Tuesday, December 31, 2013

மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் இயற்கை எய்தினார்.

மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் 30-12-2013 அன்று பட்டுக்கோட்டை  அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்)  மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.



இயற்கை வேளாண்மை, சூழல் பாதுகாப்பு,  நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், பசுமை புரட்சி என ஒன்றிற்கொன்று தொடர்புடைய பல்வேறு தளங்களில் விமர்சனங்களையும் அதேசமயம்  ஆக்கபூர்வமான மாற்றுகளையும் பரிந்துரைத்தவர். எளிய மக்களின் விடிவெள்ளி. இவ்வலைப் பூ ஐயாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மா சாந்தியடைய இறைவனையும் வேண்டிக் கொள்கிறது.

நன்றி :  Rajini Babu

Thursday, December 26, 2013

சென்னை / கோவை நகர வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்கு ஓர் இனிய தகவல்



சென்னை / கோவை நகர வீட்டுத் தோட்ட ஆர்வலர்கள் தங்களின் காய்கறி தேவைகளை ஓரளவிற்கு தாங்களே உற்பத்தி செய்ய தேவையான பொருட்களை 50% மானிய விலையில் தர தமிழக அரசு முன் வந்துள்ளது. நீங்களே செய்து பாருங்கள்  Do it yourself என்ற பெயரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் இத்திட்டம் 16 ச.மீ பரப்பளவில் செய்ய  பொருட்களை பயனாளிகளுக்கு அளிக்கவுள்ளனர். 

பொருட்களின் பட்டியல்

செயல்முறை விளக்கக் கையேட்டைக் காண கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.




விண்ணப்பம் ஆன்லைனில் அனுப்ப கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.



தொடர்பிற்கு.....
 உங்களின் வீட்டுத் தோட்டம் சிறப்பாக அமைய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

ஆதாரம் மற்றும் நன்றி : http://tnhorticulture.tn.gov.in/