இந்திய வேளாண் ஆராய்ச்சிக்
கழகத்தின் ஓர் அங்கமான
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சமீபத்தில் "கரும்பு ஒரு கையேடு' என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
இருபத்தியோரு அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில், இரகங்கள், சொட்டு
நீர்ப் பாசனம், வெல்லம்
தயாரித்தல், இயந்திரங்கள்,
களை, நோய்
மற்றும் பூச்சி மேலாண்மை
போன்ற கரும்பு சாகுபடித்
தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக்
கூறப்பட்டுள்ளன.
இது தவிர, ஆறு
அத்தியாயங்கள் விவசாயிகளின் உடனடிப்
பார்வைக்கான பயனுள்ள
பல தகவல்களை (ready-reckoner type information) அளிக்கின்றன. தமிழக
சர்க்கரை ஆலைகளின் தொடர்புத்
தகவல்கள், விவசாயிகளுக்கான கடனுதவி, காப்பீடு
மற்றும் வளர்ச்சித் திட்டங்கள்,
கரும்பு விவசாயிகள் மற்றும்
விரிவாக்கப் பணியாளர்களுக்கான பிரத்தியேக இணையதளமான
கேன் இன்போ குறித்த தகவல்கள்
போன்றவை இடம் பெற்றுள்ளன.
இது தவிர, கேன் இன்போ இணையதளத்தின் ' வல்லுனரைக் கேளுங்கள் " பகுதியின் சில கேள்வி பதில்கள் 'பெட்டிச் செய்திகளாக ' இடம் பெற்று, இக்கையேட்டை ஒரு முழுமையான தகவல் பெட்டகமாகுகின்றன.
கூடுதல்
விவரங்களை , www.caneinfo.nic.in இணைய தள முகவரியில் பெறலாம்.
ரூ.
200 மட்டுமே (தபால்
செலவு உட்பட )
பிரதிகளுக்கு:-
‘Director, Sugarcane Breeding
Institute’
என்ற பெயருக்கு கோவையில் ஏதேனுமொரு வங்கியில் மாற்றத்தக்க
வகையில் வரைவோலை (DD) எடுத்து
இயக்குனர்,
கரும்பு
இனபெருக்கு நிலையம் ,
கோவை
– 641 007
என்ற
முகவரிக்கு அனுப்புங்கள்.











தாய்மொழியில் தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு தாவர வகைப்பாடுகள், அவற்றை அடையாளம் காணும் முறை பற்றி அறிய இந்நூல் பெரிதும் உதவும். எளிய உதாரணங்களுடன் படவிளக்கங்கள், இணைய வலைதளங்கள் பற்றிய குறிப்புக்கள் இருப்பதால் அனைவருக்குமே இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.




இது போன்ற இதழ்களை நாம் வாங்கிப் படிப்பதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்வதால் சிறப்பான சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
அதிக இரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தியதால் இயற்கை சமன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகள் வலுப் பெற்றதன் விளைவுகளை விவசாய தற்கொலைகள் விபரமாக அறிவிக்கின்றன. ஆனால் எந்தெந்த பூச்சிகள் எந்தெந்த பயிர்களை தாக்குகின்றன , கட்டுபடுத்தும் முறைகள் பற்றி புத்தகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று தோன்றும். இத்தேடலில் இருந்த போது இத்துறை சாரந்த பேராசிரியர் ஒருவர் எனக்கு
இந்நூல் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது

அதன் வகைகள், உடலமைப்பு, உணவு, வாழ்விடம், இனப்பெருக்க முறை,ஒவ்வொன்றின் விஷத்தன்மை என்று மிக சுருக்கமாக ஆனால் தெளிவாக வெளியிட்டிருக்கிறார்கள். இயற்கை சங்கிலியில் பாம்பும் ஒரு அம்சமே.
1991-92 ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த தமிழகம் அவ்விடத்தை இழந்துவிட்டது. மீண்டும் அவ்விடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். தேனீ வளர்ப்பை துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் மெ. முத்துராமன் அவர்களின் 
தமிழகத்தின் சுமார் 328 பறவைகளின் அங்க அடையாளங்கள், காணப்படும் இடங்கள், வாழ்வுமுறை, உணவு, குரல், இனப்பெருக்கம் என மிகத்தெளிவாக வண்ணப் படங்களுடன் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. ஆங்கிலம், தமிழ் கூடவே அறிவியல் பெயரும் இருப்பது பின்னாட்களில் குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். முனைவர்.K.ரத்னம் அவர்கள் தமிழ்துறைத் தலைவராக மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, தஞ்சாவூரில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
