Friday, November 28, 2008

Buy Nothing Day !!

வாங்குவதை தவிர்த்து, குப்பைகளை சேர்க்காமல் சற்றுச்சூழலை பாதுகாக்கும் நாள். இந்த அரக்கனுக்கு உணவை தவிர்க்கும் நாள். ஆம் இன்று 28-11-08 வட அமெரிக்காவிலும், நாளை 29-11-08 மற்ற நாடுகளிலும் Buy Nothing Day !!

நாமும் பங்கு கொள்வோம். மற்றவர்களிடம் செய்தியை பகிர்ந்து கொள்வோம்.

அதிக தொலைகாட்சி நிறுவனங்களால் ஓளிபரப்புச் செய்ய மறுக்கப்பட்ட(BUY NOTHING DAY 2006) விளம்பர படத்தை காண கீழே உள்ள தொடுப்பை பயன்படுத்துங்கள்.
http://maravalam.blogspot.com/2007/11/buy-nothing-day-2006.html

Tuesday, November 25, 2008

பதிமுகம்- Cesalpinia sappan

2003 முதல் தமிழக விவசாய்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளுடன் 7- 10 ஆண்டுகளில் ஒரு ஏக்கருக்கு 50லட்சம் - 60 லட்சம் என பரபரப்பாக பேசப்பட்ட சிறு மரம் “பதிமுகம்”. இதன் இயற்கை சாயத்திற்காக ஐரோப்பியர்கள் விரும்பினர். தென்அமரிக்காவில் பிரேசில் நாட்டில் அதிகம் இருந்தது. அதன் உரிமைக்காக ஐரோப்பிய நாடுகள் சண்டையிட்டுக்கொண்டது வரலாறு. வரலாற்று சிறப்புமிக்க அம்மரத்தைப் பற்றி சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


Uploaded on authorSTREAM by vincent2511


முதன் முறையாக PPT யில் இதனை வலையேற்றுகிறேன். ஆங்கிலத்தில் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

மாடித் தோட்டம், நகர விவசாயம் ஒரு பார்வை. (2)

மேலைநாட்டு விவசாய, பொருளாதார, சமூக அறிஞர்கள் ஆர்வமுடன் நோக்கும் நகரம் ஹவானா. சிறந்த ‘நகர விவசாயத்திற்கு’ பெயர் பெற்றது.

1991 ஆண்டு சோவியத் யூனியன் சிதறிய போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல், இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு காரணமாய் விவசாய உற்பத்தியில் மிக மோசமான வீழ்ச்சியை கண்டது கியுபா. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான சர்க்கரை (கரும்பு விவசாயம்) பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை காண துவங்கியது. அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இருக்கின்ற வளங்களைக் கொண்டு அங்கக வேளாண்மையில் துவங்கி இன்று ஹவானா நகரம் தனக்கு தேவையான காய்கறிகளில் 80% நகர விவசாயம் மூலம் உற்பத்தி செய்கிறது. தனியார் தோட்டம்(huertos privados), அரசாங்க பொதுநிலத்தில் தனியார் (அல்) கூட்டுறவு தோட்டம்(huertos populares), அரசாங்க தோட்டம்(organicponicos),என பிரித்து தங்களின் உழைப்பை தந்து தன்னிறைவு பெற்றுள்ளனர். நாமும் இதற்கான சிறு முயற்சியை மேற்கொண்டால் நாம் உயர்வதுடன் உலக சுற்றுச்சுழலுக்கும் நன்மை செய்தவர்களாகின்றோம்.

ஹவானா நகர விவசாயம் பற்றிய பி.பி.சி யின் படத்தொகுப்பு.

Source: Net.