Showing posts with label நீர் மேலாண்மை. Show all posts
Showing posts with label நீர் மேலாண்மை. Show all posts

Sunday, August 11, 2013

உத்தரகாண்ட் மாநில பேரிடரும், “சிப்கோ” இயக்கமும்


மர அழிப்பிற்கு முக்கிய காரணம்  "நகர சிந்தனை"
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் (Cloud burst) ஜுன் மாதம்  ஏற்பட்ட தொடர்  மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. கேதார்நாத், பத்ரிநாத். ஹரித்வார், ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், என்று வெள்ள பிரளயம்  அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, சாலைகள் உடைப்பு, ஆறுகளில் பெருவெள்ளம், பல கட்டிங்கள் இடிந்தது, ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகள் என்பவை  நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பதில் ஜயமில்லை. ஒரு சம்பவம் நடந்தால் எப்படி, எப்போது என்று கேட்பதை விட, ஏன் என்று சிந்தித்தால் பிரச்சனையை எதிர்காலத்திலாவது எளிதாக கையாள முடியும்என்பார்கள்

வரலாற்று சிறப்புமிக்க கேதார்நாத் கோவில்
 வெள்ளப் பெருக்கில் ரிஷிகேஷ் சிவன் சிலை
இந்த பேரிடர் ( Disaster) ஏன்? என்ற கேள்வி விர்க்க முடியாததாக உள்ளது.  40 ஆண்டுகளுக்கு முன்பே சிப்கோ இயக்கம் தனது தொடர் போராட்டத்தால் இந்த பேரழிவை தடுக்க பல்வேறு இன்னல்களுக்கிடையே எடுத்த  முயற்சிதான் இந்த அளவிற்காவது குறைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. சிப்கோ இயக்கம் அதிகமாக பெண்களால் முன்னெடுக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு

சிப்கோ இயக்கம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டது 
மக்களின்  பங்களிப்பு  இயக்கத்தின் வெற்றி.
இந்த புண்ணிய பூமியை வரும் தலைமுறையினரும் வணங்கவும், பாதுகாக்கவும்  வேண்டுமானால் மரம் வெட்டுதலை தவிர்த்தல்,  மரம் வளர்ப்பு,    மலைகளை தாரை  வார்ப்பதை  தவிர்த்தல்  போன்றவை பயன் தரும்.

சிப்கோ இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

நிகமானந்தா கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்
http://www.maravalam.blogspot.in/2013/03/blog-post_22.html


Wednesday, June 26, 2013

“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்



தாராளமயம், உலகமயம் என மக்களுக்கெதிரான சட்டங்கள், திட்டங்கள் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் உலக மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலையில் மக்கள் தாங்களே வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம். குறிப்பாக நீராதாரத்தைக் காப்பதில் தமிழகத்தில் சில ஊர்களில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒவ்வொரு சிற்றூர்களிலும் நிகழ்ந்தால் எங்கும் சுபிட்சம் எதிலும் நிறைவு.   

சில  நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு

சேலம் மூக்கனேரி
மண்திட்டுக்ககளில் மரங்கள்


சேலம் மூக்கனேரி தூர்வாரப்பட்டு ஏரியின் நடுவில் மண்திட்டுக்கள் அமைத்து மரங்கள் வளர்க்கப்படும் அற்புதக் காட்சி.

குளம் காப்போம் குலம் காப்போம்

மண் திட்டுக்கள் உருவாக்கம்
கோவை மாநகரில் பெரியகுளத்தில் குளம் காப்போம் குலம் காப்போம் மூலம் தூர்வாரும் பணி கடந்த சிலவாரங்களாக நடைபெற்று மண் திட்டுக்கள் உருவாகியுள்ளன.

காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் சீரமைக்கப்பட்டு வாருங்கள் காடு வளர்ப்போம் நிகழ்வு வரும் 29-06-2013 அன்று நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
இதுவரை அங்கே செய்த வேலைகளை பேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார்கள். அதன் தொகுப்பு கீழே உள்ளது.



சென்னையின் குடிநீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகின்ற 3,4 - 08-2013 (இருதினங்கள்) நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்த நிகழ்வுகள் பற்றி பகிர்ந்திருக்கிறேன். வேறு நிகழ்வுகள் நடைபெறுமானால் பகிருங்கள், தெரிவியுங்கள்.



Photographs Source : Face Book & blogs

Friday, March 22, 2013

நிகமானந்தா – கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்




மாத்ரி சதன் எனும் ஆசிரமத்தின் 34 வயதான சாமியாரான நிகமானந்தா, ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகளும், வழியெங்கும் நூறுக்கும் மேற்பட்ட சிறு, பெரு நகரங்களின் சாக்கடைகளும் கங்கையில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, கங்கையைக் காக்கக் கோரி 1998இல் 73 நாட்களும், 2010இல் 68 நாட்களும் உண்ணாவிரதம் இருந்தார். கங்கைக் கரையோரப் பகுதிகளில் இயங்கிவரும் சட்டவிரோதக் கல்குவாரிகளை அகற்ற வேண்டும், கும்ப் எனுமிடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், கங்கையைக் காக்க அவர் கடந்த 2011 பிப்ரவரி 19ஆம் தேதியன்று, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 2011 ஜூன் 13ஆம் தேதியன்று சர்ச்சைக்குரிய முறையில் மரணமடைந்தார்.
இந்தியாவின் புண்ணிய நதி காப்பாற்றப்பட வேண்டும், இந்திய விவசாயம் தழைக்க வேண்டும், நாளைய தலை- முறையினருக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒரு புண்ணிய நதியின் புனிதம் காக்க உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த மகான். இவரது தியாகம் சரியான முறையில் மக்களிடம் சென்றடையாதது மிகப்பெரிய துரதிஷ்டம். இந்த இளவயதில்  இலட்சிய நோக்கில் உயிர் துறந்த மகான் நிகமானந்தா அவர்களின் தியாகம் காலத்தால் மறக்கபடலாம் அல்லது மறைக்கப்படலாம். காலம் பதில் தரும்.  இந்த உலக நீர் நாளில் மகான் நிகமானந்தாவிற்கு  இந்த வலைப்பூவின் நினைவஞ்சலி!!!!
 

Wednesday, March 20, 2013

தண்ணீர் ---- புதிர்கள் நிறைந்த தெய்வாம்சம் மிக்க பொருள்.

டாக்டர். மசாரு இமடோ தனது புத்தகத்துடன்

நீரின் சிறப்பு அம்சம் அதன் 3 நிலைகள் திட, திரவ  வாயு நிலைகள். அதன் 3 நிலைகளிலும் அவை ஜீவராசிகளுக்கு வாழ்வளிப்பதுதான் பெரும் சிறப்பு. தொழிற்புரட்சிக்கும், போக்குவரத்திற்கும் நீராவி என்ஜின்  வித்திட்டது. நீராவி இல்லாத மனித வாழ்வை எண்ணிப் பாருங்கள்??

போக்குவரத்தை மாற்றியமைத்த நீராவி எஞ்சின்


இன்றைய நீர்,அனல்,அணு மின்சாரம்?? நீர் இல்லையேல் வாழ்கை ஸ்தம்பித்துவிடும்.


பிராத்தனையின் வலிமை

நீருக்கு ஜீவராசிகளைப் போன்று நினைவாற்றல், மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் திறன், பிராத்தனைகளுக்கு உட்பட்டு தன்னைத்தானே தூய்மையாக்கும் பண்பு  உண்டு என்பதை டாக்டர். மசாரு இமடோ தனது “The Hidden messages in water” (தண்ணீரில் மறைந்துள்ள செய்திகள்) என்ற நூலில் விளக்கமாக தந்துள்ளார். பிரமிப்பை தரும் படங்களுடன் அவை விளக்கப்பட்டுள்ளது. நியுயார்க் டைம்ஸின் பிரபல புத்தக வரிசையில் இந்த நூலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவாற்றல், மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் திறன்


ஒவ்வொரு மதமும் மனிதர்கள் புனிதம் பெற தண்ணீருக்கு முக்கியத்துவம் தருகின்றன. மனிதர்கள் மதத்திற்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் தந்து தண்ணீரை மாசுபடுத்தி புனிதமற்றதாக்குகிறோம். விளைவுகளை அனுபவித்தும் நாம் திருந்தாமல் இருப்பது அடுத்த தலைமுறையினரை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. மலைகளின் வனவளம் சமவெளியின் நிலவளம் எனவே வனவளம் காப்போம். மரம் நடுவோம். மழை பெறுவோம். 

Saturday, March 2, 2013

மனதை கவர்ந்த நீர் சிக்கனப் படம்

பொதுக் குழாய்கள் அடைக்கப் பெறாமல் நீர் வீணாவதை அனுதினமும் பார்த்து வருகிறோம். அதற்கு விழிப்புணர்வு தரும் 47 வினாடிகள் கொண்ட  இந்த படம் நமக்கு ஒரு பாடம்.




Friday, March 1, 2013

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!



குறைந்து வரும் மழையளவு, அழிக்கப்படும் காடுகள், குறைந்த முதலீட்டில் தண்ணீரை கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகள், இயற்கையை அழித்து பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என நம்பும் இன்றைய நவ நாகரீக மக்களுக்கிடையே, ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆண்டு முடிவெடுத்து 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும்  மார்சு மாதம் 22 ஆம் தேதியை உலக நீர் நாளாக அறிவித்து பல்வேறு கருபொருட்ளில் உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. 1994 தொடங்கி 2013 வரை நடந்த விழிப்புணர்வு கருபொருட்களை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முடிந்தால் உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Saturday, June 16, 2012

தேசீய நீர்கொள்கை - 2012


ஜீவராசிகளின் வாழ்வாதாரம் பஞ்ச பூதங்கள். ஜீவராசிகளில் ஆறாம் அறிவு பெற்ற மனிதன் தன் இனத்தை அழிப்பதோடு மற்ற ஜீவராசிகளையும் அழிப்பதில் தொழிற்புரட்சிக்குப் பின் மிகச் சிறப்பாக செயல்படுகிறான். திட்டங்களையும், சட்டங்களையும் இட்டு சுரண்டுவதில் அவனுக்கு நிகர் அவனே. நிலத்தில் ஆரம்பித்த ஆசை இறுதியாக கச்சா எண்ணையிலிருந்து மாறி மூன்றாம் உலகப் போர் நீருக்காக என்று கணிக்கும் அளவிற்கு மாறியுள்ளது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை தங்களது கட்டுப்பாட்டில் தக்கவைக்க பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நிதி நிறுவனங்களுடன் கை கோர்த்து ஆர்ப்பரிக்கின்றன. ஆனால் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்பதை சென்ற வாரம் வெளியான மத்திய அரிசின்  தேசீய நீர்கொள்கை 2012 பற்றி பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதித்ததும் மக்களும் அதனைப் பற்றி கவலைப்படாததும்தான். ஒரு வாழ்வாதார உரிமையில்  ( நில உரிமையாளர்களின் நிலத்தடி நீரை அவர்களுக்கு உரியதாக்கும் Easement Acts 1882 இல்) மாற்றங்கள் கொண்டு வந்து தனியார்க்கு  தாரை வார்க்கும் முயற்சி சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இம்முறை தலை தப்பியது. ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் பறிக்கப்படும் இது காலத்தின் கட்டாயம். பறிக்கப்பட்டால் தமிழகத்தின் விவசாயத்தை எண்ணிப் பாருங்கள்??? பருவ மழை ஆரம்பிக்கும் நிலையில்  மழைநீர் சேமிப்பை உங்கள் இல்லங்களிலும், பண்ணைக் குட்டைகளை உங்கள் விவசாய நிலங்களிலும் ஆரம்பியுங்கள். தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் சமுதாயத்தில் அமைதியின்மை தோன்றும்.

இன்றைய மழை நீர்
நாளைய குடி நீர் மற்றும் உயிர் நீர்.

Thursday, March 22, 2012

பேரரசன் ஷாஜகான் (நீர் கிடைக்காமல்) சரணடைந்த வரலாறு.

இந்த வருட உலக நீர் நாள் அன்று தண்ணீரினால் நமது நாட்டில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வு ஒன்றையும், அதே சமயம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேமிப்பை சிறப்பாக நடைமுறைப்படுத்தி  மக்களின் நீர்த் தேவையை  ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டதையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆக்ரா கோட்டை
ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மகால்


ஆக்ரா கோட்டை அகழியுடன் கூடிய அழகுமிகு கோட்டை. பேரரசன் ஷாஜகான், மகன்  ஔரங்சீப் அவர்களால் இந்த கோட்டையில் சிறை வைக்கப்பட்டு தாஜ்மகாலை பார்த்தே இறந்ததாக சரித்திரம் கூறுகிறது. மழைநீர் சேமிப்பிற்கு சிறப்பான அமைப்புக்களை ஏற்படுத்தி அந்த காலத்திலேயே யமுனை ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு மேல் நிலை தொட்டிகளில் நிரப்பி அவற்றிலிருந்து செயற்கை நீருற்றுக்கு நீர் சென்றதாக கல்வெட்டு கூறுகிறது. இன்றும் இந்த நீர்யேற்று முறை புதிர்தான். ஷாஜகான் ஆக்ரா கோட்டையில் இருந்தபோது யமுனை ஆற்றிலிருந்து வரும் நீரைத்தான் அருந்துவார். ஆற்று நீர் அந்த காலகட்டங்களில் குடிப்பதற்கு ஏற்றதாயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகனுடன் சண்டையிட்ட  போது அந்த நீர் வரும்  வழியை மகன் ஔரங்சீப் மறித்ததால் வேறு வழியின்றி  ஷாஜகான் ஜூன் 8 - 1658 வருடம் சரண்டைந்ததாக அங்குள்ள கல்வெட்டில் பார்த்தேன். உலக புகழ்மிக்க தாஜ்மகாலை கட்டிய பேரரசன் வீழ்ந்த வரலாற்றின் பின்னால் தண்ணீர்தான் இருக்கிறது என்றால் வியப்பாகத்தான் உள்ளது.
அழகிய தோட்டங்கள்
மழைநீர் சேமிப்புப் பாதை
மழைநீர் சேமிப்புப் பாதை
யமுனை ஆற்றிலிருந்து அகழிக்கு நீர் வரும் வழி
கோட்டையைச் சுற்றி அகழி

Shahi - hammam & water supply system (c. 1570-1658 A.D.)

The shahi- hammam, also called ghusl-khanah, was originally built by akbar and was renovated by shah jehan. It is a closed complex of octagonal halls and rooms, interconnected by corridors, with only a few jali openings on the river-side. The instrument room above the furnaces had two large deghs (pots) of brass and copper.clay and copper pipes, sunk mysteriously in the masonry walls, were conducted to other rooms some of which also had miniature tanks hidden in corners at dado-height the secret of this mechanism is not known to us today. Construction is in brick masonry but pavements and dados were originally finished in white marble. Walls were stuccoed and painted. Every room is connected by a hypocaust-system. A ventilator is provided at the apex of each cupola shaped domed ceiling. Some backyard quarters served the purpose of imperial toilet. Its mechanism shows that some sort of air-conditioning was worked and this was mainly used as a summer palace for conducting business of confidential nature, as foreign travellers have observed. It ranks among the finest hammams of the mughals.

There are three deep tanks on its roof. These were filled by the river-water, drawn by rehant (water-wheel) near the khizri or water-gate. From these overhead tanks, water was supplied to the fountains, water-falls and tanks of nagina-masjid, machchhi bhawan, shish-mahal ano- muth amman-burj through water-tight clay and copper pipes and open nalis. River water in mughal times was clean pure and fully potable. King shah jehan used it for drinking. Aurangzeb besieged the fort after the battle of samogarh and stopped its water supply from the river forcing the king to surrender on 8 june 1658 thereafter, aurangzeb secured the fortgates by additional barbicans

Sunday, March 11, 2012

உலக நீர் நாள் 2012 விழிப்புணர்வுப் படம்

இந்த வருட 2012 உலக நீர்  நாளுக்கான விழிப்புணர்வு புகைபடத்தின் HTML Code ஐ கீழே தந்திருக்கிறேன். வலைப் பூ / வலைதளம் வைத்திருப்பவர்கள்  இதனைப் பயன்படுத்தி தங்களின் வலைப் பூ / வலைதளங்களில் இட்டு விழிப்புணர்வை  ஏற்படுத்துங்கள்.

 */   <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKu6e2p0VWFajgk107yGAW3FdpsKon61GDCmXE_E6XFfeft7PAG7ublXfOL6s7NazDubNf3cOPPJACpaXYj0PSBvEvkgm72zCw9Ls2giIf7yphyphenhyphenHyjoFsSrZ6ayIAR3hgwGeh54PFxkTk/s1600/wwd2012.psd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKu6e2p0VWFajgk107yGAW3FdpsKon61GDCmXE_E6XFfeft7PAG7ublXfOL6s7NazDubNf3cOPPJACpaXYj0PSBvEvkgm72zCw9Ls2giIf7yphyphenhyphenHyjoFsSrZ6ayIAR3hgwGeh54PFxkTk/s400/wwd2012.psd.jpg" width="200" /></a></div>
<br />   */


Thursday, November 24, 2011

வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் மழைநீர் சேமிப்பு

முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் உடன்

5-வது  உலக வெட்டிவேர் மாநாட்டின் (ICV-5) முடிவுகளை தொகுத்து சிறப்பு  விருந்தினர்கள் வழங்கினார்கள். அதில் முனைவர். இலட்சுமண பெருமாள்சாமி அவர்கள் இருந்தது மகிழ்ச்சியைளித்தது. உலக வெட்டிவேர் அமைப்பின் முன்னாள் தலைவர் முனைவர். டேல் ராக்மிலர் பேசும் போது வெட்டிவேர் மூலம் நிலத்தடிநீர் உயர்த்தவேண்டுமென கேட்டுக் கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தார். மெதுவாக எனது 2 நிமிட படம் பற்றி கூறினேன். திரையிட்ட பின் பாராட்டியதோடு மாநாடு முடிந்தவுடன் காங்கோ நாட்டிற்கு செல்வதாகவும் அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு மொழிமாற்றம் செய்து காண்பிப்பதாகவும் கூறினார். படத்தை உருவாக்கும் போது பள்ளிக் குழந்தைகளையும், நமது மலைப்பகுதிகளையும், ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளையும் எண்ணி உருவாக்கினேன் அது நிறைவேறுவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மாநாட்டிற்கு ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். நமக்காக தமிழ் வாசகங்களுடன் உங்கள் பார்வைக்கு.

Wednesday, October 26, 2011

சரிவுகளில் மழைநீர் சேமிப்பு- இரு நிமிட படம்.


வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகி சில தினங்கள் ஆன நிலையில் திரும்பவும் நாம் சில எளிய முறைகளை கடைபிடித்து மழைநீரை  சேமிக்கவேண்டும். எனது பழைய பதிவு உங்கள் பார்வைக்கு. http://maravalam.blogspot.com/2007/09/blog-post_25.html

வருகின்ற 28 -30 தேதிகளில் லக்னோ நகரில் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு நடைபெறுகிறது. அதன் பொருட்டு வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் நீரை எளிதாக சேமிக்கலாம் என்ற 2 நிமிட படம் ஒன்றை உருவாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மாநாடு மிக சிறப்பாக நடைபெற்று உயர்ந்த தொழில்நுட்பங்கள் கிடைக்கப் பெற உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

Tuesday, March 22, 2011

உலக நீர் நாள்


ஓவ்வொரு வருடமும் ஒரு குறிகோளுடன் கொண்டாடப்படும் உலக நீர் நாள் இந்த வருடம் நகரங்களுக்குக்காக தண்ணீர் என்ற குறிகோளுடன்  கொண்டாடப்படுகிறது.

குறைந்து வரும் மழை அளவு, பெருகி வரும் மக்கள் தொகை, உலகமயம், தாராளமயத்தில் கொள்ளைபோகும் விவசாய நிலங்கள் விவேகமில்லாத விஞ்ஞான வளர்ச்சி, பன்னாட்டு கம்பெனிகளின் பிடியில் பொருளாதாரம், சுற்றுசுழல், மற்றும் விவசாயம், போன்ற காரணங்களால் கிராமங்களிலிருந்து குடிபெயரும் மக்கள் அதிக வேலை வாய்ப்புகள் தரும் நகரங்களை நோக்கி வரும் அவலநிலை எல்லா வளர்ந்து வரும் நாடுகளிலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த இடமாற்றம் நகரங்களின் சுற்றுச்சுழலையும், தண்ணீர் தட்டுபாட்டையும்  பெருமளவு ஏற்படுத்துகிறது. அதற்கான தீர்வுகள் நம் கையில்தான் உள்ளது. மழையை தருவிக்க பெருமளவில் மரங்களை நடுதல், மழை நீர் சேமிப்பு, சேமித்த நீரை குறைவாக உபயோகித்தல், மறுஉபயோகம், மறுசுழற்சி ( 3R  Reduce, Reuse, and Recycle) என்ற கொள்கையை கடைபிடித்து உபயோகித்தால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கமுடியும். தொழிற்சாலை கழிவுகள் பெருமளவு நீராதாரங்களில் விடப்படுகிறது. வேலைவாய்ப்பை பாதிக்காதபடி இதற்கு முடிவு காணவேண்டும் இல்லையேல் அடுத்த வரும் பத்தாண்டுகள் ????? ஆண்டுகளாக இருக்கும்.

Friday, March 11, 2011

இந்த வருட " உலக நீர் நாள் " சின்னம்



மேலேயுள்ள படம் இந்த வருட " உலக நீர் நாள் " சின்னம். நகரங்களுக்கு தண்ணீர் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. படத்திற்கான   HTML Code கீழே உள்ளது . பதிவர்கள் இச்சின்னத்தை தங்களின் வலைப்பூக்களில் இட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை பிரபலபடுத்த அன்பாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP2n-Y8MjiLCmSf7g08GscA-HjuWVbKLPtar5dhz55LMzDSsPWP7nXnE_T1tqLQaLg7r7JFC-w9Je2CHloeRrDgW83qk8TMyGTRANjHXbAhBtvAuNNBWM0Rc6lnHT5mfKnbuuxYE_UMlE/s1600/wwd11+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP2n-Y8MjiLCmSf7g08GscA-HjuWVbKLPtar5dhz55LMzDSsPWP7nXnE_T1tqLQaLg7r7JFC-w9Je2CHloeRrDgW83qk8TMyGTRANjHXbAhBtvAuNNBWM0Rc6lnHT5mfKnbuuxYE_UMlE/s320/wwd11+copy.jpg" width="200" /></a></div>

Tuesday, February 15, 2011

நீர் சிக்கனம் - காய்ச்சலும் பாய்ச்சலும்.

நகரங்களில் உபயோகத்திற்கே நீர் பற்றாகுறையில் இருக்கும் போது கோடைகாலத்தில் செடிகளுக்கு நீரை காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் தந்தால் நீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதோடு நமக்கு பயன் தரும் செடிகளும் ஆரோக்கியமாக இருக்கும். பயன் தரும் செடிகளோடு அதிகமாக நீரை விரும்பும் மென்மையான தண்டுகளுடைய செடிகளையும் சேர்த்தே வளர்ப்பது.
ஈரத் தன்மை குறையும் போது இலைகள் 
தளர்ந்து வளைந்து கீழே தொங்க ஆரம்பிக்கும்.

நீர் ஊற்றிய பின் இலைகள் நன்கு பெரிதாகிறது
சற்று நேரத்தில் செடி நிமிர்ந்து பழைய நிலைக்கு வந்துவிடுகிறது.

ஈரப்பதம் தொட்டியில்  அல்லது மண்ணில் முற்றிலும் காய ஆரம்பிக்கும் முன் இந்த செடிகளின் இலைகள் தளர்ந்து வளைந்து கீழே தொங்க ஆரம்பிக்கும் போது நீர் விட்டால் சற்று நேரத்தில் பழைய நிலைமையை அடைந்துவிடும். நீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பால்சம், கோலிஸ்,சாமந்தி வகை செடிகள் இதற்கு ஏற்றவை. இதே முறையை நாம் விளைநிலங்களிலும் நடைமுறைப்படுத்த இயலும்.

Wednesday, September 8, 2010

உலக மழைநீர் சேமிப்பு கூட்டமைப்பின்( International Rainwater Harvesting Alliance ) பரிசு பெற்ற குறும்படம்.

உலக மழைநீர் சேமிப்பு கூட்டமைப்பு ( International Rainwater Harvesting Alliance )ஜெனிவா நகரில் 2002 ஆண்டு நவம்பர் மாதம் முதல்  செயல்பட்டு வருகிறது. மழைநீர் சேமிப்பின் அவசியம் கருதி உலகின் பிரபல நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்களுடன் சேர்ந்து பிரச்சாரம், ஆலோசனை, அனுபவம், தாங்குதல் மற்றும் பகிர்தல் போன்ற பல காரியங்களை வறட்சி மிகுந்த பகுதிகளில் செய்து வளமான வாழ்விற்கு உதவி வருகிறன்றனர். 2009 ஆண்டு குறும்பட போட்டியில் பிரேசில் நாட்டின் திரு. ரோஜர் எல் சாண்டோஸ் அவர்களின் குறும்படம் ‘Right Under Our Nose’ முதல் பரிசை (Raindrop Award Geneva 2009 ) தட்டிச்சென்றது. இன்றைய மனிதன் செய்யும் தவறான வாழ்கை முறையை சுட்டிக் காட்டி மழைநீரை எப்படி சேமித்து அழிவிலிருந்து தப்பி மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை 90 வினாடிகளில் படத்தில் காட்டுகிறார். அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.




உலக மழைநீர் சேமிப்பு கூட்டமைப்பின் வலைதள முகவரி :
http://www.irha-h2o.org/

Monday, August 16, 2010

தொட்டிகளில் எளிதாக செடிகள் வளர்க்க சில யுக்திகள்.

நகரவாழ்கையில் அதிக செலவின்றி அதேசமயம் தேவையற்ற சில பொருட்களைக் கொண்டு சிறப்பாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க இயலும். உரித்த தென்னை மட்டைகளை எவ்வாறு அகற்றுறுவது என்றாகிவிடும். அதேபோன்று பயணம் முடிந்து வரும் போது குடிநீர் “பெட்” பாட்டில்களை தூக்கி எறிந்து மாசுபாட்டை உண்டாக்கிவிட்டு வருவோம். இந்த இரு பொருட்களையும் படங்களில் காட்டியவாறு தொட்டிகளில் செடி வளர்க்க உபயோகிக்கலாம். வேர் பகுதிக்கே நீர் செல்வதால் மிகக் குறைந்த அளவு நீர் ஊற்றினாலே போதும். மெதுவாக வெறியேறும் நீரை தென்னை மட்டைகள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். மண் சிதறுதல், நீர் தேங்கி வேர் அழுகுதல் போன்றவை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றினாலே போதும்.

மட்டையை நிரப்புங்கள்
மூடியில் துவாரம் செய்யுங்கள்
மூடியை கீழாக மட்டையின் அருகில் வையுங்கள்
மண் இட்டு நிரப்புங்கள்
செடியை நடுங்கள்
நீரை ஊற்றுங்கள்.