Tuesday, March 12, 2013

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மருத்துவ தாவர கண்காட்சி


நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் “மைக்ரோ பயோலஜி” துறை  மருத்துவ தாவரங்கள் பற்றிய கண்காட்சியையும் கருத்தரங்கையும் சிறப்பாக சென்ற 7-3-2013 அன்று நடத்தினார்கள்.

 முனைவர். லட்சுமணபெருமாள்சாமி அவர்கள் தலைமையுரையிலும், கல்லூரி முதல்வரும் மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவத்தை சிறப்பாக எடுத்துரைத்தனர். அரியவகை மருத்துவ தாவரங்கள் பார்வைக்கும், புகைபடங்களாகவும் விளக்கங்களுடன் அதிக அளவில் இருந்தது கண்காட்சியின் முக்கிய சிறப்பு  அம்சம். திரு.மதுராமகிருஷ்ணன் அவர்கள் இயற்கை விவசாயம் பற்றியும், அடியேன் மருத்தவ தாவரங்கள் பற்றியும், திரு. ஆன்டோ அவர்கள் “முள்ளுசீதா” பற்றியும் விளக்கம் தந்தோம். கண்காட்சியை நன்கு கண்டுகளித்த மாணவமணிகளும் அமைதி காத்து கடைசிவரை கருத்தரங்கில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.
.




 இன்றைய காலகட்டதில் அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய எளிய மருத்துவத்தை எடுத்து செல்வதற்கு இதுபோன்ற கண்காட்சியும் கருத்தரங்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுமானால் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை நாம் காணலாம்.

கல்விப் பணிகளுக்கிடையே சிறப்பானதொரு நிகழ்வை நடத்திய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துகள்.
Photographs Source : Viscom Dept,NASC  

Saturday, March 2, 2013

மனதை கவர்ந்த நீர் சிக்கனப் படம்

பொதுக் குழாய்கள் அடைக்கப் பெறாமல் நீர் வீணாவதை அனுதினமும் பார்த்து வருகிறோம். அதற்கு விழிப்புணர்வு தரும் 47 வினாடிகள் கொண்ட  இந்த படம் நமக்கு ஒரு பாடம்.




Friday, March 1, 2013

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!



குறைந்து வரும் மழையளவு, அழிக்கப்படும் காடுகள், குறைந்த முதலீட்டில் தண்ணீரை கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகள், இயற்கையை அழித்து பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என நம்பும் இன்றைய நவ நாகரீக மக்களுக்கிடையே, ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆண்டு முடிவெடுத்து 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும்  மார்சு மாதம் 22 ஆம் தேதியை உலக நீர் நாளாக அறிவித்து பல்வேறு கருபொருட்ளில் உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. 1994 தொடங்கி 2013 வரை நடந்த விழிப்புணர்வு கருபொருட்களை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முடிந்தால் உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.