Thursday, September 2, 2010

மூலநோய்க்கு (Haemorrhoids ) பச்சிலை வைத்தியம்.

தவறான உணவுப் பழக்கம், இரவுப்பணி, ஓரே இடத்தில் அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற் பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தாமல் இருப்பது என்று பல காரணங்கள் இந்நோய் வருவதற்கு கூறலாம். இந்த நோய் உள்ளவர்கள் ஆரம்ப நிலையில் இதனைப் பற்றி பேச தயக்கப்பட்டு பின் நோய் முற்றியபின் அவர்களது நடையில் மாற்றம் ஏற்படும் போது பிறரின் கேலிக்கு உள்ளாவதை பார்க்கிறோம். அறுவை சிகிச்சை என்று வரும்போது நேரம் மற்றும் பணம் விரையமாவதை தவிர்க்க முடிவதில்லை. ஆரம்பநிலையில் இருப்பவர்கள் அதிக நார்சத்துள்ள காய்கறி மற்றும் பழவகைகளை உண்ண நோய்யை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
எனது வீட்டிலிருக்கும் செடி
ஆனால் ஒரு மெக்சிகோ நாட்டுத் தாவரம் ஐயப்பனா (EUPATORIUM TRIPLINERVE Vahl - AYAPANA) அறுவை சிகிச்சை நிலையில் இருப்பவரைக் கூட மிக எளிதாக குணப்படுத்துகிறது. சுமார் 5 இலைகளை காலையில் பல்சுத்தம் செய்து வெறும் வயிற்றில் இதனை உட்கொண்டு சிறிது சுடுநீர் அருந்தவேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து உணவருந்தலாம். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 10 நாட்களில் குணமாகிவிடுகிறது. இதனை நிறைய நண்பர்களுக்கு அளித்து அவர்கள் நலமுடன் இருப்பதை நான் காணுகிறேன். இதனை வளர்ப்பது மிக எளிமையானது. மொரிஷியஸ் நாட்டில் முதன்மை தாவரமாக உள்ள "ஐயப்பனா" தமிழகத்தில் இன்னும் இது பிரபலமாகவில்லை.

6 comments:

விஜய் said...

மிக உபயோகமான தகவல்

குப்புசாமி அய்யாவின் இந்த லிங்கையும் படிக்கலாம்

http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2007/08/blog-post.html

நன்றி

விஜய்

வின்சென்ட். said...

திரு. விஜய்

உங்கள் வருகைக்கு நன்றி. திரு.குப்புசாமி அய்யாவின் பதிவு வளர்ப்பு முறை பற்றியெல்லாம் விரிவாக இருக்கும்.

Unknown said...

என் நண்பருக்கு இந்த வியாதி உள்ளது. சில சமயங்களில் ரொம்பவும் சிரமப்படுகிறார். இந்த பச்சிலை எங்கே கிடைக்கும் என்பதை சொன்னீர்களானால் மிகவும் உபயௌகமாக இருக்கும்.
என்னுடைய mail id arun@nestfashions.com.
pls help me.

suneel krishnan said...

நல்ல பகிர்வு , கேள்வி பட்டது இல்லை ,
இப்போது மூலதிர்காக நம் சப்பாத்தி கள்ளி(opuntia) லிருந்து ஒரு மருந்து சந்தைக்கு வந்து உள்ளது நன்றாகவே உள்ளது .product name-pileum mfd- mmc health care india.

வின்சென்ட். said...

திரு. வெண்புரவி

உங்கள் வருகைக்கு நன்றி. செடிகள் கோவை வனமரபியல் கோட்ட அலுவலகத்தில் உள்ளது. என்னிடத்திலும் உள்ளது.

வின்சென்ட். said...

Dr.சுனில் கிருஷ்ணன்

உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.