Monday, March 21, 2011

உலக வனநாள்


ஜப்பான் அணுமின் நிலையித்தில் வெடிப்பு.
மனிதர்களின் மிகப்பெரிய நண்பன் காடு.
காடுகளின் மிகப்பெரிய எதிரி மனிதன்
உலகத்தையே காக்கப் போராடும் பொதுநலவாதி மரம்....!
தன் இனத்தையே அழிக்கப் போராடும் சுயநலவாதி மனிதன்...!
 
காடு திருத்தி நாடாக்கினான்
விலங்குகள் அழிந்தன
மனிதன் விலங்கானான்.
நண்பர் திரு.ஈரோடு கதிர் அவர்களின் முகநூலில் (Face book) படித்தது
 
இந்த ஆண்டு வனநாளில் கிழக்குக் கடற்கரை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒரிசா, மற்றும் மேற்குவங்க அரசுகளும் மக்களும் தெளிவான அதே சமயம் நீண்டகால பாதுகாப்பு அரணைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கிழக்குக் கடற்கரை பகுதி அதிக அளவு இயற்கை பேரிடர்களைச் சந்திப்பதும், தமிழகத்தின் கடலருகே இரண்டு அணுமின் நிலையங்கள் இருப்பதும் இதற்குக் காரணம். சென்ற வாரம் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்துடன் கூடிய சுனாமி என்னும் ஆழிப்பேரலை அந்நாட்டு மக்களின் வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சுழலை புரட்டிப் போட்டுள்ளது. நீண்டகால இடைவெளிகளில் வந்த இந்த இயற்கைப் பேரிடர்கள் இப்பொழுது அடிக்கடி நிகழ்கிறது. 2004 ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை லட்சங்களில் மக்களை அள்ளிச் சென்றது. ஜப்பானில் ஏற்பட்டது ஆயிரங்களில் என்றாலும் அணுமின் நிலையம் பழுதானதில் ஏற்பட்டுள்ள கதிரியக்கம் மக்களின் வாழ்வாதாரத்தையும் மனநிலையையும் பெருமளவு பாதித்துள்ளது. இயற்கையை வெல்லமுடியாதுதான் இருப்பினும் அது தந்த அருட்கொடை இந்த அலையாத்திக் காடுகள். 2004 ஆழிப்பேரலையில் இந்த காடுகளால் தப்பிய கிராமங்கள் உண்டு. எனவே நாம் இயற்கை பேரிடர்களை குறைக்க அலையாத்திக் காடுகளை அதிக அளவு வளர்ப்போம்.

மனிதனால் உண்டாக்கபட்ட இடர் அணுசக்தி. நாட்டிற்கு நாடு மிரட்டவும், சுரண்டவும் இந்த அணுசக்தி பயன்படுகிறது. நல்ல வழியில் அதனை பயன்படுத்தலாம் என்றாலும்  இதுபோன்ற சமயங்களில் அவற்றின் நம்பகத்தன்மை எப்பொழுதும் கேள்விக் குறிதான். எனவே மாற்று எரிசக்தியில் கவனம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சூரிய சக்தி, காற்றாலை முக்கியமாக மரத்துண்டுகள் மூலம் மின்சார உற்பத்தி ஒரு நிலையான தீர்வை தரக்கூடும்.

கீழ்கண்ட தொடர்புகள் மேலும் பயனளிக்கும்


6 comments:

  1. World Forests Day followed by World Water Day, suggest us to leave a healthy world for the coming generations. What we enjoyed our childrens may not get?
    Here is the Quot:

    Lets Leave behind a living Earth for our Children
    Dr. Salim ALi

    ReplyDelete
  2. //இயற்கையை வெல்லமுடியாதுதான் இருப்பினும் அது தந்த அருட்கொடை இந்த அலையாத்திக் காடுகள்.//

    அருட்கொடைகளை பேணிக் காத்து வந்தாலே இயற்கையின் மனம் குளிருமே. நல்ல பதிவு. கதிரின் வரிகளும் அருமை.

    ReplyDelete
  3. திருமதி.ராமலக்ஷ்மி

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அலையாத்தி காடுகள் என்றால் என்ன?
    சுரபுன்னை காடுகளும் அலையாத்தி காடுகளும் ஒன்றா?
    என்ன வகையான மரங்கள் இருக்கும் அங்கே?
    இதை பற்றி உங்களுக்கு விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. M/s தூயா

    உங்கள் வருகைக்கு நன்றி.சுரபுன்னை காடுகள் அலையாத்தி காடுகள் சுந்தரவனக் காடுகள் (மேற்குவங்கம்) மேங்ரோவ் காடுகள் சதுப்பு நிலக்காடுகள் எல்லாம் ஆற்று நீரும், கடல் நீரும் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் உப்புத் தன்மை குறைவாக உள்ள நீரீல் வளரும் காடுகளே. இந்தக் காடுகளில் வளரும் தாவரங்கள் வேர்களால் சுவாசிப்பவை. ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் தண்ணீருக்குள் இருந்து மேல்நோக்கி வளர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான வேர்களைக் காண முடியும். இந்த வேர்களுக்கு இடையே தங்கி இனப்பெருக்கம் செய்வதற்காக ஏராளமான கடல் வாழ் உயிரினங்களும், உள்ளூர். வெளிநாட்டு பறவையினங்களும் இக்காடுகளைத் தேடி வருகின்றன.

    ReplyDelete