பசுமை போராளி திரு. M.Y.யோகநாதன் அவர்களின் “தாகம்” என்ற குறும்படத்தை டிசம்பர் 3 ஆம் தேதி கோவையில் வெளியிட்டார்கள். மிக நேர்த்தியாக சொல்ல வந்த கருத்தை 30 நிமிட குறும்படத்தில் சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது. நுகர்வு கலாச்சார ஆசையில் வாழ்வாதாரத்தை இழக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்கை. அவசியம் தமிழகத்தின் எல்லா பள்ளிகளிலும், ஒவ்வொரு கிராமங்களிலும் காட்டப்பட வேண்டிய குறும்படம். குழந்தைகளின் மனதில் மரத்தின் பயனை பதிய வைத்தால் பிரகாசமான எதிர்காலம் தமிழகத்திற்கு நிச்சயம் உண்டு. இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய மற்றவர்களுக்கு பரிசாக தர வேண்டிய குறுந்தகடு.. நமது வீட்டுகளில் என்றும் இருக்க வேண்டிய குறுந்தகடு.
உங்களுக்காக சில காட்சிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment