Sunday, September 18, 2011

இன்று உலக மூங்கில் தினம்.


 உலக மூங்கில் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 18 தேதி கொண்டாடப்படுகிறது. உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது  இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான  $ 10 பில்லியன் தொகையில்  சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது. 2015 ஆண்டுகளில் இதன் அளவு $20 பில்லியனாக உயரும் எனவும், தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6505 கோடி எனவும் அது 2015 ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாகவும்    இந்திய விவசாயதுறை  அமைச்சகம் கூறுகிறது. மூங்கிலை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனவாசிகளின் வாழ்வதாரம், மற்ற மரங்களைக் காட்டிலும் அதிக கரிமில வாயுவை எடுத்துக் கொண்டு அதிக பிராணவாயுவை வெளியேற்றும் என்கிறோம். ஆனால் மூங்கில் வளர்ப்பில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம் ?
தமிழ் நாட்டில் சாதாரணமாக காணும் காட்சி.
 வருத்தம் தரும்  அளவிற்குத்தான் உள்ளது. உபயோகம் சுமார் 1500க்கு மேலிருந்தாலும் தமிழகத்தில் மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை. இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண நிலையிலேயே மூங்கில் உபயோகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் நிலைமை மேம்பட்டுள்ளது. நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள்  என முன்னேற்றம் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் சுயுதவிகுழுக்கள் செய்யும் பொருட்கள்
 வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூங்கிலைக் கொண்டு கட்டுகின்றனர் என்பது மகழ்ச்சி தரும் செய்தி.
வடகிழக்கு மாநிலங்களில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட பள்ளிகள்
 உலக அளவில் தரை, சுவற்றிற்கான ஒட்டுப் பலகை, கூரை கூட மூங்கிலில் செய்கின்றனர் என்பது வியப்பிற்கான ஒரு செய்தியாகும். ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான  ஸ்பெயின் நாட்டின் மார்டிரிட் நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர். இயற்கை இந்தியாவிற்கு கொடுத்த கொடை மூங்கில்”. எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் ?? மத்திய அரசாங்கம் தேசீய மூங்கில் இயக்கம் (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது
மூங்கிலால் செய்யப்பட்ட திரை மறைப்புகள் மற்றும் தரைப் பலகைகள்.
            மூங்கில் கூரையில் “மார்டிரிட் நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதி

மேலதிக தகவல்களுக்கு :
தேசீய மூங்கில் இயக்கம் 

படங்கள் உதவி : Mr. EcoBabu and Internet

Wednesday, September 14, 2011

டாலர் தேசத்தில் 1930 களில் ஏற்பட்ட புழுதிப் புயல்


புழுதிப் புயல் ஏற்பட்ட பகுதிகள்
புழுதிப் புயலின்  தாக்கம்
 மனிதன் விவசாயம் என்று ஆரம்பித்த பின்னர் மேலை நாட்டினர் இயற்கையை விட்டு விலகி பேராசை கொண்டு மண்ணை மலடாக்கி, இயந்திரத்தின் உதவியுடன் உணவு மற்றும் வணிகப்பயிர்  உற்பத்தி செய்து லாபமீட்டினர். விளைவு  டாலர் தேசத்தில் பஞ்சம். இன்றைய தலைமுறைக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஃப்ரைரி (Prairie grasses) என்ற இயற்கை புல்லை அப்புறப்படுத்தியும், தவறான விவசாய முறையாலும் 1930 களில் புழுதிப் புயல் ஏற்பட்டு சில இடங்களில் சுமார் 6 வருடமும் சில இடங்களில் 10 வருடமும் பஞ்சம் நிலவியது. பல லட்சம் மக்கள் குடி பெயர்ந்தனர். இதே நிலைமை இன்று ஆஸ்திரேலியாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. 15 பில்லியன் மரங்களை வெட்டி இருபெரும் நதிகளை வற்றச் செய்த பெருமை மேலை நாட்டினரின் விவசாய முறையைச் சாரும். 
எனது பழைய பதிவுகள்.

மலைபோன்ற தோற்றத்தில் புழுதிப் புயல்
 80 வருடங்களுக்குப் பின் புழுதிப் புயல் (Dust Bowl  or Dirty thirties )  என்ற வரலாற்று உண்மை பேசப்படாமலும், எழுதப்படாமலும் உள்ள நிலையில் திரும்பவும் இரசாயன உரம், பூச்சி மருந்து, மரபணு மாற்றம், பையோ-டீசல் என்று விவசாயப் புரட்சிகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக  நம் நாட்டில் திணிக்கப்படுகிறது. இவைகள் நிச்சயம் நமது இறையாண்மையை பாதிக்கும். இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என்று விட்டு விடாமல் நம் வாழ்வாதாரம் என்ற எண்ணத்துடன்  இயற்கை வேளாண்மைக்கும், இயற்கை உணவிற்கும், உள்ளூர் காய்கறி/பழங்களுக்கும் ஆதரவு தருவோம். இந்த ஆதரவு  நம்மை பேரழிவிருந்து காப்பாற்றும்.
புழுதிப் புயல் சமயத்தில் எடுக்கப்பட்ட புகழ்மிக்க புகைப் படம்
 மேலும் படிக்க: