Saturday, November 22, 2008

உலக வெட்டிவேர் அமைப்பின் 5 சிறந்த இ-நூல்கள் இலவசம்.


உலக வெட்டிவேர் அமைப்பு தனது அரிய நூல்களை இ-நூல்களாக இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் வண்ணப் படங்களுடன் கூடிய அந்நூல்களை தரவிறக்கம் செய்ய கீழ்கண்ட தொடுப்புக்கள் உதவியாக இருக்கும். 5 நூல்கள் தற்சமயம் உள்ளது. பயன்படுத்தி மேன்மை பெறுவோம்.

நீரின் தன்மையை தூய்மையாக்கி மேம்படுத்த வெட்டிவேர்.
http://www.esnips.com/doc/b8c3c54d-d973-4f7b-bb7c-fd464138af8b/Vetiver-System-for-Improvement-of-Water-Quality

வெட்டிவேர் தொழில்நுட்பம் பற்றி அறிய.
http://www.esnips.com/doc/9057fcb9-75b5-4af1-b9a9-793da6d087c9/Vetiver-System-Applications---A-Technical-Reference-Manual

வெட்டிவேர் மூலம் நிலத்தையும் நீரையும் பாதுகாத்தல்.
http://www.esnips.com/doc/635709cc-a5fa-4241-ac67-1b48c5c330a0/Vetiver-System-for-Soil-and-Water-Conservation

வெட்டிவேர் மூலம் சரிவுகளை ஸ்திரப்படுத்த.
http://www.esnips.com/doc/2dff17e4-a958-4c7d-b383-5d3dba2a4307/Vetiver-System-for-Slope-Stabilization

விவசாயத்தில் வெட்டிவேர்.
http://www.esnips.com/doc/79a4cc86-4d6e-4a74-8b5e-b44cc9078b45/Vetiver-System-for-Agriculture

Friday, November 14, 2008

உலக சர்க்கரை நோய் தினம் மற்றும் நோயை குறைக்க உதவும் தாவரங்கள்.

டாக்டர். பிரடரிக் கிரண்ட் பாண்டிங் என்ற கனடா நாட்டு மருத்துவர் தன் சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து இன்சுலின் கண்டுபிடித்தார். அவர் பிறந்த தினமான நவம்பர் 14 ஐ உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடித்து நிறைய கண்காட்சிகளும், விளக்கக் கூட்டங்களும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பதாகவும், 2025 ஆண்டு அது 60 மில்லியனை தொடும் என கூறுகிறார்கள்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்.
அதிக தாகம் (Excessive thirst)
அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent urination)
அதிக பசி (Increased hunger)
எடை குறைதல் (Weight loss)
உடற்சோர்வு (Tiredness)
ஆர்வம், கவனம் குறைதல் (Lack of interest and concentration)
பார்வை குறைபாடுகள் (Blurred vision) போன்றவை.

நோயை குறைப்பதற்கான வழிகள்.
உணவுக் கட்டுப்பாடு.
யோகா, உடற்பயிற்சி.
மருந்து.

இந்த நோய் முற்ற கால்களில் புண்கள் (சமயங்களில் காலை எடுக்கவேண்டிவரும்.), கண்நோய், மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.


நோயைக் குறைக்க உதவும் சில தாவரங்கள் இன்சுலின் செடி
இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது.. இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் அதிகம் உபயோகிக்கின்றனர்.
கள்ளிமுடையான்.
கள்ளிமுடையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் மெலிவதுடன் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துகிறது. வருங்காலத்தில் இதற்கு நல்ல மதிப்பு உண்டு.
சர்க்கரைக்கொல்லி
கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்பு சுவை தெரிவதில்லை. இலையை காய வைத்து பொடியாக்கி இதனை தினமும் அருந்துகின்றனர். கொடிவகையை சார்ந்தது.
சிறியாநங்கை
கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சிலர் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.
ஸ்டீவியா என்னும் சீனித்துளசி.
தென்அமெரிக்காவை தாயகமாக் கொண்ட இனிப்புச் சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை காய வைத்து பொடியாக்கி டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்கு பதிலாக இதனை உபயோகிக்கலாம். பூஜ்யம் கலோரி (Zero Calorie) மதிப்புடையது. எனவே இனிப்புடன் அருந்த வேண்டுமெனில் தாராளமாக இதனை உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தமிழகத்தில் நன்கு வளர்கிறது.


இதனை தவிர்த்து காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாரு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய சர்க்கரை நோயை குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.


முக்கிய செய்தி மேற்கண்ட அனைத்து தாவரங்களையும் நாம் வீடுகளில் வளர்க்கலாம்.
நன்றி: முதல் இரண்டு படங்கள் வலைதளம்

Tuesday, November 11, 2008

கடவுளும் மரமும்

"கடவுள் மரங்களைப் படைத்தார். வெள்ளம், வறட்சி, நோய் எல்லாவற்றிடமிருந்தும் நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்தார். ஆனல் அவரால் முட்டாள்களிடமிருந்து மட்டும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!'' - ஜான் மியூர்

God has cared for these Trees, saved them from drought, diseases, avalanches and a thousand tempests and floods. But cannot save them from fools. - John Muir.

இப்படங்களைப் பார்க்கும் போது திரு.ஜான் மியூர் சொன்னது சரியென்று தோன்றுகிறது. சுமார் 5 நிமிடங்களில் மரம் தனது நிலையை இழந்தது.






ஆனால் இக்குழந்தைகளின் எதிர்காலம் ?????? யாரிடம் ?????