Monday, October 15, 2007

இயற்கையும் செல்வந்தனும்

செல்வந்தனே நீ ஆயிரம் பேருக்கு எஜமானாய் இருக்கலாம்
ஈ, எறும்பு ஒன்றுக்காவது நீ எஜமான் ஆகமுடியுமா?

தெருவென்ன ஊரே உன்னை சீமான் என்று சொல்லாம்
சிட்டுக் குருவியொன்று உனக்கு ஆமாம் போடுமா?

உன் பத்து ரூபாய் தாளுக்கு பத்துப் பேர் வரலாம்
நீ பத்தாயிரம் நீட்டு ஒரு பட்டாம் பூச்சி வருமா ?

உட்கார்ந்து இருப்பது உன் தோட்டத்துப் பூவில் என்றாலும்
உன் வருகையைக் கண்டு வண்டுதான் எழுந்திருக்குமா?

தேன் கூட்டைத் தொடு..செல்வந்தனாயிற்றே என்று
கொடுக்கால் அது உன்னை கும்பிட்டு நகருமா?

இத்தனையும் நடந்தால் பணக்காரனே!உன் பணம் பத்தென்ன?
பதினொன்றும் செய்யுமென்று சத்தியம் செய்யலாம்.

ஆனால் இயற்கை முன் அனைவரும் சமமென்று
உணர்வது நீ எப்போது ?அதனை காப்பது எப்போது?

ஒரு கம்பெனி மாத இதழிலிருந்து
(கடைசி இரு வரிகள்தவிர)எடுக்கப்பட்டது.

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக அருமையான வார்த்தைகள். மிக உண்மையானதும் கூட.. எங்கிருந்து கிடைத்ததுன்னு தெரியாம நான் கூட ஒரு விசய்த்தை என் பக்கத்தில் கோட் பண்ணி வச்சிருக்கேன்..
"தப்புக்கணக்கிட்டுத் தானொன் றெதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கைவிதி? ஒழுங்கமைப்புக் கேற்றபடி அப்போதைக் கப்போதே அளிக்கும் சரிவிளைவு. எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதைஉணரார்.-மாக்கோலம் "
எதை நினைத்து எழுதினாரோ தெரியாது என்னவோ பிடிச்சிருந்தது .

kuppusamy said...

பணத்தால் இயற்கையை உண்டாக்கினால் அதனை ரசிக்கலாம் பொருமையும் நல்ல மனமும் வேண்டும். நன்றி வின்ஸென்ட்.

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி,திரு. குப்புச்சாமி,

தங்களின் மேலான கருத்துக்களுக்கும், மேற்கோள்களுக்கும் மிக்க நன்றி.