அண்மையில் கோவையில் நடைபெற்ற மரமேளாவில் மரங்களை கிராமம் கிராமமாக வினியோகம்
செய்யும் அசாதாரண மனிதர் ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள். திருநெல்வேலி – விருதுநகர் தொடர் வண்டிகளில் டீ,
காபி வியாபாரம் செய்த 42 வயது நிரம்பிய திரு.அர்ஜுனன். தனது மகனின் மறைவால் தவித்துக் கொண்டிருந்தவருக்கு தொடர்
வண்டியில் பயணம் செய்த பெரியவர் ஒருவர் முற்பிறவி பாவம், இப்பிறவி தவறுகள் மரங்களை
நட்டால் மன்னிக்கப்படும் என்று கூற, சரியெனப்பட்டதால் தீவிரமாக சற்று வித்தியாசமான
மரவளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். விதை மூலம் மரமாக வளர பல ஆண்டுகள் ஆகும். ஆனால் 6 அடி மரக்கிளைகளை வெட்டி (போத்துமுறையில்), ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி மரங்களாக உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் திரு.அர்ஜுனன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நடப்படுவதால் 90 நாட்களிலேயே
நிழல் தரும்
மரமாக வளர்ந்து தனது பணிகளைச்
செய்கிறது. கிராம
பஞ்சாயத்துகள் மூலம் வேர் விட்ட மரபோத்துக்களை கிராமங்களுக்கு இலவசமாகக் கொடுக்கவும் தனிநபர்கள் என்றால் பயிற்சி தர தயாராக இருப்பாதாகவும் கூறுகிறார் திரு.அர்ஜுனன். இயற்கை சேவையில் ஈடுபட்டிருக்கும் இவரை பற்றி பதிவிடுவதில்
இவ்வலைப் பூ மகிழ்ச்சி கொள்வதோடு இவரை பயன்படுத்தி மேலும் தமிழகத்தை பசுமைபடுத்த உங்களை
கேட்டுக் கொள்ளுகிறது.
தொடர்புக்கு :
திரு.அர்ஜுனன்