Friday, May 10, 2013

பரளிக்காடு “சுழல் சுற்றுலா”



கோடைவிடுமுறையில் பரபரப்பான நகர வாழ்கையிலிருந்து “குளு குளு” மலைவாசஸ்தலங்களை நோக்கி பயணித்து மிக அதிக தொகைகளை செலவழித்தும் உணவின்றி, நீரின்றி  கூட்ட நெரிசலில் “சிக்கி” கவலை தரும் பயணமாக மாறிவிடுவதுண்டு. மாறாக தமிழ்நாடு வனதுறையின் பரளிக்காடு “சுழல் சுற்றுலா” பரிசல் பயணம், கரைகளில் வனவிலங்குகள், அழகிய பறவைகள், ரீங்காரமிடும் வண்டுகள், ஒரு மணிநேர காட்டுப் பயணம் (Trekking), சுகமான ஆற்றுக் குளியல், சுவையான மதிய உணவு,  பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வாய்ப்பு என  இயற்கையை  ஒரு நாள் முழுமையாக பரபரப்பின்றி அனுபவிக்க ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்து விடுமுறையை இனிதாக கழியுங்கள்.
 
பரிசல் துறையின் முகப்புத் தோற்றம்

புங்க மரநிழலில் அமர்ந்து பேச ஆசனங்கள்

அனுபவமிக்க பரிசல் ஓட்டுனர்கள்

மனதை கொள்ளை கொள்ளும் பரிசல் சவாரி

சுவைமிக்க உணவை பரிமாறவிருக்கும் மகளிர் குழுவினர்


வழக்கமான உணவு

"ஸ்பெஷல்" உணவு ராகிக்களியுடன் கீரை

விளையாட ஊஞ்சல்

கோவையிலிருந்து பேருந்து வசதி உண்டு

இந்த உல்லாச பயணத்திற்கு நாம் தரும் தொகை பழங்குடி மக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதிகள், கல்வி, சுகாதாரம், குடிநீர், விவசாயதிற்கான உதவிகள் , தொலைதொடர்பு போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது.

தொடர்புக்கு

மாவட்ட வன அலுவலகம்,
கோவை வனக் கோட்டம்,
கோவை
வனவர் – 90470 51011

L. தேசப்பன்
வனச்சரக அலுவலர்
காரமடை வனச்சரகம்
94433 84982.
Website : www.coimbatore.tn.nic.in
            : Baralikadu eco tourism

Monday, April 22, 2013

புவிதினம் ஏப்ரல் 22

எனது மனதை உற்சாகப்படுத்திய, பாதித்த இரு நிகழ்வுகளை இந்த புவிதினத்தில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எனக்கு ஏற்பட்ட  அதே உற்சாகம், பாதிப்பு உங்களுக்கும் ஏற்படலாம் என எண்ணுகிறேன்.
 



“பரளிக்காடு” என்ற இந்த  இடத்தில் இறங்கியவுடனே பிரயாணக் களைப்பு மாறி “சில்” என்ற காற்று தழுவிச் செல்ல என்னையும் அறியாமல் கண்களை மூடி சுத்தமான காற்றையும், சுகமான புங்கமர நிழலையும் அனுபவித்தது வர்ணிக்க வார்தைகள் இல்லை. இந்த நிலையில்தான் நமது முந்தைய சந்ததி நமக்கு இப்புவியை விட்டுச் சென்றார்கள்.

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் மத்திய அரசின் நிறுவனமொன்றிற்கு செல்லும் போது எடுத்தது. பசுகளை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் உணவிற்காக போராடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த நிலையில்தான் நாம் இந்த இப்புவியை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகிறோமா?


சிந்தித்து செயல்பட்டால் மாற்றம் தரமுடியும். முடிவு மனிதனின்  கையில்!!!!

இன்றைய நிலை குறித்த எனது பழைய பதிவு
இன்றைய கிராம நீராதாரம்.

Friday, March 22, 2013

நிகமானந்தா – கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்




மாத்ரி சதன் எனும் ஆசிரமத்தின் 34 வயதான சாமியாரான நிகமானந்தா, ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகளும், வழியெங்கும் நூறுக்கும் மேற்பட்ட சிறு, பெரு நகரங்களின் சாக்கடைகளும் கங்கையில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, கங்கையைக் காக்கக் கோரி 1998இல் 73 நாட்களும், 2010இல் 68 நாட்களும் உண்ணாவிரதம் இருந்தார். கங்கைக் கரையோரப் பகுதிகளில் இயங்கிவரும் சட்டவிரோதக் கல்குவாரிகளை அகற்ற வேண்டும், “கும்ப்” எனுமிடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், கங்கையைக் காக்க அவர் கடந்த 2011 பிப்ரவரி 19ஆம் தேதியன்று, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 2011 ஜூன் 13ஆம் தேதியன்று சர்ச்சைக்குரிய முறையில் மரணமடைந்தார்.
இந்தியாவின் புண்ணிய நதி காப்பாற்றப்பட வேண்டும், இந்திய விவசாயம் தழைக்க வேண்டும், நாளைய தலை- முறையினருக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒரு புண்ணிய நதியின் புனிதம் காக்க உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த மகான். இவரது தியாகம் சரியான முறையில் மக்களிடம் சென்றடையாதது மிகப்பெரிய துரதிஷ்டம். இந்த இளவயதில்  இலட்சிய நோக்கில் உயிர் துறந்த மகான் நிகமானந்தா அவர்களின் தியாகம் காலத்தால் மறக்கபடலாம் அல்லது மறைக்கப்படலாம். காலம் பதில் தரும்.  இந்த உலக நீர் நாளில் மகான் நிகமானந்தாவிற்கு  இந்த வலைப்பூவின் நினைவஞ்சலி!!!!