Monday, November 10, 2008

மண் அரிப்பு- புகைப்படம்

இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும்,10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும்.இதில் கவனிக்கபடவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண் ???
சென்ற மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் என் கண்களுக்குப்பட்ட சில மண் அரிப்பு காட்சிகள். விவசாயத்தில் மிக முக்கியமானது மண் அரிப்பை தடுப்பது.Top Soil எனப்படும் வளமான மேல் மண் அது அடித்துச் செல்லப்பட்டால் விளைச்சல் குறையும். திரும்பவும் வளம் சேர்க்கவேண்டும். எனவே நல்ல விளைச்சலைப் பெற மண் அரிப்பை தடுப்பது மிக மிக அவசியம். வரும் முன் காப்போம்.

Prevention is Better than Cure.

Wednesday, November 5, 2008

சுற்றுச் சுழல் ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அமெரிக்க தேர்தல்.


புவி வெப்பம், சுற்றுச்சுழலை நன்கு உணர்ந்த அதனைப் பற்றி தனது தேர்தல் சொற்பொழிவுகளில் கூட அடிக்கடி பேசிய ஜனநாயகக் கட்சியின் திரு. பாரக் ஓபாமா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது சுற்றுச் சுழல் ஆர்வலர்களை நிச்சயம் மகிழச்சியிலழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவர் நோபல் பரிசு பெற்றவரும், ஜனநாயகக் கட்சியின் 2000 ஆண்டு வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் துணை அதிபரும், “an inconvenient truth” என்ற புவி வெப்பம், சுற்றுச்சுழலை பற்றிய திரைப் படத்தை எடுத்த திரு.அல் கோர் அவர்களை இது குறித்து கலந்தாலோசிப்பதாக கூறியிருப்பது உலகத்திற்கு நிச்சயம் நன்மையை அளிக்கும்.
கியுட்டோ ஓப்பந்தம் திரு. புஷ் அவர்களின் காலத்தில் அமெரிக்கா கையெழுத்திடாததால் முழுமை பெறாமல் இருந்தது. இனி அந்த நிலைமை மாறும் என நம்பலாம். மிக மோசமான பொருளாதார நெருக்கடியுள்ள இக்காலகட்டத்தில் அவர் நல்லாட்சி செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என இவ்வலைப் பூ திரு. பாரக் ஓபாமா அவர்களை வாழ்த்துகிறது.

Saturday, November 1, 2008

உலக வனஉயிர் நிதியம் (World Wildlife Fund (WWF)) 2008ஆம் ஆண்டு அறிக்கை

உலக பொருளாதாரம் மிக மோசமான சிக்கலில் இருக்கும்போது உலக வனஉயிர் நிதியம் (World Wildlife Fund (WWF)) நிச்சயம் வரபோகின்ற இயற்கை சிக்கலைப் பற்றி எச்சரித்துள்ளனர். இயற்கை வளங்களை அளவிற்கதிகமாக சுரண்டினால் வருங்காலத்தில் சுழலியல் தொடர்பான கடன் சுமையை உலகம் எதிர்நோக்க வேண்டிவருமென எச்சரித்துள்ளனர். இச்சுமை தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிகமிக மோசமானதாக இருக்குமென்கின்றனர்.

1998 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை “வாழ்கின்ற உலகம்” பற்றி வெளியிடப்படும் இந்த அறிக்கை பொதுவாக எல்லோராலும் நம்பகத் தன்மையுள்ள மிக சரியான அறிக்கையென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 2008ஆம் ஆண்டு அறிக்கையை அக்டோபர் மாத இறுதியில் வெளியிட்டனர். இயற்கை மூலதனங்களான காடுகள், தண்ணீர், மண்வளம், பல்லுயிர்வகைகள் மீதான மனிதனின் தேவைகள் அளவிற்கு மிக அதிகமாக இருப்பதால் இவ்வளங்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் இப்புவியின் திறன் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது என கூறி இத்தேவைகள் இப்படியே தொடர்ந்தால் 2030 ஆண்டுகளின் மத்தியில் இதே போன்ற இரண்டு உலகங்கள் தேவைபடும் என்று இவ்வமைப்பின் இயக்குனர் திரு.ஜேம்ஸ் லீபே கூறியுள்ளார்.
ஒவ்வோராண்டும் இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் இழப்புக்களை சுனாமி, காத்தரீனா முதல் நேற்றைய பாகிஸ்தான் நிலநடுக்கம் வரை கணக்கிட்டால் நிச்சயம் வருங்காலம் தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிக மோசமானதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

"The Earth is neither an ecosystem to be preserved, nor a quarry to be exploited for selfish and short-range economic reasons, but a garden to be cultivated for the development of its own potentialities and the potentialities of the human species".. RENE DUBOS
மேலும் முழு அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
Source:Graph WWF/Ca