இடப் பற்றாக் குறையும், குறைவான சூரிய ஒளியும் இன்றைய பெருநகர மக்களின்
வீட்டுத்தோட்ட ஆசையை குறைக்கும் காரணிகள், கூடவே தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து பயப்படுத்தும். ஆனால் மாடி கைபிடி சுவர் பயனின்றி இருக்கும் அதனை
உபயோகித்து கீரையை வளர்க்க முடியுமா? என்று முயன்றதில் முடியும் என்று
தோன்றுகிறது. வளர்க்கும் பை முழுவதும் (செடி இருக்கும் இடம் தவிர)
மூடப்பட்டிருப்பதால் நீர் ஆவியாதலை வெகுவாக தவிர்த்து குறைந்த நீரில் களைகளின்றி வளர்க்க முடியும். அதன் படங்கள் உங்கள்
பார்வைக்கு
Monday, October 22, 2012
Wednesday, September 5, 2012
"பெட் பாட்டில்" மறுஉபயோகம் (Reusing Pet Bottles )
![]() |
| நதி ????????? |
“பெட் பாட்டில்” மறுஉயோகம் வருங்காலத்தில் மாசுபாட்டை குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எவ்வாறு அதனை செய்வது என்று பல்வேறு உபயோகங்களை புகைபடங்களாக எனது முகநூல் நண்பர்கள் பகிர்ந்தனர். அவற்றை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்களால் முடிந்ததை தேர்வு செய்து மாசுபாட்டை குறையுங்கள்.
Tuesday, September 4, 2012
அசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மரம்
![]() |
| அசோகமரமும் நெட்டி லிங்கமும் |
பெயர் : அசோகமரம்
தாவரவியல் பெயர் : Saraca asoca
ஆங்கிலப் பெயர் : Asoka Tree
தற்போதைய நிலை : அழிவின் விளிம்பு IUCN Status : Vulnerable (IUCN 2.3)
பாரம்பரிய இந்திய அடையாளங்களில் ஒன்று அசோகமரம். அசோகமரம் என்றவுடன் பொதுவாக
நம் நினைவிற்கு வருவது நெட்டிலிங்க மரம் தான். இராமாயன காலத்தில் சீதையை அசோக வனத்தில்
சிறை வைத்ததாக படித்திருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த உண்மையான மருத்துவ
குணமிக்க அசோகமரத்தை விட்டு நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பின்வரும்
சந்ததிகளுக்கு அடையாளப்- படுத்திவிட்டோம். விளைவு
இன்று நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பெரும்பாலானவர்கள்
நம்பிக் கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.
![]() |
| அசோகமர விதைகள் |
![]() |
| அசோகமர பூக்கள் |
![]() |
| அசோகமர காய்கள் |
![]() |
| அசோகமரம் |
இதன் தற்போதைய நிலைமை அழிந்துவரும் இனத்தில் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மரம்
சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின்
மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக ஒவ்வொரு பெண்கள் படிக்கும்
கல்விநிலையங்களில் இருக்க வேண்டிய மரம் அசோகமரம். வீடுகளிலும் வளர்க்கலாம்.
![]() |
| அசோக மர நாற்றுக்கள் |
Subscribe to:
Posts (Atom)












