பிரபல “இந்து” நாளிதழ் நம்பக தன்மைக்கும் தரத்திற்கும் பெயர் பெற்றது. ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும் பல்வேறு விவசாய கட்டுரைகளை தாங்கி வரும். தரமான அந்த கட்டுரைகள் தமிழில் கிடைத்தால் தமிழக விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்குமே என்ற ஆதங்கம் இருக்கும். அதுவும் கேட்கும் படி ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் “ஒலி” வடிவத்தில் அவர்களது வலைதளத்தில் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பழைய கட்டுரைகளையும் ஒலி வடிவத்தில் நாம் கேட்கலாம் என்பது மேலும் சிறப்பு.
ஓர் வேண்டுகோள் : இச்செய்தியினை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எண்ணை (டீசல்) இதனால் ஏற்பட்ட சுற்றுசுழல் மாசுபாடும், உயரினங்களின் அழிவும், நாட்டிற்கு நாடு போட்டி, சண்டை, கொலை பின்பு சுரண்டல் என கணக்கிட்டால் இந்த கண்டு பிடிப்பு உலக சமாதானத்தை, உயிரின அழிவை மிக அதிகமாகவே பாதித்துள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு நாட்டிலும் எண்ணை கண்டுபிடித்து அதிகார வர்கத்திற்கு லஞ்சம் தந்து உள்ளூர்வாசிகளை வதைத்து எண்ணை எடுத்து அதை கடலில் கொட்டி நாசம் செய்து பின் சேருகின்ற இடத்திலும் புகையை விட்டு வளி மண்டலத்தை நாசம் செய்த கண்டுபிடிப்பு இது. ஆனால் டீசல் எஞ்சினை கண்டுபிடித்த திரு. ரூடால்ப் டீசலின் முதல் எஞ்சின் தாவர எண்ணை கொண்டுதான் ஓட்டப்பட்டது. (நூறு ஆண்டுகளுக்கு முன்பே )எஞ்சினை தாவர எண்ணைக்கு சிறப்பாக மாற்றாமல் தடம் மாறி எரிபொருள் “கச்சா எண்ணை” என்று ஆனபோது மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் நடந்து இன்று அழிவின் எல்லைக்கு வந்தவுடன் “ஞானம் பிறந்து” மறுபடியும் “பயோ-டீசல்” என பெருமளவு தொகையுடன் ஆராய்ச்சிகள். அதிலும் நம் நாட்டில் நன்கு விளையும் புன்னை, புங்கன் போன்ற வறட்சியை தாங்கி வளரும், நோய் சற்று குறைவான சுற்று சுழலை மேம்படுத்தும் தாவர வகைகளை விடுத்து ஜெட்ரோபாவில் அதிக கவனம் ஓரு நெருடல்தான். உணவு பொருட்களையும் “பயோடீசலாக” மாற்ற நினைப்பது ஏழை மற்றும் வளரும் நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சென்ற மாதம் ஏற்பட்ட மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவை பார்த்தோம். இதே போன்ற மிக மோசமான எண்ணை விபத்து "எக்ஸான் வால்டெஸ்" எண்ணை விபத்து ஆகும். கடற்பகுதியில் மனிதானால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான விபத்து ஆகும்.
1989 ஆண்டு மார்சு மாதம் 24 ஆம் தேதி அலெஸ்காவின் “பிரின்ஸ் வில்லியம் சௌண்ட்” பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து லட்சக் கணக்கான பறவைகளையும், கோடிக் கணக்கான மீன்களையும் அழித்து நிறைய மீன்பிடி, சுற்றுலா நிறுவனங்களை திவாலாக்கியது. மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரங்களை பாழடித்தது. 5 பில்லியன் நஷ்ட ஈடு கேட்கப்பட்டு பின் மிக குறைவான தொகைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுசுழல் மாசுபாடு இன்று வரை தொடர்கிறது.
இந்த சுற்றுச்சுழல் தினத்தன்று சில வரையறைகளை, இலக்குகளை நமக்கு நாமே விதித்து செயல்படுத்தலாம்.
சிறிது தூர பயணத்திற்கு சைக்கிள் உபயோகப்படுத்துவது. ( உடற்பயிற்சியும் கூட) அருகிலுள்ள ஊர்களுக்கு பேருந்தை உபயோகிப்பது. தூரத்திலுள்ள ஊர்களுக்கு இரெயில் பயணம். குழந்தைகளை முடிந்த அளவிற்கு பள்ளிப் பேருந்தில் அனுப்புவது.
நாமும் நிறுவன வாகனங்கள் இருந்தால் அதனை உபயோகிப்பது. நமது வழக்கமான பாதை நெருக்கடி மிகுந்ததாக இருந்தால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது அல்லது மாற்றுப் பாதையை உபயோகிப்பது. அருகிலுள்ளவர்களையும் இணைத்து ஓரே ஊர்தியை முடிந்த அளவிற்கு உபயோகிப்பது. மின்சார வாகனங்களுக்கு மாறுவது ( வேகம் வசதி குறைவுதான் ) மின்தடையின் போது ஜெனரேட்டர்களுக்கு பதில் சூரிய விளக்கு (Solar light) அல்லது காற்றாலைகளை உபயோகிப்பது. எண்ணை வித்து மரங்களை நடுவோம். மாற்று எரிபொருளை ஆராய்வோம் ஈயம்[lead] கலக்காத எரி பொருளை பயன்படுத்தலாம்.
வாகன புகையளவை கட்டுக்குள் வைக்கலாம். (வேறு ஏதேனும் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். )
இந்த வருட வெப்ப மண்டல புயல் கணக்கை மத்திய அமெரிக்காவில் “அகதா புயல்” மூலம் இயற்கை துவக்கியுள்ளது. பஞ்ச பூதங்களில் இரண்டு (நீர், காற்று )சேர்ந்து மற்றொரு பூதமான நிலத்தில் வினை புரிய பாதிப்புக்கு உள்ளாவது என்னவோ நாம் தான். நூற்றுக்கு மேற்பட்டோர் உயிர் இழப்பு பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். படங்களையும் ,வீடீயோவையும் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.
சாலை சந்திப்பில் மிகப் பெரிய குழி. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன அழகு படுத்தப்பட்ட பாலத்தின் அருகே மிக பெரிய குழி. கௌதமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல்சால்வேடர், ஹோண்டுரா ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை காரணமாக அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன..
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மாத்திரமே பாதிப்பை குறைக்கமுடியும் முழுவதுமாக தவிர்க்கமுடியாது.
சுற்றுப்புற சூழல்,
மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள்,
மரம் வளர்ப்பு,
மருத்துவ செடிகள்,
அலங்கார செடிகள்,
இயற்கை விவசாயம்.
மின்னஞ்சல் முகவரி
vincent2511@gmail.com