Saturday, May 14, 2011

“ஒற்றை வைக்கோல் புரட்சி” (ஆங்கிலம்) இலவச மின்நூல்


உலக விவசாயத்தை திருப்பி போட்ட நூல் என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த நூற்றாண்டின் இணையற்ற இயற்கை விவசாயி திரு. மாசானபு புகோக்கா அவர்கள் எழுதிய  The one-Straw Revolution  (ஒற்றை வைக்கோல் புரட்சி)  நூல் Pdf  வடிவில் கீழ்கண்ட தொடர்பில் கிடைக்கிறது.

http://www.arvindguptatoys.com/arvindgupta//onestraw.pdf

 
ஒற்றை வைக்கோல் புரட்சி க்கு நேர் எதிராக இந்தியாவில் நடந்த நெல் இரகக் கொள்ளை பற்றியும் தவறாமல் படியுங்கள். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது.

The Great Gene Robbery  by Claude Alvares

Dr. Richharia's story - Crushed, but not defeated

 The one-Straw Revolution பற்றிய எனது பழைய பதிவுக்கான தொடர்பு:


முகநூலில் தகவல் அளித்த வழக்கறிஞர் திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு நன்றி.

Friday, May 6, 2011

மெக்சிகன் கொத்தமல்லி (அ) தாய்லாந்து கொத்துமல்லி (Culantro)

மெக்சிகன் கொத்தமல்லி (அ) தாய்லாந்து கொத்துமல்லி (Culantro)



நாம் உபயோகிக்கும் கொத்தமல்லி (cilantro)
இயற்கையின் படைப்புகள் எல்லாமே அதிசயமானவைகள். சில நேரங்களில் இரு வேறு பகுதிகளில் உருவம், வளர்பியல், வளரும் காலம் இவைகளில் முற்றிலுமாக வேறுபட்டு ஆனால் மணம், குணம், உபயோகத்தில் சில தாவரங்கள் ஓன்றுபட்டிருப்பது  நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். நாம் உபயோகிக்கும் கொத்தமல்லி இலையும் (cilantro), மேற்கிந்திய தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட மெக்சிகன் கொத்தமல்லி (அ) தாய்லாந்து கொத்துமல்லி (Culantro) இதற்கு சிறந்த உதாரணம். எனது அனுபவத்தில் வீட்டுத் தோட்டதிற்கு இந்த தாய்லாந்து கொத்தமல்லி ஏற்றதாக உள்ளது. மணம் நமது கொத்துமல்லியைக் காட்டிலும் 2  (அ) 3 மடங்கு அதிகம். இலைகள் தடிமனாக நீண்டு இருக்கும். இலைகளின் ஓரம்  இரம்பம் போன்றிருப்பதும், 
நிழல் பகுதியில் சிறப்பாக பூத்துள்ளது

பூக்களைச் சுற்றி இலைபோன்ற அமைப்பு முட்களாக மாறி பாதுகாக்கின்றது
 பூக்கும் காலத்தில் பூவை சுற்றி இலைகள் முட்கள் போன்று இருப்பதால் பாதுகாப்பது எளிது. 6 மாதங்களுக்கு மேல் நாம் இலைகளைப் பறிக்கலாம். பூத்து முடிந்த பின் சில மாதங்களில் விதைகள் சிதறி இளஞ்செடிகள் தானாகவே  தாய் செடியைச் சுற்றி வளரும். தாய் செடியிலிருந்து தோன்றும் இளம் செடிகளையும் பிரித்து வளர்க்கலாம்.

நேரடியான சூரிய ஒளியில் இலைகள் சிறுத்துக் காணப்படும். நிழல் பகுதியில்  இலைகள் நல்ல வளர்ச்சியுடன் அதிக வாசனையுடன் இருக்கிறது. நமது நாட்டு கொத்தமல்லி போன்று விதை மூலம் எளிதாக நாற்று உற்பத்தி இல்லை என்பதால் பிரபலமாகவில்லை என்று எண்ணுகிறேன். அவசியம் வீட்டுத் தோட்டதில் இருக்க வேண்டிய பயனுள்ள தாவரம்.