|
அசோகமரமும் நெட்டி லிங்கமும் |
பெயர் : அசோகமரம்
தாவரவியல் பெயர் : Saraca asoca
ஆங்கிலப் பெயர் : Asoka Tree
தற்போதைய நிலை : அழிவின் விளிம்பு IUCN Status : Vulnerable (IUCN 2.3)
பாரம்பரிய இந்திய அடையாளங்களில் ஒன்று அசோகமரம். அசோகமரம் என்றவுடன் பொதுவாக
நம் நினைவிற்கு வருவது நெட்டிலிங்க மரம் தான். இராமாயன காலத்தில் சீதையை அசோக வனத்தில்
சிறை வைத்ததாக படித்திருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த உண்மையான மருத்துவ
குணமிக்க அசோகமரத்தை விட்டு நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பின்வரும்
சந்ததிகளுக்கு அடையாளப்- படுத்திவிட்டோம். விளைவு
இன்று நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பெரும்பாலானவர்கள்
நம்பிக் கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.
|
அசோகமர விதைகள் |
|
அசோகமர பூக்கள் |
பெண்களுக்கான மரம். இதன் பட்டையும் மலர்களும் நமது
மருத்துவத்தில் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு,
சூதகவலிக்கு பட்டையை கஷாயம் செய்து அருந்த குணம் உண்டு என இந்திய மருத்துவ நூல்கள்
கூறுகின்றன
|
அசோகமர காய்கள் |
|
அசோகமரம் |
இதன் தற்போதைய நிலைமை அழிந்துவரும் இனத்தில் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மரம்
சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின்
மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக ஒவ்வொரு பெண்கள் படிக்கும்
கல்விநிலையங்களில் இருக்க வேண்டிய மரம் அசோகமரம். வீடுகளிலும் வளர்க்கலாம்.
|
அசோக மர நாற்றுக்கள் |