Tuesday, September 25, 2007

மழைநீர் சேமிப்பு- புகைபடங்கள்

வட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நேரத்தில் விவசாய நிலங்களிலும் வீடுகளிலும் எவ்வாறு மழைநீரை சேமிக்கலாம் என்ற புகைபடங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நிலங்களின் ஓரத்தில் செவ்வக வடிவில் குழி வெட்டுதல்.

நிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்தல்.

நிலங்களின் ஓரத்தில் பண்ணை குட்டை அமைத்தல்


நிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்து மண் சரிவு ஏற்படாமல் வெட்டிவேர் சுற்றிலும் நட்டுதல்.
நிலங்களின் நடுவில் நீளமாக குழி வெட்டுதல்



நிலங்களின் நடுவில் நடுவில் சிறு சிறு குழிகள் வெட்டுதல். 1 சதுர கன அடி (1 x 1 x 1 ) குழி சுமார் 28 லிட்டர் நீரை தக்க வைக்கும்.


சிறு ஓடைகளில் கற்களைக்கொண்டு தடுப்பு அணை அமைத்தல்.


குட்டைகளின் ஓரத்தில் மரங்கள் நடுதல்.

வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் சேமித்தல்

மிக சிறிய குளங்கள் அமைத்து அழகு செய்தல்.

14 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதெல்லாம் உங்க ஊருல செய்ததா...நீங்களே எடுத்த புகைப்படங்கள் போலயே... அதுவும் அந்த கடைசி குளம் ரொம்ப அழகு...

வவ்வால் said...

படங்களின் மூலமாகவே மழை நீர் சேகரிப்பினை விளக்கிவிட்டீர்கள். அருமை!

kuppusamy said...

தற்போது கேரளாவில் பெய்து வரும் மழைக்குத் தகுந்த புகைப்படங்கள். நன்றி.

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி,திரு.வவ்வால், திரு.குப்புச்சாமி அவர்களுக்கு

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.முதல் 3 படங்கள் இரவல். கடைசி 3 மித்ரடாம் என்ற இடத்தில் எடுத்தது. மற்றவை நண்பர்கள் மற்றும் எனது பண்ணையில் எடுக்கப்பட்டது.

seethag said...

வின்செண்ட் அவர்களுக்கு,
உங்கள் பதிவு மிகவும் பயனுடயது.
இதன் தொடர்பாக 'india together'என்ற கணினி பத்திரிக்கை படித்தீர்களா?அதில் 'bio gas' ,பற்றியும் எழுதியதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வின்சென்ட். said...

திருமதி.சீதா அவர்களுக்கு,

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Arti Bio gas சாணம் இன்றி சமயலறை கழிவுகள் கொண்டு வாயு எடுப்பதால் கீழ் கண்ட நன்மைகள் உண்டு.
1. நகரப் புறங்களுக்கு ஏற்றது.
2. மாடியில் கூட அமைக்கலாம் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
3. அமைப்பதற்கான செலவு சாண எரி வாயுவைக் காட்டிலும் குறைவு.
4. சமயலறை கழிவுகள் உபயோகிப்பதால் எரி வாயுவாகவும், பின் கழிவுகள் உரமாக மாற்றவும் பயன்படுகிறது.ஒரு கல்லில் இரு மாங்காய்.
5. நகராட்சிகளில் துப்பரவு பணி பழு குறைகிறது.
6. சுற்றுச் சுழல் மாசுபாடு குறைகிறது.
7. பெட்ரோலிய வாயுவை நம்புவது குறைவதால் சுய சார்பு வாழ்கை தன்நம்பிக்கையை தருகிறது. பெட்ரோலிய தட்டுபாடு காலங்களில் கவலை தேவையில்லை.
8. நாட்டிற்கு அந்நியச் செலவாணி மிச்சமாகிறது. நமக்கும் பணம் மிச்சமாகிறது.

வடுவூர் குமார் said...

பயோ கேஸ் பற்றிய தகவல்கள் அருமை.
நீர் சேமிப்பு முறையைகளை பார்க்கும் போது கூகிள் எர்த்தில் ஒரு முறை ஒரு ஊரில்(அன்னவாசல்) வயலுக்கு ஒரு குளம் என்ற அமைப்பை பார்த்தேன்.என் பதிவில் அதை போட்டிருந்தேன் இங்கு.

வின்சென்ட். said...

திரு.வடுவூர் குமார்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.Arti பயோ கேஸ் உண்மையில் இன்றைய காலத்திற்கு அவசியம் தேவையான ஒன்று.

Anonymous said...

its really beautiful

வின்சென்ட். said...

திரு. அனானி

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

balaji said...

nice to see a new website related to agro

வின்சென்ட். said...

திரு. பாலாஜி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

NARAYANASWAMY,Propaganda Secy, Coimbatore Dist Herbal & Tree growers' Assn. said...

Vincent useful information in the context coming rainy season,you know, according to the statement given by Rain Water engineer Mr K Varadarajan:if a 1000 sq ft terrace receives say 25mm (1 inch)rainfall(water)one can store nearly 2550 litres of water.on a average tamil nadu gets atleast 800mm annual rainfall.I want our citizen to think and tell how much water one can store in their house/factory site?

வின்சென்ட். said...

Dear Sri.NARAYANASWAMY

Thank you very much for your comments. I add the podcost of Sri.K Varadarajan