Monday, November 1, 2010

வடகிழக்கு பருவ மழையும், வெட்டிவேரும்..

வடகிழக்கு பருவ மழைதான் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகமாக நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. குறைந்த நாட்களில் அதிக மழை பொழிவை தந்து இயல்பு வாழ்கையை பாதிக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம். ஆவணப்படுத்தபட்ட 1865 ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு பருவ மழையின் போதுதான் சேதம் ஏற்படுகிறது.

நீலகிரி சேதம் 1865 ஆண்டு முதல்

வெட்டிவேர் ஒரு நிரந்தர தீர்வினை தர இயலும் ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. இது பற்றி அங்குள்ள பிரபலமான நபர் ஒருவருடன் உரையாடிய போது வெட்டிவேர் பரவி மலையின் அழகை கெடுத்துவிடும் என்றார். தென்இந்திய வகை வெட்டிவேருக்கு முளைப்புத் திறன் இல்லை என்றாலும் அவர் வெட்டிவேரை உபயோகிக்க விரும்பவில்லை. அவர் பார்த்தீனியம், சீமைக்கருவேல் பட்டியிலில் இதனையும் வைத்திருந்தார்.



நம் நாட்டிலிருந்து அறிமுகமான வெட்டிவேர் இன்று கீழைநாடுகளில் சிறப்பாக உபயோகிப்பதை பார்க்கும் போது மனம் மகிழ்ந்தாலும் சுற்றுச்சுழலுக்கும், விவசாயத்திற்கும் அதிகம் பயன்படும் நமது வெட்டிவேரை நாமே முழுமையாக உபயோகிக்காமல் இருப்பது மன வருத்தத்தை தருகிறது. கீழைநாடு ஒன்றில் எடுக்கப்பட்ட இரு விவசாயிகள் பற்றிய மேலேயுள்ள அனிமேஷன் படம் விளக்கம் தரும்.

8 comments:

வடுவூர் குமார் said...

தவறு எங்கிருக்கிறது?

life after retirement said...

My dear Vincent Sir Kudos to your effort to promote vetiver. great concept to prevent soil erosion the only way to prevent soil erosion at Nilgrisdr.raju

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான அனிமேசன்..

வின்சென்ட். said...

திரு.வடுவூர் குமார்

உங்கள் வருகைக்கு நன்றி. தவறு எல்லோரிடத்திலும் உண்டு.ஆனால் அதனை ஆராயாமல் செயலில் ஈடுபட்டால் செழிப்பைக் காணலாம்.

வின்சென்ட். said...

டாக்டர் அவர்களுக்கு

பல்வேறு அலுவல்களுக்கிடையே நீங்கள் படித்து உற்சாகம் தருவது மன நிறைவுத் தருகிறது. உங்கள் வருகைக்கு நன்றி.

வின்சென்ட். said...

திருமதி. முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கு நன்றி.மக்கள் என்று செயல்படுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஷஹி said...

இதுவரை அறிந்திராத தகவல், உங்கள் சமூக அக்கறைக்கு வணக்கம்..

வின்சென்ட். said...

திருமதி.ஷஹி

உங்கள் வருகைக்கு நன்றி. வெட்டிவேர் குறித்த எனது பழைய பதிவுகளை அன்பு கூர்ந்து படியுங்கள். அதில் நிறைய செய்திகளை பதித்திருக்கிறேன்.