2006 ஆண்டு இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழகம் எலுமிச்சம் புல் சாறு அருந்துவதால் இதிலுள்ள “சிட்ரால்” என்னும் வேதிப் பொருளால் புற்று நோய் செல்கள் தற்கொலை (#Apoptosis) செய்து கொள்வதாக கூறியுள்ளனர். அதே சமயம் நல்ல செல்களுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றும் கண்டறிந்தனர். இதனால் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் எலுமிச்சம் புல் விற்பனையில் பயனடைந்ததாக படித்தேன். நல்ல பயனுள்ள செய்தியாக மனதில் பட்டது எனவே உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எளிதாக தொட்டிகளில் கூட வளர்க்கலாம் என்பது எனது அனுபவம். இதன் எண்ணெய் நமக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகிறது. பொதுவாக, வாசனைக்காக இதன் எண்ணெய் சோப்புகளிலும், தரையை துடைக்க உதவும் திரவங்களிலும் பயன்படுத்துவார்கள். தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் சமையலில் பயன்படுத்துகிறார்கள். நானும் எனது நண்பர்கள் சிலரும் தேனீருடன் இதனையும் சேர்த்து அருந்துகிறோம் மிக்க சுவையாகவும், சுறுசுறுப்பையும் தரும். பனிகாலங்களில் இதமாக இருக்கும். சற்று விரிவான வாசிப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.http://www.israel21c.org/bin/en.jsp?enZone=Health&enDisplay=view&enPage=BlankPage&enDispWhat=object&enDispWho=Articles%5El1272
“புற்று நோயும் கோதுமைப் புல் சாறும்” என்ற எனது பதிவினை படிப்பதற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்
http://maravalam.blogspot.com/2007/09/blog-post.html
#Apoptosis--noun: a type of cell death in which the cell uses specialized cellular machinery to kill itself; a cell suicide mechanism that enables metazoans to control cell number and eliminate cells that threaten the animal's survival. In other words, cell commits suicide.)


அருகே திரு. சட்டையில்லா சாமியப்பன் அவர்கள்.
அண்மையில் கோவையில் நாட்டுக் கோழி, ஆடு வளர்ப்பு பயிற்சி தருவதற்காக வந்திருந்த திரு.ராஜ் டேனியல் B.Sc அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீண்ட கால அனுபவமிக்க இவர் காந்திகிராம் கிராமிய பல்கலைகழகம், காந்திகிராம்,(திண்டுக்கல்) கிராம மேம்பாட்டு திட்டங்களில் பணியாற்றியவர். மேலும் பல்வேறு நிறுவனங்களில் ஆலோசகராக, வழிகாட்டியாக, பயிற்சியாளராக, உள்ளார்.
அதிக இரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தியதால் இயற்கை சமன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகள் வலுப் பெற்றதன் விளைவுகளை விவசாய தற்கொலைகள் விபரமாக அறிவிக்கின்றன. ஆனால் எந்தெந்த பூச்சிகள் எந்தெந்த பயிர்களை தாக்குகின்றன , கட்டுபடுத்தும் முறைகள் பற்றி புத்தகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றும். இத்தேடலில் இருந்த போது இத்துறை சாரந்த பேராசிரியர் ஒருவர் எனக்கு
இந்நூல் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது


சென்ற வாரம் நண்பரின் தோட்டத்திற்கு சென்றிருந்தேன். மாவுப்பூச்சியின் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. தெரிந்தவர்களிடம் கேட்டபோது பொதுவாக வெயில் காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றார்கள். ஆனாலும் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாக தோன்றியது. பப்பாளி, மா, கொய்யா, வாழை, மல்பெரி என எல்லா பயிர்களிலும் இருந்தது.
செம்பருத்தியில் காணப்பட்ட மாவுப்பூச்சி இன்று கள்ளியில் கூட இருக்கின்றது என்றால் அதன் சக்தியை கணக்கிட்டு பாருங்கள். இயற்கையின் சமன் செய்யும் திறனை அழித்தால் முடிவு எல்லா உயிர்களுக்கும் பாதிப்புத்தான். அதில் மனிதன் தன் பேராசை காரணமாக அற்ப பூச்சிகள்தானே என்று இரசாயன கொல்லிகளைக் கொண்டு அழிக்க ஆரம்பித்ததின் விளைவுகளை நாம் லட்சதிற்கும் மேல் விவசாய தற்கொலைகளாக படிக்கிறோம். இரசாயன கொல்லிகளைக் குறைத்து இயற்கை பூச்சிவிரட்டிகள், உயிரியல் முறைகளை உபயோகித்து கட்டுப்படுத்துவோம்.
இவ்வகை பூச்சிகளுக்கு இயற்கை எதிரிகளை கண்டு கட்டுப்படுத்துவோம். உழுது, எரு இட்டு, களையெடுத்து நீர் பாய்ச்சி அறுவடையில் கூட பாதிப்பு. இதற்கு யாரேனும் உதவ முடியுமென்றால் பின்னூட்டமிடுங்கள்.







