உலக மயம், தாராளமயம், தனியார் மயம் என்ற திசையில் உலக வணிகம் பயணிக்க ஆரம்பித்தவுடன் காப்புரிமை (Patent ), அறிவுசார்ந்த சொத்துரிமை (Intellectual Property Rights IPR ), பொருட்களுக்கான பூகோள பதிவுரிமை (Geographical Indications of Goods - GI) என பல உரிமைகளை தற்சமயம் பெற்றால்தான் வேளாண்மை வணிகம் செய்யமுடியும் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் உரிமை கோரவில்லை என்றால் ஏதோ ஒரு நாட்டில் இதற்கு உரிமை கோரி பெற்றுவிடுகின்றனர் (உ.தா. மஞ்சள், பாசுமதி அரிசி, உரிமை மீட்டு எடுக்கப்பட்ட வேம்பு ). இதில் தனிநபர் இழப்புடன் நாட்டிற்கும் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக விவசாயத்தில் நமது பரம்பரை ஞானம், இடத்திற்கேற்ற பதிவுரிமை, மதிப்பூட்டும் தொழில்நுட்பம், கருவிகள் போன்றவற்றிற்கு காப்புரிமை உண்டு. ஆனால் வழிகாட்டுதல் இன்மை, அதிக பொருட்செலவு போன்ற காரணங்களால் பொதுவாக நாம் வேளாண்மை சார்ந்த உரிமைகளை பெறுவதில்லை.
இது பற்றிய வழிகாட்டுதலுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் ஒரு துறையை ஏப்ரல் 2010 இல் உருவாக்கி கீழ்கண்ட சேவைகள் தருகின்றனர். தொடர்பு கொண்டு பயன் பெறுவோம்.
இது பற்றிய வழிகாட்டுதலுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் ஒரு துறையை ஏப்ரல் 2010 இல் உருவாக்கி கீழ்கண்ட சேவைகள் தருகின்றனர். தொடர்பு கொண்டு பயன் பெறுவோம்.
காப்புரிமை பெற்றுத்தருதல் (Patent )
அறிவுசார் சொத்துரிமை ஆலோசனை வழங்குதல் (IPR)
பூகோள பதிவுரிமை பெற்றுத் தருதல் (GI)
ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சி அளித்தல்
வேளாண் வணிகம் சார்ந்த ஆலோசனை வழங்குதல்
வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் அறிவுரை வழங்குதல்
தொடர்புக்கு:-
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வணிகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம்,
கோயமுத்தூர் – 641 003
தொலைபேசி : 0422- 6611360
மேலும் இது பற்றி அறிந்துள்ள கொள்ள :-
http://indiapatents.blogspot.com
http://indiapatents.blogspot.com