Tuesday, April 22, 2008

இன்றைய மரம் நடும் விழாக்களின் தந்தை.

திரு. ஜுலியஸ் ஸ்டெர்லிங் மோர்டன் 1854 ஆண்டு புது மனைவியுடன் அமெரிக்காவின் மிசிகன் பகுதியிலிருந்து நெப்ரஸ்கா பகுதிக்கு குடியேறியவர். நெப்ரஸ்கா பகுதியின் முதல் நாளிதழின் ஆசிரியர், அரசியல்வாதி ஆனால் மரங்களின் அருமையை உணர்ந்தவர். தனது பத்திரிக்கையிலும் ,சிறந்த பேச்சினாலும் அப்பகுதி மக்களிடையே மரங்களின் அவசியத்தை உணர வைத்தார். பின் நாட்களில் திரு.க்ரோவர் கிளிவ்லாண்ட் அவர்கள் ஜனாதிபதியாய் இருந்த போது விவசாயத்துறை செயலராக பணியாற்றியவர். ஆனால் இவரை மிகவும் புகழ் பெற வைத்தது ஆர்பெர் நாள் கொண்டாட்டம்தான்(Arbor Day,) Arbor = a shady place in a garden, with a canopy of Trees or climbing plants. விடுமுறையுடன் கூடிய மரம் நடும் விழா. அவரது பிறந்த தினமான இன்று (ஏப்ரல் 22) அவரை நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்ளுகிறேன். இவ்விழா கொண்டாடப்படாமல் போயிருந்தால் இன்றய நிலமையை எண்ணிப் பாருங்கள்?????


முதலாம் ஆர்பெர் நாள் கொண்டாட்டம் ஏப்ரல் 10, 1874 ஆண்டு நெப்ரஸ்கா பகுதியில் கொண்டாடப்பட்டது. அன்று சுமார் 10 லட்சம் மரங்கள்!!!!!!! நடப்பட்டனவாம். மரம் நடுவதில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட மரம் நடும் விழா பின்பு மற்ற மாநிலங்கள், நாடுகள் என பரவி இன்று உலக நாடுகளிடையே அவசியமிக்க விழாவாக மாறிவிட்டது. அவரை பெருமைபடுத்தும் விதமாய் ஏப்ரல் 22 கொண்டாடப்பட்டது. பின்பு அதனை மாற்றி ஏப்ரல் மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா முழுவதும் கொண்டாடினாலும் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கென்ற் ஒரு நாளை தெரிவு செய்து கொண்டாடுகிறார்கள். நாம் கூட மரம் நடும் விழாவை ஒரே நாளில் கொண்டாடாமல் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைப்பொழிவை கணக்கில் கொண்டு அந்தந்த பகுதிகளுக்கேற்ப நாளை தெரிவு செய்து நட்ட மரக்கன்றுகள் அனைத்தும் மரமாக மாற இயற்கையை வேண்டிக் கொண்டாடுவோம்.
அமெரிக்காவில் வசிக்கும் பதிவர்கள் இந்த வெள்ளிக்கிழமையன்று கொண்டாடும் ஆர்பெர் நாளைப் பற்றி பதிவிட்டால் தெரிந்து கொள்வது எளிது.

No comments: