The belly rules the
mind. ~Spanish Proverb
வயிறு மனதை ஆள்கிறது
– ஸ்பெயின் நாட்டுப் பழமொழி
|
கண்களை மூடி தியானம் |
|
உணவு கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு |
அண்மையில் குன்னூர் சென்றிருந்தேன். வழியில் தேநீர்
அருந்த நின்றோம். நண்பர் ‘பஜ்ஜி’ சாப்பிட்டார். அருகிலிருந்த குரங்கிற்கும்
கொடுத்தார். பஜ்ஜியை கைபற்றிய குரங்கு மெதுவாக வாழைக்காய் பகுதியை மாத்திரம்
சாப்பிட்டுக் கொண்டு மாவுப் பகுதியை கீழே தூக்கி போட்டது.
|
உணவு கிடைத்த நிம்மதி |
|
வாழ்க்காயை மாத்திரம் உண்ணும் திறமை | | | | |
|
|
|
|
|
தூக்கி எறியப்பட்ட மாவுப் பகுதி |
மிருகங்களின் ஆரோக்கிய சூட்சமம் புரிந்தது. எது வேண்டாம் என்று அதற்குத்
தெரிகிறது. மேற்கண்ட பழமொழி மனிதர்களுக்கு மட்டும் தான் போல் தெரிகிறது. மிருகங்களின்
மனம் வயிற்றை ஆளுகிறது. மனிதன் சில பிராணிகளை தனது உணவு கொடுத்து
பழக்கியிருந்தாலும் சிலவற்றை அவைகளிடத்தில் திணிக்க முடிவதில்லை. குறிப்பாக அவைகளின்
கூடுகளைப் பாருங்கள் குறிப்பாக ‘தேனீ’ பலகோடி ஆண்டுகளுக்குப் பின்னும் அதே ஆறுகோண
வடிவம்தான். மிகச் சிறந்த சமூக வாழ்வியலைக் கொண்டது ‘தேனீ’. மனிதனிடத்தில் வயிறு மனத்தை ஆளுகிறது எனவே பேராசையுடன்
செயல்பட்டு தன்னைத்தானே அழித்துக்
கொள்வதோடு மற்ற உயிரனங்களையும் அழிக்கிறான். 6 ஆம் அறிவைத்தான் கேட்கவேண்டும்.