Tuesday, March 20, 2012

உலக சிட்டுக் குருவிகள் தினம் 2012


சுமார் 15 வருட காலத்தில் நூற்றுக்கணக்கான  சிட்டுக் குருவிகள் வாழ்ந்த எங்கள் பகுதியிலிருந்து அவைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டோம் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து  கொள்ளுகிறேன். திரும்ப கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இங்கு வந்து வாழமுடியாமல் போய்விடுமோ? என்ற பயம் காரணமாக சற்று தாமதப்படுத்தியிருக்கிறேன். இருப்பினும் முயற்சி தொடரும். அவைகளின் சுறுசுறுப்பு என்னைக் கவரும். புகைபடம் எடுக்க நீண்ட பயணம் மேற் கொள்ளவேண்டி வந்ததால் நியு சென்சுரி புக் ஹவுஸின் காலென்டரில் அழகான சிட்டு இருந்தது இங்கே பதிவிடுகிறேன். ஆனால் இந்த நிலைமை தொடரக்கூடாது என்பதே எனது பிரார்த்தனை. எனது நினைவு தெரிந்து இவைகள் இல்லாமல் போய்விட இன்னும் எத்தனை ஜீவராசிகளை தெரியாமல் அகற்றியிருக்கிறோம் என்று இயற்கைக்கு மாத்திரமே தெரியும். சிட்டுக் குருவிகளை காப்பாற்றுவோம் அதுதான் ஆரோக்கிய சுற்றுச்சூழலின் அறிகுறி!!!!

Sunday, March 11, 2012

உலக நீர் நாள் 2012 விழிப்புணர்வுப் படம்

இந்த வருட 2012 உலக நீர்  நாளுக்கான விழிப்புணர்வு புகைபடத்தின் HTML Code ஐ கீழே தந்திருக்கிறேன். வலைப் பூ / வலைதளம் வைத்திருப்பவர்கள்  இதனைப் பயன்படுத்தி தங்களின் வலைப் பூ / வலைதளங்களில் இட்டு விழிப்புணர்வை  ஏற்படுத்துங்கள்.

 */   <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKu6e2p0VWFajgk107yGAW3FdpsKon61GDCmXE_E6XFfeft7PAG7ublXfOL6s7NazDubNf3cOPPJACpaXYj0PSBvEvkgm72zCw9Ls2giIf7yphyphenhyphenHyjoFsSrZ6ayIAR3hgwGeh54PFxkTk/s1600/wwd2012.psd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKu6e2p0VWFajgk107yGAW3FdpsKon61GDCmXE_E6XFfeft7PAG7ublXfOL6s7NazDubNf3cOPPJACpaXYj0PSBvEvkgm72zCw9Ls2giIf7yphyphenhyphenHyjoFsSrZ6ayIAR3hgwGeh54PFxkTk/s400/wwd2012.psd.jpg" width="200" /></a></div>
<br />   */


Wednesday, February 29, 2012

தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட அடுப்பு

மீண்டும் ஒரு டேங்கர் (சமையல் எரிவாயு) லாரிகளின் வேலை நிறுத்தம் துவங்கப்பட உள்ள நிலையில் சாமானியர்களின் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் நேரம். கிராமங்களில் கூட சமையல் எரிவாயு பிரபலமான நிலையில் பாதிப்பு நிச்சயம் இருக்கும். மின்பற்றாக் குறையுள்ள தமிழகத்தில் மின்அடுப்பு வகைகள் பலனளிக்கப் போவதில்லை. தீர்வு ??? சோதித்துப் பார்த்ததில் தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தின்  மேம்படுத்தப்பட்ட அடுப்பு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது

இருசுவர்கள் கொண்ட மண் அடுப்பு. வெளிச்சுவர் துவாரமின்றியும் உள்சுவர் மற்றும் கீழ்பகுதி துவாரங்களுடன் இருப்பதால் சுவர்களின் இடைவெளியில் காற்று உட்புகுந்து எரியும் பகுதிக்கு வருவதால் எரியும் தன்மை பாதிப்படைவதில்லை. விறகு முழுமையாக எரிபடுவதால் அதிக வெப்பமும், குறைந்த அளவு விறகும் இருந்தால் போதும் சமையலை முடித்துவிடலாம். சாம்பலை செடிகளுக்கு தூவி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எளிய வாழ்விற்கு இது உதவும் என்று எண்ணுகிறேன்.






மேலும் விபரங்களுக்கு

தமிழ்நாடு விவசாய பல்கலைகழகம்,
கோவை.
---------------------------------
திரு.மதனகோபால்
அலைபேசி எண் : 93453 57803, 98940 95499