Thursday, October 16, 2008

“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்”-- திரு. ஜான் பெர்கின்ஸ்.

சில மாதங்களுக்கு முன் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்” (Confessions of an Economic Hit man By John Perkins. Year 2004) என்ற நூலில் திரு. ஜான் பெர்கின்ஸ் அவர்களின் வாக்கு மூலத்தை படித்தபோது தற்போது நடக்கும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு இவ்வளவு விரைவாக உலகயே உலுக்கியெடுக்கும் என்று நான் எண்ணவில்லை. நியுயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை நூலாக 70 வாரங்கள் (Newyork Times Bestsellers ) இருந்த இந்நூல் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்களையும், எழுதாமலிருக்க பணம் தரப்படுவதையும் மீறி சுற்றுச்சுழல், உலக அமைதிக்காக எழுதப்பட்ட நூலாக தோன்றுகிறது..

வெள்ளை மாளிகையின் கூரைகளில் திரு.கார்ட்டர் பதிக்கச் செய்திருந்த சூரிய ஒளித் தகடுகளை முதல் வேலையாக அகற்ற செய்த திரு. ரீகன் (பக்கம் 219), கியுட்டோ ஒப்பந்தத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒத்து வராது என்று கையெழுத்திட மறுத்த திரு.புஷ் போன்றவர்களின் நிலைப்பாடுகளையும் கூறியுள்ளார்.

இறுதியாக அனுபவத்தின் மூலம் நமக்குப் பயன்படும் ஒருபட்டியலையும் தருகிறார். (பக்கம் 298)

1.பெட்ரோல் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
2.ஷாப்பிங் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எழும்போது அதற்கு பதிலாக ஒரு புத்தகம் படியுங்கள் அல்லது தியானம் செய்யுங்கள்.
3.உங்கள் வீட்டின் பரப்பளவை, ஆடைகளை, அலமாரியை, அலுவலகத்தை முடிந்த வரை சுருக்கிக் கொள்ளுங்கள்.
4.பாவப்பட்ட மக்களை அடிமைகள் போல பிழிந்தெடுக்கும் அல்லது சுற்றுச்சுழலை நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.
5.தடையற்ற வணிக ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவியுங்கள். என இப்பட்டியல் நீண்டு செல்கிறது.

படியுங்கள் நல்ல இயற்கைச் சுழலை, சுரண்டலில்லாச் சமுதாயத்தை வரும் தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோம்.

9 comments:

வனம் said...

வணக்கம்

புத்தகம் எங்கு கிடைக்கும் என தெறியப்படுத்தினால் மிக உதவியாக இருக்கும்

குறைந்தபட்சம் பதிப்பகத்தின் பெயர்

நன்றி

புதுகை.அப்துல்லா said...

அண்ணே இந்தப் புத்தகத்தை அதன் ஆங்கில மூலத்தில் நான் வந்தவுடனேயே படித்து விட்டேன். ஆனால் இன்றும் நான் மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகம் இது. ஓரிரு நாட்களுக்கு முன் பதிவர் துக்ளக் மகேஷ் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது கூட இதைப் படிக்கச் சொல்லி அவரிடம் சொன்னேன். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

புதுகை.அப்துல்லா said...

அப்படியே சாதத் ஹசன் மன்றோவின் புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

வின்சென்ட். said...

திரு.இராஜராஜன்

உங்கள் வருகைக்கு நன்றி.எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது.

பதிப்பகத்தின் பெயர்.

விடியல் பதிப்பகம்
11, பெரியார் நகர்
மசக்காளிபாளையம் (வடக்கு )
கோயமுத்தூர்- 641 015
தொலைபேசி : 0422-2576772
Email : sivavitiyal@yahoo.co.in

வின்சென்ட். said...

திரு.புதுகை.அப்துல்லா

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது போல் திரும்ப திரும்ப படிக்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இயற்கையை சுரண்டாமல் மனித இனம் எல்லா உயிரனங்களையும் அரவணைத்து சென்றால் வளர்ச்சி இல்லையேல் வீழ்ச்சி.

சாதத் ஹசன் மன்றோவின் என்ன புத்தகம் என்று கூறவும்.

Robin said...

குறைந்த தூரம் பயணம் செய்ய கூட காரில் செல்லும் பழக்கம் குறைக்கப் படவேண்டும். சைக்கிளில் செல்லும் பழக்கம் அதிகரிக்கவேண்டும். AC வசதி உள்ள பேருந்துகளும் அதிகரிக்கப்பட்டு தனியார் வாகனங்களில் செல்லுவதைவிட பேருந்துகளில் செல்லும் பழக்கம் வரவேண்டும். இதனால் பெட்ரோல் டீசல் பயன்பாட்டை மட்டுமல்லாமல் மாசு ஏற்படுவதையும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கமுடியும். தேவை: விழிப்புணர்வு.

வின்சென்ட். said...

திரு. ராபின்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. எனது பழைய http://maravalam.blogspot.com/2007/06/20_24.html என்ற பதிவை பார்க்கவும்.

Vetirmagal said...

Sir,

I follow your blog with interest and concern. I wish that more awareness is created about the environment and global warming.

I sometimes wonder,

There has been a breakthrough awreness about AIDS, condoms, and now about Voting rights ( Jago India ).

Why not about the environment?.

வின்சென்ட். said...

திருமதி. வெற்றிமகள்

உங்கள் வருகைக்கும் தொடர்ந்து படித்து வருவதற்கும் நன்றி. ஊடகங்கள் விலைமிக்க பொருட்களுக்கு விளம்பரம் தருவதிலும், கேளிக்கைகளுக்கும் அதிக இடத்தையும், நேரத்தையும் ஒதுக்குகின்றன. வாழ்கையின் ஆதாரமான சுற்றுசுழலுக்கு கொஞ்சம் கவனத்தை திருப்பினால் நல்லது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய இயலும். இன்னும் நிறைய நிறைய வலைப் பூக்கள் இது பற்றி வரவேண்டும்.