Sunday, June 24, 2007

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்

1. தேவைபடும் நேரம் மட்டும் மின் விளக்கு, மின் விசிறி, தொலைகாட்சி, கணினி இவைகளை உபயோகிப்போம்.

2. குளிர்சாதன பெட்டி, குளிரூட்டிகளை முடிந்த வரை தவிர்ப்போம்.

3. ஒளிர் மின் விளக்கிற்கு (CFL) மாறுவோம்.

4. சூரிய சக்தியை பயன்படுத்தி சுடுநீர் பெறுவோம், விளக்கு எரிப்போம்.

5. புதுபிக்கும் வகை மின்கலங்களை (Rechargeable Battery) பயன்படுத்துவோம்.

6. நீண்ட தூர பயணத்திற்கு ரயில், பேருந்து போன்றவைகளை பயன்படுத்துவோம்.

7. குறைந்த தூர பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்துவோம்.

8. கடித தொடர்பிற்கு மின்னஞ்சலை அதிகம் பயன்படுத்துவோம்.

9. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து காகித பைகளை பயன்படுத்துவோம்.

10. கொசு வலையை பயன்படுத்தி கொசுவர்த்தி சுருள்,வில்லை போன்றவைகளை தவிர்ப்போம்.

11. வீடுகளில் காம்பவுண்ட் முழுவதும் தளம் அமைப்பதை தவிர்த்து சற்று மண் பகுதியை விடுவோம்.

12. இரு குப்பை தொட்டி முறையை சமையலறையிலிருந்து தொடங்குவோம்.

13. நாமே மண்புழு உரம் சமையலறை கழிவிலிருந்து தயாரிப்போம்.

14. இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்துவோம்.

15. மூலிகை தாவரங்கள் மற்றும் மரங்களை வீட்டருகில் வளர்ப்போம். (கவனம் தேவை)

16. விஷேச நாட்களில் மரம் நடுவதை கொள்கையாக பின்பற்றுவோம்.

17. மழை நீர் சேகரிப்பு முறையை எங்கிருந்தாலும் அமல் செய்வோம்.

18. நீரை குறைவாகவும், மறுஉபயோகமும், மறுசுழற்சியும் செய்வோம்.

19. திறன்நுண்ணுயிரை (Effective microorganisms(EM) அன்றாடவாழ்வில் பயன்படுத்துவோம். (விபரம் இங்கே)

20. இந்தச் செய்திளை நண்பர்களுக்கு தெரிவிப்போம்.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லதொரு பதிவு நன்றி.

(word verfication நீக்கவும்)

வின்சென்ட். said...

தங்களின் கருத்துக்கும், யோசனைக்கும் நன்றி.

Essar Green World said...

sir u r very very greet sir we want to know more information about global warming particularly sun light utilization ple help us.

வின்சென்ட். said...

திரு.சின்னசாமி

உங்கள் வருகைக்கு நன்றி.

mkrcongress said...

நல்ல ஒரு பதிவு
மக்களிடம் இது போன்ற விழிப்புணர்வை கொடுக்க வேண்டும்.
இதை எனது வலைப்பதிவிலும்
அப்படியே எடுத்து வைக்கிறேன்.

வின்சென்ட். said...

திரு/திருமதி.விவித்பாரதி

உங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும், வலைப்பதிவிலும் தொடர்பு தந்ததிற்கு
மிக்க நன்றி.