Tuesday, September 25, 2007

மழைநீர் சேமிப்பு- புகைபடங்கள்

வட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நேரத்தில் விவசாய நிலங்களிலும் வீடுகளிலும் எவ்வாறு மழைநீரை சேமிக்கலாம் என்ற புகைபடங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நிலங்களின் ஓரத்தில் செவ்வக வடிவில் குழி வெட்டுதல்.

நிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்தல்.

நிலங்களின் ஓரத்தில் பண்ணை குட்டை அமைத்தல்


நிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்து மண் சரிவு ஏற்படாமல் வெட்டிவேர் சுற்றிலும் நட்டுதல்.
நிலங்களின் நடுவில் நீளமாக குழி வெட்டுதல்



நிலங்களின் நடுவில் நடுவில் சிறு சிறு குழிகள் வெட்டுதல். 1 சதுர கன அடி (1 x 1 x 1 ) குழி சுமார் 28 லிட்டர் நீரை தக்க வைக்கும்.


சிறு ஓடைகளில் கற்களைக்கொண்டு தடுப்பு அணை அமைத்தல்.


குட்டைகளின் ஓரத்தில் மரங்கள் நடுதல்.

வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் சேமித்தல்

மிக சிறிய குளங்கள் அமைத்து அழகு செய்தல்.

Saturday, September 15, 2007

"நீர் மேலாண்மை"க்கு ஆஷ்டென் விருது

குறைந்த செலவில் மிகுந்த பயன் தரும் பம்புகள்,சொட்டு நீர் பாசன அமைப்புக்கள், மற்றும் எளிய தண்ணீர் தொட்டி என சுமார் 450,000 ஏழை விவசாய்களின் அன்றாட விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வாழ்கையை மேம்படுத்தியதற்காக புகழ் மிக்க ஆஷ்டென் விருது இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவர்களின் சிறப்பு "நீர் மேலாண்மை".
Mr Amitabha Sadangi of International development enterprises, India. with HRH Prince Charles.

புகழ் மிக்க ஆஷ்டென் 2006 விருது பெற்ற Idei (International
development enterprises India.) என்ற அமைப்பு பற்றி ஆஷ்டென்
விருது குழு தந்த அறிக்கை.

"commercialising a simple, sustainable technology which helps poor farmers achieve massive improvements in yield and income".

பம்புகள்.

குறைந்த ஆழத்திலுள்ள நீரை எளிதாக மேலேற்ற கால்களினால் இயங்கும் பம்புகள்.இவை சுமார் 8அடி - 20அடி ஆழத்திலிருந்து நீரை எளிதாக மேலே கொண்டுவர உதவும். ஆண்,பெண் இருபாலரும் இயக்கலாம். விட்டம்(Diameter) 3.5அங்குலம், 5அங்குலம் அளவுகளில் மணிக்கு சுமார் 3000லி-6000லி நீர் வரை விட்ட அளவு, நீரின் ஆழத்தைப் பொறுத்து எடுக்கலாம்.



சொட்டு நீர் பாசனம்.

பொதுவாக ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம் ரூ.25000/= மேல் செலவாகும்.ஆனால் இவர்களது குழாய்கள் 125mm மற்றும் 250mm அளவுகளில் இருப்பதால் செலவு ஏக்கருக்கு சுமார் ரூ.3700 - ரூ 8000 வரை mm,இடம்,அமைப்பு பொறுத்து மாறும்.இது தவிர வீட்டுத் தோட்டத்திற்கு (kitchen garden) தேவையான சொட்டு நீர் அமைப்புக்கள் 3மாடல்களில் கிடைக்கின்றன.



rum Kit) 200 செடிகளுக்கு
தண்ணீர் தொட்டி.

எளிதாக மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய தண்ணீர் தொட்டி.3 அளவுகளில் 200லி, 5000லி, 10,000லி கிடைக்கின்றது.எளிதாக எடுத்து செல்லக்கூடிய 5 அடுக்குகள்(Layers) கொண்டது இத்தொட்டிகள்.விலை லிட்டருக்கு 40 பைசா வரை ஆகும் என்கிறார்கள். மழைநீர் சேமிக்கவும்,மலை பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றது.













மேலும் அறிய அவர்களது வலைதளம். http://www.ide-india.org/ பார்க்கவும்.
இறுதியாக இந்த வலைப் பதிவை படிக்கும் அனபர்களுக்கு, நமது கிராமங்கள் தன்னிறைவு பெற இந்த எளிய தொழில் நுட்பங்களை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, September 14, 2007

அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்கள் 2007.

இயற்கை ஆயிரமாயிரம் தாவரங்களையும்,உயிரினங்களையும்,படைத்து பாதுகாத்து வந்துள்ளது. ஆனால் கடந்த இரு நூற்றாண்டுகளாக மனிதன் தன் அறிவினாலும், ஆராய்ச்சிகளாலும், துணிச்சலான பயணங்களாலும் தொழிற்புரட்சியை தொடக்கி தன் அடங்கா ஆசைகளுக்கு வித்திட்டு கண்டங்களை கண்டுபிடித்து தங்களுக்கள் சண்டையிட்டு மடிந்தான். பின்பு சட்டங்களையும், திட்டங்களையும் இட்டு தன் அழிவை குறைத்து வியாபார நோக்கில் வேட்டையாடுதல், மரம் வெட்டுதல்,வேளாண்மைக்கு காடுகளை அழித்தல், சாலை, சுரங்கம், அணைகள் அமைத்தல் என இயற்கையை சிதைத்தான். விளைவு ? எண்ணற்ற உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் உயிரினங்களை IUCN என்ற அமைப்பு கண்டுபிடித்து 2007 ஆண்டிற்கான அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களை (Red list)புகைபடமாக, வீடியோவாக வெளியிட்டுள்ளது.அவற்றின் வீடியோ காட்சி கீழேயுள்ளது. அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நாம் அவைகளை பாதுகாக்க வேண்டும்.

வீடியோ காட்சி arkive .org என்ற அமைப்பிற்கு சொந்தமானது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மக்களுக்கு தெரியவேண்டுமென்பதற்காக பதிவிலிடுகிறேன்

Sunday, September 9, 2007

புற்று நோயும், கோதுமை புல் சாறும்.

மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, பயிற்சி, கிரியை என சில சாதாரண காரியங்களில் நாம் கவனம் செலுத்தினாலே 75% நோய்களை நாம் தவிர்க்க முடியும். இவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் வர காரணமாகிறோம்.இவைகளில் அதிகமாக தாக்குவதும் அதிக பணச் செலவு வைப்பதும் இரு நோய்கள். 1. இருதய நோய் 2. புற்று நோய்.

புற்று நோய் :

இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும்.தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள்.நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது. இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும்.இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே. தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.

இதனை தவிர வெண்நுணா (Morinda citrifolia ) என்ற தாவரத்தின்
பழச்சாறும் மிகவும் சிறந்தது.இதனை நோனி (Noni)என்ற பெயரில் விற்பனை
செய்கிறார்கள்.இந்திய தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம்.பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன.


வீடியோ காட்சி காண Click

ஆங்கில கட்டுரை படிக்க Click

மேலும் அறிய கூகிள் தேடுதளத்தை பயன்படுத்துங்கள்.


புற்று நோயை எதிர்க்கும் மேலும் சில உணவுகள் பற்றிய விபரங்களை கீழேயுள்ள வலைதளம் விரிவாக கூறுகிறது. படித்து பயன்பெறுவீர்.

http://www.cancure.org/cancer_fighting_foods.htm

பதிவர் திருமதி.அனுராதா அவர்களின் உறுதியான போராட்டத்திற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.அவர் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.