இரு வாரங்களுக்கு முன் சத்தியமங்கலம் - கோபி சாலையிலிருந்து சுமார் 2 கீ.மீ தூரத்தில் பசுமை நிறைந்த இப்பகுதியில் இரு மரங்களில் இயற்கையாக கட்டிய சுமார் 40 மலைந்தேனீக்களின் கூடுகளைப் பார்த்து அதிசயப்பட்டேன். மரங்களின் உரிமையாளர் திரு. மகாலிங்கம் சுற்றுவட்டாரத்தில் இது போன்ற தேன் கூடுகள் இல்லையென்றும் ,அவர்கள் தோட்டத்திலேயே இதே போன்ற மரம் இருந்தும் கூடுகள் இல்லாததை காண்பித்தார்.
காய்கறி பயிர்களில் நல்ல மகசூல் கிடைப்பதாக கூறிய அவர் டிராக்டர் கொண்டு நிலத்தை உழ முடிவதில்லை காரணம் புகை வாசம் வந்தாலே மனிதர்களை தேனீக்கள் தாக்க ஆரம்பித்துவிடுவதும் அது மாத்திரமன்று புகைபிடிப்பவர்களுக்கும் இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்றார். கூடுகள் 3 அடி வரை இருக்கும் போல் தோன்றுகிறது. பளு தாங்காமல் விழுந்து கிடந்த தேன் அடைகளைப் பார்த்தாலே பிரமிப்பாக இருந்தது. 
கீழே விழுந்த தேன் அடையுடன் திரு. மகாலிங்கம் தம்பதியினர்.




தமிழகத்தின் சுமார் 328 பறவைகளின் அங்க அடையாளங்கள், காணப்படும் இடங்கள், வாழ்வுமுறை, உணவு, குரல், இனப்பெருக்கம் என மிகத்தெளிவாக வண்ணப் படங்களுடன் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. ஆங்கிலம், தமிழ் கூடவே அறிவியல் பெயரும் இருப்பது பின்னாட்களில் குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். முனைவர்.K.ரத்னம் அவர்கள் தமிழ்துறைத் தலைவராக மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, தஞ்சாவூரில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









