Wednesday, June 5, 2013

2013 ஆண்டு சுற்றுச்சுழல் தின கருப்பொருள்- உணவு வீணாகுதல்


சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள்
இந்த வருட சுற்றுச்சுழல் தின  கருப்பொருள் உணவு வீணாக்குதல் பற்றியது. சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள் (Think, Eat, Save). ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் [UN Food and Agriculture Organization (FAO)] சில புள்ளிவிபரங்கள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. 


ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை நாம் வீணாக்குகிறோம். ஆனால் உலகின் 7 மனிதர்களில் ஒருவர் பட்டினியாக படுக்கைக்குச் செல்கிறார். 5 வயதிற்குட்ப்பட்ட 20,000கும் அதிகமான குழந்தைகள் தினமும் பசியால் மடிகின்றனர். இந்த உணவு உற்பத்தி என்பது 25% நிலம், 70% நன்னீர், 80% காடுகள் அழிப்பு மற்றும் 30% பசுமை குடில்  வாயுக்கள் வெளியேற்றத்தை உள்ளட்டக்கியது.


உணவு - நாம் உண்ணுவதற்கு ஏற்ப மாறுவதற்கு முன் உணவில் மறைந்துள்ள நீர் (Virtual Water), உணவு தூரம் (Foodmile), சமைக்க தேவையான எரிபொருள் மற்றும் நீர் (Cooking fuel+ Water),  சமைப்பவரின் திறமை + நேரம் (Cook’s ability+ Time) போன்ற பல்வேறு அம்சங்களைக் உள்ளடக்கியது. எனவே உண்ணும்  உணவை வீணாக்குவதால் மேற்கண்ட முக்கியமான அம்சங்களை வீணடிக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு அளவோடு உண்டு சுற்றுச்சுழல் காப்போம்.


மேலும் படிக்க:-
 

 

Friday, May 10, 2013

பரளிக்காடு “சுழல் சுற்றுலா”



கோடைவிடுமுறையில் பரபரப்பான நகர வாழ்கையிலிருந்து குளு குளு மலைவாசஸ்தலங்களை நோக்கி பயணித்து மிக அதிக தொகைகளை செலவழித்தும் உணவின்றி, நீரின்றி  கூட்ட நெரிசலில் சிக்கி கவலை தரும் பயணமாக மாறிவிடுவதுண்டு. மாறாக தமிழ்நாடு வனதுறையின் பரளிக்காடு சுழல் சுற்றுலா பரிசல் பயணம், கரைகளில் வனவிலங்குகள், அழகிய பறவைகள், ரீங்காரமிடும் வண்டுகள், ஒரு மணிநேர காட்டுப் பயணம் (Trekking), சுகமான ஆற்றுக் குளியல், சுவையான மதிய உணவு,  பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வாய்ப்பு என  இயற்கையை  ஒரு நாள் முழுமையாக பரபரப்பின்றி அனுபவிக்க ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்து விடுமுறையை இனிதாக கழியுங்கள்.
 
பரிசல் துறையின் முகப்புத் தோற்றம்

புங்க மரநிழலில் அமர்ந்து பேச ஆசனங்கள்

அனுபவமிக்க பரிசல் ஓட்டுனர்கள்

மனதை கொள்ளை கொள்ளும் பரிசல் சவாரி

சுவைமிக்க உணவை பரிமாறவிருக்கும் மகளிர் குழுவினர்


வழக்கமான உணவு

"ஸ்பெஷல்" உணவு ராகிக்களியுடன் கீரை

விளையாட ஊஞ்சல்

கோவையிலிருந்து பேருந்து வசதி உண்டு

இந்த உல்லாச பயணத்திற்கு நாம் தரும் தொகை பழங்குடி மக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதிகள், கல்வி, சுகாதாரம், குடிநீர், விவசாயதிற்கான உதவிகள் , தொலைதொடர்பு போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது.

தொடர்புக்கு

மாவட்ட வன அலுவலகம்,
கோவை வனக் கோட்டம்,
கோவை
வனவர் 90470 51011

L. தேசப்பன்
வனச்சரக அலுவலர்
காரமடை வனச்சரகம்
94433 84982.
Website : www.coimbatore.tn.nic.in
            : Baralikadu eco tourism

Monday, April 22, 2013

புவிதினம் ஏப்ரல் 22

எனது மனதை உற்சாகப்படுத்திய, பாதித்த இரு நிகழ்வுகளை இந்த புவிதினத்தில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எனக்கு ஏற்பட்ட  அதே உற்சாகம், பாதிப்பு உங்களுக்கும் ஏற்படலாம் என எண்ணுகிறேன்.
 



பரளிக்காடு என்ற இந்த  இடத்தில் இறங்கியவுடனே பிரயாணக் களைப்பு மாறி சில் என்ற காற்று தழுவிச் செல்ல என்னையும் அறியாமல் கண்களை மூடி சுத்தமான காற்றையும், சுகமான புங்கமர நிழலையும் அனுபவித்தது வர்ணிக்க வார்தைகள் இல்லை. இந்த நிலையில்தான் நமது முந்தைய சந்ததி நமக்கு இப்புவியை விட்டுச் சென்றார்கள்.

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் மத்திய அரசின் நிறுவனமொன்றிற்கு செல்லும் போது எடுத்தது. பசுகளை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில் உணவிற்காக போராடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த நிலையில்தான் நாம் இந்த இப்புவியை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகிறோமா?


சிந்தித்து செயல்பட்டால் மாற்றம் தரமுடியும். முடிவு மனிதனின்  கையில்!!!!

இன்றைய நிலை குறித்த எனது பழைய பதிவு
இன்றைய கிராம நீராதாரம்.