|
நெற்பவளச் செடி |
|
ஜெபமாலையும் இயற்கையான துவாரமும் |
|
நெற்பவளம் |
பண்டைய உலகத்தில் இயற்கை சார்ந்த பொருட்கள் அணிகலன்களாகவும் ஆபரணங்களாகவும் பயன்படுத்தபட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நெற்பவளம் என்னும் தானியம் உணவாகவும் ஆபரணமாகவும் பயன்படுத்தபட்டுள்ளது நாகரீகம் வளர ஆபரணங்கள் உலோகத்திற்கு மாறிய பின் “தங்கம்” இன்று அரசாட்சி செய்கிறது. தங்கத்தின் விலையும் உயர உயர நெற்பவளம் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது. ஆன்மீகத்தில் இதன் பங்கு கணிசமாகவுள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான "யோபுவின் கண்ணீர்" (Job’s Tear ) என்பது கூட பைபிளில் யோபு என்ற செல்வந்தர் இறைபக்தியின் காரணமாக எல்லாவற்றையும் இழந்தபின் கூட பக்தியுடன் இருந்ததால் அவர் அதிகம் கண்ணீர் விட வேண்டியிருந்தது. அவரை கனப்படுத்தும் முகமாக “யோபுவின் கண்ணீர்” என்றழைக்கின்றனர். இன்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஜெபமாலையாக நெற்பவளத்தையே உபயோகிக்கின்றனர். காலபோக்கில் நெற்பவளம் கிடைப்பது அரிதானதால் பிளாஸ்டிக் மணிகள் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.
|
பலவித ஆபரணங்கள் |
|
“அன்னை தெரசா” அவர்கள் நெற்பவிள ஜெபமாலையுடன். |
|
நெற்பவிள காதணீ. |
புல் வகை குடும்பத்தை சார்ந்த இப்பயிர் வெப்பமண்டலத்தைச் சார்ந்த கிழக்காசிய நாடுகளை தாயகமாகமாகக் கொண்டது. ஆண்டுப் பயிரான இதற்கு குறைந்த பட்ச நீர் போதுமானது. நன்கு நீர் கிடைக்கும் இடங்களில் 6 அடி உயரம் வளர்ந்து நிறைய மணிகளைத் தரும் .வடமாநிலங்களில் “வைஜயந்தி” என்று அழைக்கின்றனர். மருத்துவ குணம் கொண்ட இதனை தானியமாகவும் உட்கொள்ளலாம் அதை சமயம் கடினமான, பளபளக்கும், நடுவில் துவாரமுள்ள இம்மணியை கோர்த்து ஆபரணமாக அணிய உடல் ஆரோக்கியம் பெறும். மாலையாகவும் வளையல், காதணி என்று பல்வேறு அணிகலன்கள் செய்யப்படுகின்றன. “அன்னை தெரசா”அவர்கள் நெற்பவளத்தால் செய்யப்பட்ட ஜெபமாலையை உபயோகித்தார்கள் என்பது கூடுதல் தகவல். இந்து சமயத்திலும் இதனை மாலையாக அணிகிறார்கள். பௌத்த, முஸ்லிம் சமயங்களிலும் இதற்கு சிறப்பான இடமுண்டு. பெண்கள் சுய உதவிக்குழுகள் வீட்டுத்தோட்டதில் வளர்த்து வியாபார ரீதியாக இதனை ஏற்றுமதி கூட செய்ய வாய்புள்ளது.