந்தது. இந்த எளிய புல்லை வைத்து 100 நாட்கள் வேலைவாய்ப்பு  MGRNREA - "Mahatma Gandhi National Rural Employment Guarantee Act")மூலம்  அவர்கள் செய்யவிருக்கும் இந்த சமுதாய முதலீடு (Social investment) அம்மாநிலத்தை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றி விவசாயத்தை மேம்படுத்தும் என மனக்கண் முன் நிறுத்திய போது பிரமிப்பு ஏற்பட்டது. 5 வருடங்கள் கடந்து இன்று அந்த சமுதாய முதலீடு பலனை தருவது மகிழ்ச்சியை தருகிறது. இதனை சிறப்பாக வடிவமைத்து செயலாற்றிய அனைத்து அரசாங்க அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்களும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றால் அது மிகையில்லை.

No comments: