Tuesday, July 24, 2007

தமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை

இயற்கை வேளாண்மையில் சந்தை முக்கியமானது. சந்தைக்குத் தேவை சான்றளிப்பு. பொதுவாக
சான்றளிப்பு தனியார் வசம் இருப்பதால் அதைப் பெற அதிகம் செலவு செய்யவேண்டியுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் அங்கக சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின் படி அபீடா நிறுவன வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்பட உள்ளது.

இந்த வலைப் பதிவு இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களுக்கும்,பதன் செய்வோருக்கும்.விற்பனை செய்வோருக்கும், மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் தகவலாகச் சென்று பயனடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பதியப்படுகிறது.

மேலும் விபரம் பெற கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்:

இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை,
1424 எ, தடாகம் சாலை,
ஜிசிடி போஸ்ட்
கோவை- 641 013

தொலைபேசி எண் : 0422-2432984.

புகைப்படம்



என் வழி , தனி வழி !!


















முள்ளும், மலரும்




















உடை மாற்றிவிட்டேன்!!

Saturday, July 21, 2007

இழப்பும், அருமையும்.

எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை ஒரு பொருள் நம்மை அடையும் வரை உணர்வதில்லை
- அதே போன்று
ஒரு பொருளை இழக்கும் வரை அதன் அருமையை நாம் உணர்வதில்லை.


60 ஆம் ஆண்டுகளின் மத்தியில் இஸ்ரேல் நாடு ''சொட்டுநீர் ''பாசனத்தை உலகிற்கு
அறிமுகப்படுத்தியது. இந்த 40 ஆண்டுகளில் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை தரும்புரி மாவட்ட துல்லிய வேளாண்மை (PRECISION FARMING) செய்யும்
உழவர்களை கேட்டால் விரிவாக கூறுவார்கள். நல்ல விளைச்சல் அதேசமயம் கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. எனவே கேரளா, கர்னாடகா மாநில சந்தைகள் இன்று இவர்களை நோக்கி வருகிறது. ஒரு காலத்தில் வறண்ட மாவட்டமாக இருந்தது இன்று மற்ற மாவட்டங்களுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது.


அதே 60 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ''பசுமை புரட்சி '' அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வீச்சு இந்த 40 ஆண்டுகளில் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளும், கிராம மக்கள் நகரங்களை நோக்கி வருவதும் உறுதி செய்யும். அதே போன்று நம் நண்பர்களான மரங்கள்,கால்நடைகள், மண்புழு, பறவைகள், தேனீ, நன்மை தரும்நுண்ணுயிர்கள், அரியமருத்துவ தாவரங்கள் ஆகியவற்றின் அருமைகளை எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை பெருகிவரும் மருந்துக்கடைகளும், மருத்துவமனைகளும் உறுதி செய்யும்.

நடந்தவைகளை பாடமாகக் கொண்டு நண்பர்களை இணைத்து துல்லிய இயற்கை வேளாண்மை
செய்வோம்.