வெட்டிவேர் பயிற்சி பட்டறையின் முதல் நாள் முடிந்து மகிழ்ச்சி,ஆதங்கம், வருத்தம் என பல மனநிலைகளுடன் இருந்த போது நண்பர் திரு. மகாலிங்கம் அவர்கள் ஆனந்த விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்திருப்பதாக அறிவித்த போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். காரணம் வெட்டிவேர் பற்றி மேலும் மக்கள் அறிய ஒரு வாய்ப்பை தந்த ஆனந்த விகடனுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
ஒரு பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருந்தது. நானும் ஆரம்பித்து ''வெட்டிவேர்'' என்றவுடன் மாணவர்களிடையே ஒரு ஏளனப் புன்னகை. ஆனால் பயிற்சி பட்டறையில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தாலும் உச்சரிப்பு பல்வேறாக இருத்தாலும் அனைவரும் ''வெட்டிவேர்'' என்றது மகிழ்ச்சியாயிருந்தது.
ஆதங்கம்
திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE ( Chairman ,The Vetiver Network International USA ) அவர்கள் வெட்டிவேர் தாவரங்களில் ''ரோல்ஸ் ராய்ஸ்''என்றார். மற்ற நாடுகள் சரியாக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி காணும் போது நாம் அதனை சரியாக பயன்படுத்தாமல் வெள்ளம், வறட்சி என பொருளாதார வீழ்ச்சியில் உள்ளோம்
திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE அவர்கள் தலைமையுரை
வருத்தம்
தாய்லாந்து, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் அரசுகள் பெருமளவு உதவிசெய்து வெட்டிவேரை பிரபலப்படுத்துவது மகிழ்ச்சியாக இருந்தாலும் நமது அரசுகள் அந்த அளவிற்கு இல்லை என்பது வருத்தமாகவுள்ளது.
ஆதங்கம்
திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE ( Chairman ,The Vetiver Network International USA ) அவர்கள் வெட்டிவேர் தாவரங்களில் ''ரோல்ஸ் ராய்ஸ்''என்றார். மற்ற நாடுகள் சரியாக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி காணும் போது நாம் அதனை சரியாக பயன்படுத்தாமல் வெள்ளம், வறட்சி என பொருளாதார வீழ்ச்சியில் உள்ளோம்
திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE அவர்கள் தலைமையுரைவருத்தம்
தாய்லாந்து, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் அரசுகள் பெருமளவு உதவிசெய்து வெட்டிவேரை பிரபலப்படுத்துவது மகிழ்ச்சியாக இருந்தாலும் நமது அரசுகள் அந்த அளவிற்கு இல்லை என்பது வருத்தமாகவுள்ளது.
வரும் ஆறு அல்லது ஏழு பதிவுகள் வெட்டிவேர் பற்றியதாக இருக்கும் எனவே எனது வலை பூ பக்கம் வரும் வாரங்களில் வந்து வெட்டிவேர் பற்றி அறிந்து கொண்டு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.