
வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை விலை விபரம்,
பொருட்களின் வரத்து (Quantity ) ,
குறிப்பிட்ட பயிருக்கான முன்னறிவிப்புக்கள் ,
ஏற்றுமதி பற்றிய விபரம் தருகிறார்கள்.
நாட்டின் பல்வேறு சந்தைகளின் விலை விபரம் தமிழில் கிடைப்பது இதன் சிறப்பு.பயனுள்ள இந்த வலைதளம் உழவர் பெருமக்களால் சரியாக பயன்படுத்தப்பட்டால் விவசாய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும். விலை விபரம் தெரிவதால் இடைதரகர்களின் தொல்லை குறைகிறது. அதே நேரத்தில் நுகர்வோரும் இதனை அறிந்து கொள்வது நல்லது. தமிழக மக்கள் தொகையுடன் வலைதளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது வருகை மிக மிக குறைவு. மாறிவரும் வியாபார சூழலில் இதுபோன்ற வலைதளங்கள் இன்றியமையாதவை.
அனைவருக்கும் இனிய, வளமான பொங்கல் நல்வாழ்த்துகள்.