Tuesday, November 12, 2013

கோவையில் வீட்டு/ மாடி தோட்டம் பயிற்சிக் கருத்தரங்கம்





தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:
94420 19007
75985 16303
98940 66303    P.வின்சென்ட்

Saturday, October 19, 2013

மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம்.



 
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால்  திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

 இன்றைய விவசாய சுழலில் மரம் ஒரு காப்பீடாக தமிழக உழவர் பெருமக்களை காத்து வந்தது. தானே புயலுக்குப் பின் அந்த நம்பிக்கையும் கேள்விக்கிடமானது. பல்வேறு தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த சாகுபடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் மரப் பரப்பையும் விரிவாக்கி, உழவர் பெருமக்களையும் அரவணைத்த வனக்கல்லூரி, மேட்டுப்பாளையம் இம்முறையும் ஆபத்தபாந்தவனாக வந்து இந்த காப்பீட்டுக்கு ஒரு காப்பீடு  திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் 11-10-2013 அன்று அறிமுகபடுத்தினர். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால் மேட்டுப்பாளையத்தில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தற்சமயம் மரம் சார்ந்த தொழில்களுக்கான 7 மரங்களுக்கு இந்த மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம் பயனளிக்கும்.

மரத்தின் பெயர்கள்
  1. சவுக்கு
  2. தைல மரம்
  3. மலை வேம்பு
  4. பெருமரம்
  5. குமிழ் மரம்
  6. சுபாபுல்
  7. சிசு மரம்.
எந்தெந்த வகையான விபத்துகளுக்குக் காப்பீடு
1.      தீ, புதர் தீ மற்றும் காட்டுத் தீ
2.      இடி/ மின்னல்
3.      கலகம்
4.      சூறைக்காற்று, புயல், சுழற்காற்று
5.      தண்ணீரில் மூழ்குதல்
6.      வன விலங்குகளினால் சேதம்.
 
இன்சூரன்ஸ் செய்யும் மதிப்பு
ஒரு குறிப்பிட்ட மரப்பயிர் 1 ஏக்கரில் பயிரிட ஏற்படுபம் அதிகபட்ச செலவுக்கான தொகையே இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகையாகும்.

காப்பீட்டுத் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் செலவினங்கள்.
1.      நிலம் உழுதல்
2.      நாற்றுக்களின் மதிப்பு
3.      நீர் பாய்ச்சுதல்
4.      உரமிடுதல்
5.      களையெடுத்தல்
6.      மற்ற பயிர் பாதுகாப்பு செலவுகள்
7.      மற்ற தேவையான செலவுகள்

இன்சூரன்ஸ் கட்டணம்
ஒரு ஆண்டுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் மொத்தத் தொகை 1.25% (ரூ.100க்கு ரூ1.25 ) ப்ரிமியம் செலுத்த வேண்டும். இது அடிப்படை இன்சூரன்ஸ் தொகையாகும். இத்துடன் விரிவான காப்பீட்டில்  குறிபிட்ட பூச்சிகளினால் மற்றும் நோய்களினால் ஏற்படும் இழப்பையும்  இன்சூரன்ஸ் செய்ய மொத்த ப்ரிமியம் ரூ 1.60% செலுத்த வேண்டும். சேவை வரி கூடுதலானது.

மேலும் விபரங்கள் பெற
அருகிலுள்ள
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அலுவலகம்

அல்லது 

வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளையம். 641 301
தொலைபேசி எண்: 04254-222010.

Source : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் சுற்றறிக்கை

Monday, September 2, 2013

ஹூஜல்கல்சர் (Hugelkulture)



வேண்டாத பொருட்களின் மறுஉபயோகம், குப்பை என்று எண்ணும் பொருட்களை பயனுள்ளதாக மாற்றும் சக்தி வீட்டுத் தோட்டதிற்கு உண்டு. சில முறைகள் நூற்றாண்டு காலமாக வெளிநாடுகளில் வழக்கத்தில் உண்டு. அவைகளில் ஒன்று ஹூஜல்குல்சர்
வேண்டாத அட்டைகள்

மரக்குச்சிகள்

மண்புழு உரம் கலந்த தென்னைநார் கழிவு

புதினா நாற்றுக்கள்.

நன்கு வளர்நதுள்ள புதினா

ஆரோக்கியமான இலைகள்
 “ஹூஜல்குல்சர் (hugelkulture) என்ற வாயில் நுழையாத இந்த ஜெர்மன் வார்த்தைக்கு உயரமான மேட்டுப்பாத்தி என்று பொருள் கொள்ளலாம். சிறு வித்தியாசம் பாத்தியின் அடியில் பெரிய மரத்துண்டுகளை அடுக்கி அதற்கு மேல் மண் இட்டு செடிகளை நடுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல மரதுண்டுகள் மக்கி உரமாக மாறும் அதே சமயம் மரதுண்டுகள் நீரையும் தன்னகத்தே உறிஞ்சிக் கொள்வதால் மேலேயுள்ள தாவரங்களுக்கு உரமும் நீரும் அடிக்கடி தரவேண்டிய அவசியம் குறைவு. வேர்களுக்கு தேவையான காற்றும், எளிதில் செல்ல மக்கிய மரத்துண்டுகளும் இருப்பதால் வேர்கள் நன்கு பரவி செடிகள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த முறை கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஜெர்மனியிலும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக  வழக்கத்தில் உள்ளது.  எளிமையானதும் செலவு குறைந்த ஒரு முறையாகும். வேண்டாத அட்டைப் பெட்டிகள், மரத்துண்டுகள், காய்ந்த இலைக் குப்பைகள், என அனைத்தையும் உபயோகித்து சிறப்பான ஹூஜல்கல்சர் முறையை வீட்டுத் தோட்டத்தில் மிக எளிதாக கடைபிடிக்கலாம். பெரிய அளவில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. சிறிய தொட்டிகளில் கூட செய்யலாம்.