Saturday, April 28, 2012

வெண்நுணா (நோனி) – சர்வரோக நிவாரணி


தாவரவியல் பெயர் : Morinda Citrifolia
தமிழ் பெயர்        : வெண்நுணா,
மற்ற பெயர்கள்     : இந்தியன் மல்பெரி
  மாற்று மருத்துவத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருதால் சில எளிய மருத்துவ முறைகளும், சில தாவரங்களும் தற்சமயம் பிரபலமாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வெண்நுணா என்னும் நோனி முக்கியத்துவம் பெறுகிறது. மிக நீண்ட நோய் பட்டியலை வெளியிட்டு குணம் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையும் உண்டு. இது மருந்தல்ல சத்துள்ள பானம்.   ஹவாய் மற்றும் தகத்தி தீவு போன்ற பகுதிகளின் நோனி பழச்சாறு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் இப்பழச் சாறு கிடைக்கிறது. 4 இலக்கத்தில் விலை உள்ளது. பொதுவாக கடற்கரை பகுதிகளில்தான் வரும்  என்று நம்பப்பட்ட இம்மரம் உள்நாடுகளிலும் நன்கு வளர்கிறது. சற்று துர்வாசம் தரும் இப்பழத்தை சாறு எடுப்பதற்கு பதிலாக இலையை கீரையாக உட்கொண்டாலும் பலன் உண்டு என கூறுகிறார்கள்


பரவலாக தமிழகத்தில் காணப்படும் மஞ்சநத்தி என்று அழைக்கப்படும்  Morinda Tinctoria வும் இக்குடும்பத்தைச் சார்ந்ததே ஆனால் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதிக  மருத்துவ குணம் உடையது என வெண்நுணாவை தேர்ந்தெடுத்துள்ளனர். உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையில் நாம் வெண்நுணாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

Sunday, April 22, 2012

புவி தினம் 2012


Mr. Gaylord Nelson
புவி தினத்தை ஏற்படுத்தியவர் திரு. கேலார்டு நெல்சன் ஆவார். தொடர்ந்து மூன்று முறை அமெரிக்க செனட் அவை உறுப்பினராகவும், விஸ்கான்சின் மாநிலத்தின் 35வது ஆளுநராகவும் இருந்தவர்.  அமெரிக்காவில் பல சுற்றுச் சூழல் பராமரிப்புக் கொள்கைகள் உருவெடுக்க காரணமாக இருந்தவர். அமெரிக்காவில் முதலாவது உலகப் புவி தினத்தை 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் இவர் கொண்டாடத் தொடங்கிய பிறகு  வெகு விமரிசையாக உலகெங்கும் தற்சமயம் மக்கள் அனுசரிக்கின்றனர். மரம் நடுகின்றனர், சுற்றுச்சூழல், குப்பை கூளங்கள் மறுசூழற்சி, பனிஉருகுதல்  என பிரச்சாரம் செய்கின்றனர். தமது 89 வது வயதில் திரு. கேலார்டு நெல்சன் காலமானார்.

நாட்டின் செல்வமே காற்று, தண்ணீர், மண், காடுகள்,  தாதுஉப்புக்கள், ஆறுகள், ஏரிகள், மாகடல்கள், இயற்கை அழகு, வனஉயிர்களின் உறைவிடம், உயிரனவளம் ஆகியவைதான். இவைகள்தான் முழுமையான பொருளாதாரம். இவற்றிலிருந்துதான் எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும்  கிடைக்கின்றன. இவைதான் உலகத்தின் நிலையான சொத்து. திரு.கேலார்டு நெல்சன்.

Saturday, April 21, 2012

Earth Day 2012 @ Coimbatore

  On the occasion of Earth Day, Environment Conservation Group in partnership with Sanctuary Asia is organising an environmentally themed documentary “Revealed: The Himalayan Meltdown” for general public at Perks Matriculation Higher Secondary School, Singanallur at 10 AM. This is to spread awareness about our fast changing environment and the disastrous effect it has on our lives.
This documentary, co-produced and presented by United Nations Development Programme (UNDP) examines how communities in Bangladesh, Bhutan, China, India and Nepal seek to adapt to their shrinking mountain habitat which contains 40 percent of the earth’s fresh water and is a critical source for irrigation, drinking water and energy to some 1.3 billion people. 

Date    : 22.04.2012 - Sunday
Venue : Perks Matriculation Higher Secondary School, Singanallur
Time   : 10 AM

Sunday, April 8, 2012

எளிதாக தக்காளி வளர்ப்பதில் ஒரு ‘சிறு முயற்சி’


இடப் பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்கமுடிவதில்லை. இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி. பழைய பெயிண்ட் வாளியில் தொங்கும் நிலையில் தக்காளி வளர்த்ததில் நல்ல பலனும் அனுபவமும் கிடைத்தது. உங்கள் பார்வைக்காக.