Monday, August 23, 2010

மாடியில் கீரை வளர்ப்பு - ஓர் பார்வை

மாடியில் கீரை வளர்ப்பு பற்றி ஏற்கனவே பதிவு ஒன்றை எழுதியிருக்கிறேன். இருப்பினும் இரண்டாம் முறை செய்த போது இடுபொருள் முதல் அறுவடை வரை ஆவணப்படுத்தினேன். தென்னை மட்டை, உலர்ந்த சிறிய வேப்பமர துண்டுகள் என எளிதாக கிடைக்கும் பொருட்களே உபயோகப்படுத்தப்பட்டது. மண்புழு படுகையாகவும் உபயோகமாகிறது.
பொழுது போக்கிற்காக இன்றி பார்த்த பின் ஆர்வலர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 23 நாட்களில் முதல் அறுவடை. சுத்தமான சத்தான கீரை சமையலுக்கு தயார். வரும் ஒரிரு மாதங்களுக்கு “நிலைய வித்துவானாக” உதவி புரியும். முயற்சி செய்யுங்கள் ஆரோக்கிய உணவை சுவைக்கலாம்.

பழைய பதிவைக் காண :
http://maravalam.blogspot.com/2010/05/blog-post.html

Thursday, August 19, 2010

மரச்சாகுபடி மற்றும் தரிசு நில மேம்பாடு - ஒரு நாள் விழிப்புணர்வு இலவசக் கருத்தரங்கம்

பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் ) பயோடெக்னாலஜி துறை

மற்றும்

சேசாயி காகித ஆலை ஈரோடு

இனைந்து நடுத்தும் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் . மரசாகுபடியின் முக்கியத்துவம், பண்ணைக் காடுகள் , தரிசுநிலத்தில் சவுக்கு சாகுபடி வெற்றிக் கதை, மரச் சாகுபடிக்கு வங்கிக் கடன்கள் போன்ற முக்கிய தலைப்புக்களில் வல்லுனர்கள் பேசவுள்ளனர். விவசாய பெருங்குடிமக்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

தலைப்பு : மர சாகுபடி மற்றும் தரிசுநில மேம்பாடு
இடம் : டெக்ஸ்டைல் செமினார் ஹால், பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் )
நாள் : 20-08-2010
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
அனுமதி : இலவசம்.

முன்பதிவிற்கு :

முனைவர். N.S. வசந்தி
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 94437 74447, 97506 21289

முனைவர். G.S. முருகேசன்
உதவிப் பேராசிரியர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 97151 18120

திரு. சண்முகம்
தலைவர் (சுற்றுச் சுழல் )
சேசாயி காகித ஆலை
ஈரோடு
அலைபேசி : 94433 40236

ஓர் வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்தவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, August 16, 2010

தொட்டிகளில் எளிதாக செடிகள் வளர்க்க சில யுக்திகள்.

நகரவாழ்கையில் அதிக செலவின்றி அதேசமயம் தேவையற்ற சில பொருட்களைக் கொண்டு சிறப்பாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க இயலும். உரித்த தென்னை மட்டைகளை எவ்வாறு அகற்றுறுவது என்றாகிவிடும். அதேபோன்று பயணம் முடிந்து வரும் போது குடிநீர் “பெட்” பாட்டில்களை தூக்கி எறிந்து மாசுபாட்டை உண்டாக்கிவிட்டு வருவோம். இந்த இரு பொருட்களையும் படங்களில் காட்டியவாறு தொட்டிகளில் செடி வளர்க்க உபயோகிக்கலாம். வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிகக் குறைந்த அளவு நீர் ஊற்றினாலே போதும். மெதுவாக வெறியேறும் நீரை தென்னை மட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். மண் சிதறுதல், நீர் தேங்கி வேர் அழுகுதல் போன்றவை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றினாலே போதும்.

மட்டையை நிரப்புங்கள்
மூடியில் துவாரம் செய்யுங்கள்
மூடியை கீழாக மட்டையின் அருகில் வையுங்கள்
மண் இட்டு நிரப்புங்கள்
செடியை நடுங்கள்
நீரை ஊற்றுங்கள்.

Sunday, August 8, 2010

கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் - (2)

 
பயிற்சி நிலைய நிர்வாகக் கட்டிடம் 
கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பெரியநாயக்கன்பாளயத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் புதுப்புதூர் பயிற்சி நிலையம் உள்ளது. Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் என்ற பெயரில் 2.5 ஏக்கர் நிலத்தில் மரக் கூட்டங்களுக்கிடையே அமைதியான சுழலில் இங்கு இயங்கி வருகிறது.

தொடங்கப்பட்ட ஆண்டு : 1991
இதுவரை பயிற்சி பெற்றவர்கள் : 11,721
தொழில் புரிவோர் : 6678

திரு. K. மோகன் (இயக்குனர்)

 
உழவர் பயிற்சி நிலையம்

தையல் பயிற்சி பெறும் பெண்கள்
இந்த பயிற்சி நிலையத்தில் பயின்ற இளைஞர்கள் இரவு பள்ளி நடத்தி கடந்த 10 வருடங்களாக ஏழைக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் உதவி வருகிறார்கள். உழவர் பயிற்சி நிலையமும் அமைந்துள்ளது. தேர்வில் தோற்றவர்கள், படிக்க வசதியின்றி மேல் படிப்பிற்கு செல்லாதவர்கள், பயிற்சியின்றி குறைந்த கூலிக்கு வேலை செல்வோர் என்று நாம் சந்திக்கக் கூடிய இள வயதினர் இந்த காலக் கட்டதில் சரியான வழிகாட்டுதல் இன்றி விரக்தியில் இருப்பார்கள். இது சரியான தருணம் என்று எண்ணுகிறேன் இவர்களை கண்டுபிடியுங்கள், உதவிடுங்கள், ஊக்கபடுத்துங்கள்.

திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020

தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185


வலைப்பதிவர்களுக்கும் இப்பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்

இதுபோன்று நல்ல வாய்ப்புக்கள், வசதிகள் நிச்சயம் உங்கள் பகுதியில் இருக்கும். நீங்கள் அறிந்திருந்தால் பதிவிடுங்கள் (எனக்கும் தெரிவியுங்கள்). ஆரோக்கியமான தன்னிறைவு கிராமங்களை உருவாக்குவோம்.

Saturday, August 7, 2010

கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் - (1)

கிராம வாழ்வாதாரம் சுத்தமான நிலம், நீர் காற்று. உலகமயம், தாராளமயம், லாபம் மட்டும் என்ற மாய பொருளாதார கோட்பாட்டில் அடிப்படை வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டு நிறுவனங்களும் போட்டிபோட்டு அழிப்பதோடு பெரிய மலைகளையே கூட விழுங்குகின்றனர். விளைவு கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கி வருகிறார்கள், பழங்குடியினர் நகரத்திற்கு வருவதை தவிர்த்து கடவுளாக வணங்கும் மலைக்கும் மண்ணுக்கும் போராடி உயிரை இழக்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களிடம் சமூக பொறுப்புக்களை காண முடியாது.

ஆனால் அத்தி பூத்தாற் போன்று சில நிறுவனங்கள் உண்மையிலேயே கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் கனரா வங்கியின் சேவை பாராட்டுதலுக்குரியது.

இலவசமாக கிராம வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை கனராவங்கி நூற்றாண்டு கிராம வளர்ச்சி டிரஸ்ட் மூலம் 26 இடங்களில் நாடு முழுவதும், தமிழகத்தில் 5 இடங்களிலும் நடத்துகின்றனர். தையல்பயிற்சி முதல் புகைப்பட கலை, கம்யூட்டர் என நிறைய பயிற்சிகள் உண்டு.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்.

தங்குமிடம், உணவு, பயிற்சி இலவசம்
வங்கிக்கடன், அரசு மானியதிற்கு உதவுதல்
வியாபாரம் / விற்பனைக்கு வழிகாட்டுதல்.
பயிற்சிக்குப் பிறகு 2 - 3 ஆண்டுகளுக்கு தொடர்பு மற்றம் ஆலோசனை

வயது வரம்பு : 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ம் வகுப்பு
முன்னுரிமை : அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம். தாழ்த்தபட்டவர்கள்,/ பழங்குடியினர் / மிகவும் பிற்பட்ட / பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள்/பெண்கள் பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : வெள்ளைத்தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி,இனம், தேவையான பயிற்சி போன்றவற்றை எழுதி கல்வி இருப்பிடச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


புதுப்புதூர் பெரியநாயக்கன்பாளயத்திலுள்ள பயிற்சி நிலையம்
==============================
திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020
தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185
===============================
திரு.R. கல்யாணகிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகம்
அசோகபுரம்
ஈரோடு.- 638 004
தொலைபேசி எண் : 0424- 2290338
அலைபேசி எண் : 98404 95745

==============================
திரு.B.M. கிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
8/10, USSS அனிமேசன் சென்டர்
சேரிங் கிராஸ்
உதகமண்டலம்.- 643 001
தொலைபேசி எண் : 0423-2446559
அலைபேசி எண் : 94442 59125
===========================
திரு. கௌரிசங்கர் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
83A, ஜான் பால் காம்பெளக்ஸ்
DMSSS பில்டிங்
நேருஜி நகர்
திண்டுக்கல் -624 001
தொலைபேசி எண் : ---
அலைபேசி எண் : 94441 89677
===========================
திரு. தர்மசீலன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
15, பூமாலை வணிக வளாகம் ,
உழவர் சந்தை எதிர்புறம்
தேனி -
தொலைபேசி எண் :
அலைபேசி எண் ; 94420 21363
===========================

வலைப்பதிவர்களுக்கும் இப்பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்

இச்செய்தினை உங்கள் வலைப்பூவில் இடுங்கள் அல்லது படிக்க வசதியின்றி இருக்கும் ஆர்வமிக்கவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் குறிப்பாக கிராமங்களில் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறவனங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள்.

தன்னிறைவான கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு.

Friday, August 6, 2010

இன்று ஹிரோஷிமா - நாகசாகி நினைவு தினம்.அணுகுண்டு வீசப்பட்டு உயிர் துறந்த அப்பாவி ஹிரோஷிமா - நாகசாகி மக்களுக்கு அஞ்சலி. இன்றுவரை உடலளவிலும் மனத்தளவிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக இந்தப் பதிவு.

இந்த அழகான பூமிப் பந்தை சுய லாபதிற்காகவும், குறுகிய கால பொருளாதார லாபதிற்காகவும் சுரண்டும் போது போர் நிகழ்கிறது. விஞ்ஞானம் வளர வளர அழிக்கும் ஆற்றலும் அதிகரித்து வருகிறது. இரக்க குணம் மறைந்து அரக்க குணம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. புகழ் மிக்க நாகரீகங்கள் மறைந்து காலப் போக்கில் காணமல் போனதை வரலாறு தெளிவாக கூறுகிறது. ஆனாலும் வளர்ச்சியடைந்த நாடுகள் இன்னும் திருந்தவில்லை என்பதை அணுஆயுத ஒப்பந்தத்தை இன்னும் முடிவிற்கு கொண்டுவராததின் மூலமும் வளரும் நாடுகளை சுரண்டுவதின் மூலமும் அறிந்து கொள்ளலாம்.

ஹிரோஷிமா குண்டு வீச்சுக்கு பின் அதன் சக்தியையும், அழிவையும் பார்த்த பின்னும் கடலுக்கடியில் 97 அடி ஆழத்திலிருந்து வெடிக்கச் செய்து கடல் நீரையும் மாசுபட்டிற்கு உட்படுத்தும் இவர்களை எப்படி அழைப்பது என்பதை கீழேயுள்ள படத்தை பார்த்துவிட்டு முடிவைச் சொல்லுங்கள். இன்றைய தேவை கதிர்வீச்சை ஏற்படுத்தும் அணு ஆயுதமன்று, எல்லா ஜீவராசிகளும் வாழ மரங்கள் நிறைந்த பசுஞ்சோலை. நாம் ஒவ்வொரும் இப்படி நினைத்து செயல்பட்டாலே போதும் பசுமையான பூமிப் பந்தை பார்க்கமுடியும்.எனது பழைய பதிவைக் காண:-
http://maravalam.blogspot.com/2008/08/63.html


புகைப் படம் திரு.அறிவழகன் பதிவிருந்து எடுக்கப்பட்டது.