5 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத இருக்கிறேன். தொடர்ச்சியாக வெளி மாநிலங்களில் மண்அரிப்பு மற்றும் வெட்டிவேருக்கான பயணங்கள், குறுங்காடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் மற்றும் அதன் தொடர்பான கண்காணிப்பு என இருந்ததில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். தொடர்பில் இருப்பவர்களின் விருப்பம், உபயோகமான சில அனுபவங்கள், விவசாயத்திற்கு உதவும் சில யுக்திகள், கட்டாய வீட்டு இருப்பு மீண்டும் என்னை எழுதத் தூண்டியுது.
நதியா மாவட்டநிர்வாகத்தின் காணொளி
2015 ஆண்டு துவக்கத்தில் மேற்கு வங்க மாநில தொண்டு நிறுவனம் ஒன்றிலிருந்து ஓர் அழைப்பு. ஆற்றோரங்களில் மண்அரிப்பை தடுக்க வெட்டிவேர் பயன்பாடு குறித்து ஆலோசனைக்கு அழைத்திருந்தார்கள். 2011 ஆண்டே அவர்கள் வெட்டிவேர் மூலம் மண்அரிப்பை தடுக்க ஆரம்பித்திருந்தார்கள். இருப்பினும் என்னை ஏன் அழைக்க வேண்டும் ? கேள்விகளுடன் சென்ற எனக்கு பிரமிப்பு காத்திருந்தது. இந்த எளிய புல்லை வைத்து 100 நாட்கள் வேலைவாய்ப்பு MGRNREA - "Mahatma Gandhi National Rural Employment Guarantee Act")மூலம் அவர்கள் செய்யவிருக்கும் இந்த சமுதாய முதலீடு (Social investment) அம்மாநிலத்தை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றி விவசாயத்தை மேம்படுத்தும் என மனக்கண் முன் நிறுத்திய போது பிரமிப்பு ஏற்பட்டது. 5 வருடங்கள் கடந்து இன்று அந்த சமுதாய முதலீடு பலனை தருவது மகிழ்ச்சியை தருகிறது. இதனை சிறப்பாக வடிவமைத்து செயலாற்றிய அனைத்து அரசாங்க அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்களும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றால் அது மிகையில்லை.












குளிர் காலத்தில் நீர் குறைவாக செல்வதால் கரைமட்டதிற்கும் நீர் மட்டதிற்கும் உள்ள இடைவெளி 6-7 மீட்டர் இருக்கும். மணல் கலந்து இருக்கும் மண். சரிவு சில இடங்களில் செங்குத்தாகவும் சில இடங்களில் உள்வாங்கியும் இருக்கும்.
பகுதிக்கு மேல் படகுகள் செல்லும் அளவிற்கு முழுவதுமாக நீரில் முழ்கடித்தது. இதுவரை 5 முறை முழுவதுமாக முழ்கியுள்ளது. இறுதியான வெற்றியைக் காண செப்டம்பர் வரை வெள்ள அரிப்பிற்கும், மார்சு வரை நீர் மட்ட குறைவால் ஏற்படும் மண் சரிவிற்கும் காத்திருக்க வேண்டும்.
இந்தப் பொழுது வரை மண் அரிப்பு ஏற்படாமல் வெட்டிவேர் அந்தப் பகுதியை காப்பாற்றியுள்ளது என்பதை மேலேயுள்ள படம் விளக்கம் தரும்.




‘வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு’ பற்றிய பழைய பதிவினைக் காண :-
இயற்கை கண் இமைத்தால் கூட போதும் மனித இனம் துவண்டுவிடுகிறது. சுனாமிகளும், புயல்களும், நில நடுக்கங்களும், சென்ற 10 ஆண்டுகளில் மிக அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் குறிபிட்ட இடத்தில்


இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி
அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும். 
கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது.
நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.
நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும்.
நிறைய மரங்களை நட்டு சுற்றுச் சுழலைக் காப்போம்.


