Friday, April 22, 2011

செங்குத்துத் தோட்டம் ( Vertical Garden )

நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடிக்கு  இந்த  செங்குத்துத் தோட்டம் தீர்வாக அமையும். அதே சமயம் மக்கும் கழிவுகளுக்கும் இது தீர்வாக அமையும். பல்வேறு முறைகளை பார்த்ததில் இந்த பை முறை சற்று எளிமையாக இருப்பதோடு குறைந்த செலவில் இதனை உருவாக்க முடியும். சாதாரணமாக குறைந்த உயரத்தில் செடிகளை வளர்க்கும் போது அதிக பட்சம் 4 அல்லது 5 செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். உயரம் அதிகமான இந்த பையில் பக்கங்களில் துளை செய்து குறைந்தது  20 முதல் 25 செடிகள் வளர்க்கலாம். குறிப்பாக பாலக்கீரையை சிறப்பாக வளர்க்கமுடியும். உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்கள்.
செங்குத்துத் தோட்டதிற்கு பை தயாராகிறது
இளம் நாற்றுக்கள்

நன்கு வளர்ந்த நிலையில் கீரைகள்
மேற்பகுதியில் 4 அல்லது 5 செடிகள் மட்டுமே வளர்க்க இயலும்.
செங்குத்து நிலையில் 20 முதல் 25 செடிகள் வளர்க்க இயலும்.
அறுவடை செய்யப்பட்ட கீரை



7 comments:

kuppusamy said...

இட நெருக்கடியை சமாளிக்க சிறந்த முயற்சி. மேலும் என்னென்ன செடிகள் வளர்க்கலாம் என்றும் சொல்லலாம்.நன்றி.

வின்சென்ட். said...

சார்

உங்கள் வருகைக்கு நன்றி.பாலக்கீரை எளிதாக வளர்கிறது.தக்காளி, கறிவேப்பிலை, போன்றவற்றை வளர்க்கலாம்.

rightergeorge said...

Great site. Invaluable information. One of the most unique, informative and useful blogs I have seen. Congratulations! Keep up the good work, Mr. Vincent!

rightergeorge said...

Please let me know where I could get good seeds as well as gardening accessories in Coimbatore. Thanks.

வின்சென்ட். said...

Mr. George

Thank you very much for your comments.You can buy the seeds from TNAU. Gardening accessories are available near Over bridge Gandhipuram Town bus stand.

Rathinasabapathy said...

Sir,

Your link on Vertical garden has been sent to efloraindia. group.

You may get feed back from them.

வின்சென்ட். said...

Sir

Thank you very much.