Monday, November 26, 2007

செடிகள் வளர்க்கும் பை (Grow Bag )

மாற்றம் நிலையானது என்பார்கள்" இந்த வழியில் விவசாயத்தில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மண்ணில்லா விவசாயம் (Soil less culture). பொதுவாக நகர பகுதியில் இட பற்றாக்குறை
காரணமாக சிறு நகரங்களில் கூட அடுக்குமாடி குடியிருப்புக்கள் மிக அதிகமாக தோன்ற ஆரம்பித்துள்ளது. அதிக வாங்கும் சக்தி காரணமாக எல்லோரது வீட்டிலும் அழகு செய்யும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது குறிப்பாக அழகுச்செடிகள் வளர்ப்பு. கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் போது ஆர்வம் இருப்பினும் அதனை கவனிப்பதற்கு நேரம், நல்ல மண், தண்ணீர் (குடிப்பதற்கே இல்லாத போது) தேவை. இவைகளை பூர்த்தி செய்ய வந்துள்ள ஒரு பொருள்தான் இந்த செடி வளர்க்கும் பை (Grow Bag ). விவசாயத்திற்கு வேலையாட்கள் பற்றாக்குறை, குறைந்த நீர், இடம், அதிக மகசூல் என பசுமைக்கூடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

கோவையில் நடந்து முடிந்த விவசாய கண்காட்சி 2007 இல் காயர் வாரியத்தில் (Coir Board ) அரங்கத்தில் அறிமுகத்திற்கு வைத்திருந்தார்கள் விசாரித்தபோது ஏற்றுமதிக்கானது என்றார்கள். இதற்கு முன்பே வளர்ப்பிற்காக என்னிடம் இருந்ததால் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

புற உதா கதிர் (UV) தடுப்பு வசதியுடன் வெளி பகுதி வெண்மை நிறத்திலும் உள் பகுதி கறுப்பு நிறத்திலும் உள்ள இந்த பையினுள் 98 x 18 x 4.5 செ.மீ அளவில் சுத்தம் செய்யப்பட்ட தென்னை நார் கழிவு இருக்கும். நீர்
ஊற்றிய பின் 100 x 20 x 11 செ.மீ அளவில் பெருக்கமடையும். பை கிடைத்தவுடன் தேவையான அளவில் நாம் துவாரம் செய்து அதனுள் மண்புழு உரம் நிறைத்து நீர் ஊற்றினால் இயற்கை முறையிலும் திரவ இரசாயன NPK தர தற்போதுள்ள முறையிலும் பயிர் செய்ய தயாராகிவிடும்.

தென்னை நார் கழிவு ஒரு காலத்தில் சுற்றுச்சுழல் மாசுபாடு பொருளாக இருந்தது போய் இன்று உலக தரம்

வாய்ந்த மதிப்பூட்ட பட்ட பொருளாக மாறியுள்ளது.

நீரை மறு உபயோகம் (Reuse குறிப்பாக சமையலறை கழிவு நீர்) செய்யமுடிகிறது.

நீரின் அளவும் மிக மிகக்குறைவு.

களைகள் முளைப்பது இல்லை என்றே சொல்லலாம்.

மண் இல்லாமையால் வேர் மூலம் வரும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

மதிப்பு மிக்க மலர் மற்றும் ஸ்டிராபெரி (Strawberry)பழ சாகுபடிக்கு ஏற்றது (பசுமைக்கூடம்).

வீடுகளில் எளிதாக வைத்து காய்கறிகள் வளர்க்கலாம்.


Saturday, November 24, 2007

ஓளிபரப்பு மறுக்கப்பட்ட விளம்பரப் படம் (BUY NOTHING DAY 2006)

அதிக தொலைகாட்சி நிறுவனங்களால் ஓளிபரப்புச் செய்ய மறுக்கப்பட்ட(BUY NOTHING DAY 2006) விளம்பர படத்தை கீழே காணுங்கள்.


ஒன்றும் வாங்கக்கூடாத நாள் (BUY NOTHING DAY) 24-11-2007


இப்படி கூட ஒரு நாள் இருக்கிறதாவென்று நீங்கள் வியப்படையக்கூடும். ஆனால் கனடா நாட்டில் இது 1992 ஆண்டு அதிக வாங்கும் சக்தியினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய துவக்கப்பட்டது. பின் அது வலுப்பெற்று 1997 முதல் அமெரிக்காவின் அறுவடை நன்றி நாளுக்கு (நவம்பர் மாதம் 4 வது வியாழக்கிழமை American Thanksgiving Day) பின்வரும் வெள்ளிக்கிழமை வடஅமெரிக்காவிலும் மற்ற இடங்களில் சனிக்கிழமையும் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க ஆரம்பிக்கபடும் நாட்களில் இதுவும் ஒரு நாள் அன்று இது அனுசரிக்கப்படுவது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். வளர்ந்த நாடுகளில் தான் அதிக வாங்கும் சக்தி காரணமாக மக்கள் பருமனுடன் இருந்து நிறைய நோய்களை வரவழைத்து சுற்றுச்சூழலைக் கெடுத்தார்கள் என்றால் இன்றோ நம் நாட்டிலும் அதிக வாங்கும் சக்தி காரணமாக மக்கள் பருமனுடன் காணப்பட்டு சுற்றுச்சூழலைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டிலேயே ஒருவேளை உணவிற்கே வாங்கும் சக்தியில்லாத வேளையில் மக்கள் இருக்கும்போது எவ்வளவோ கலாச்சார சீரழிவுகளை காப்பியடிக்கும் நாம் ஏன் இந்த கருத்துள்ள நல்ல நாளை அனுசரிக்கக்கூடாது. இதனால் வருடத்தில் ஒரு நாளாவது குப்பைகளை தவிர்த்து சற்றுச்சூழலை பாதுகாத்து பிறர்க்கு உதவலாமே!!!