முதன் முதலில் நான் இரப்பர் மரங்களை காப்பாற்ற போராடுகிறேன் என்று நினைத்தேன், பின்பு அமேசானின் மழை காடுகளை காப்பாற்ற போராடுகிறேன் என்று நினைத்தேன், இப்போது நான் மனிதாபிமானத்திற்காக போராடுகிறேன் என்று உணர்கிறேன்.
-சிகோ மென்டிஸ்
அமேசான் காடுகளின் “காந்தி” என்று அறியப்படும் சிகோ மென்டிஸ், பிரேசில் நாட்டில் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி ரப்பர் பால் எடுக்கும் குடும்பத்தில் பிறந்து அதேயே தொழிலாக மேற்கொண்டார். 150 வருட பாரம்பரிய மிக்க தொழிலாக அப்போது அது இருந்தது. ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம், முதலாளித்துவம் இருந்தாலே இயற்கையை அழித்தல், சுரண்டல், ஏமாற்றுதல், வஞ்சகம் போன்றவை இருக்கும். இருப்பினும் தொழில் புரட்சி, வாகன உற்பத்தி, உலக போர்கள் காரணமாக இரப்பர் தொழில் இயற்கையை அழிக்காமல் அமேசான் காடுகளில் மிகச் சிறப்பாக இருந்தது. உரிமையாளர்கள் சொகுசு வாழ்கையில் இருந்தார்கள். செயற்கை இரப்பர் கண்டுபிடிப்பு, கீழைநாடுகளில் இரப்பர் வளர்ப்பு இவற்றால் அமேசான் காடுகளில் இரப்பர் தொழில் நலிவடைந்தது. வழக்கம் போல் உரிமையாளர்கள் அதனை விட்டு வேறு தொழில்களுக்கு மாறினர். தொழிலாளர்கள் கதி ??? இதற்கிடையை இயற்கை காடுகளை அழித்து கால்நடை வளர்ப்பை சிலர் மேற்கொண்டனர். விளைவு இரப்பர் பால் எடுப்பவர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. சிகோ மென்டிஸ் இரப்பர் பால் எடுப்பவர்களுக்கு தொழில் சங்கம் அமைத்து போராடினார். விளைவை 1988 ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி எதிர்கொண்டார் அன்று மாலை வீட்டின் பின்புறம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்புதான் காடுகள் பற்றிய விழிப்புணர்வு வெகு வேகமாக பரவியது. இன்றும் ஓரளவிற்கு அமேசான் காடுகள் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.
அவரைப் பற்றி வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமாநிறுவனம் படம் எடுப்பதாக பல மில்லியன் டாலர்களை செலவழித்தது. ஆனால் என்ன காரணத்தாலோ செலவழித்தும் படம் எடுக்காமலேயே கைவிட்டது. இதனை ஆவணப்படுத்தி இருவர் இதைபற்றி படம் எடுத்தனர். Youtube இல் இப்படம் 10 பகுதிகளாக உள்ளது. பல அரிய புகைபடங்களும், அந்த கால இரப்பர் தொழில் பற்றிய ஆவணப் படங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கண்டிப்பாக இயற்கை ஆர்வலர்கள் பார்க்கவேண்டிய படத்கொகுப்பு. இணைப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
Rubber Jungles
திரு. சிகோ மென்டிஸ் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் இவ்வலைப் பூ பெருமிதம் கொள்கிறது.