Tuesday, September 14, 2010

தமிழகத்தை பசுமைப்படுத்தும் முயற்சியில் திரு. மரம் K. கருணாநிதி

நாற்றுக்களை வினியோகிற்க தயாராகும் திரு. கருணாநிதி.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிலர் எல்லோரும் நலமுடன் வாழ தங்கள் சக்தியையும் தாண்டி சிறப்பாக பொது சேவையில் நம்மை வியக்க வைக்கின்றனர். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இவர்கள் செய்யும் சேவை மகத்தானது. அந்த சிலரில் ஒருவர் திரு.மரம் K. கருணாநிதி.. மிகவும் பொறுப்புடன் அதிக கவனமாக செய்யவேண்டிய பேருந்து ஓட்டுனர் பணியை செய்கிறார். கிடைக்கின்ற ஒரு நாள் ஓய்வையும், விடுமுறை நாட்களையும் மரம் நடுவதில் செலவிடுகிறார். கூடவே சொந்த செலவில் (மாதம் 4 இலக்க அளவில்) மரக் கன்றுகளையும் வாங்கி இலவசமாக வினியோகித்து தமிழகத்தில் ஒருபுரட்சியை உருவாக்கி வருகிறார். மூச்சு, பேச்சு என்று எல்லாமே மரத்தைப் பற்றி மாத்திரமே. ‘விதை சேகரிப்பு’ செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுத்து ஆர்வத்தை குழந்தைகளிடம் வளர்க்கிறார். கோடி மரங்கள் நடுவதை லட்சியமாகவும், திருமதி. வாங்கரி மத்தாய் அவர்களை சந்திப்பதை ஆசையாகவும் வைத்திருகிறார்.
குடும்பத்தினருடன் திரு. கருணாநிதி.

இந்த நவீன “எல்லாமே பணம்தான்” பொருளாதாரத்தில் ஓய்விற்கு வெளிநாட்டுச் சுற்றுலா அல்லது ‘குளு குளு ஊர்கள்’ என்று மெத்தப் படித்தவர்களும் பணம் படைத்தவர்களும் சமூக பொறுப்புக்களை தவிர்த்து வாழ்கையை அனுபவிக்க, இவர்கள் தங்கள் வாழ்நாள் இலட்சியமாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சமூகத்தில் பெரிய மாறுதலுக்கு வித்திடுகின்றனர். விருதுகளுக்காக அலையும் கூட்டத்தில் இவர்களைத் தேடி விருதுகள் (தேசிய, மாநில விருதுகள்) வருவதில் ஆச்சரியம் இல்லை. லட்சக் கணக்கான மரக் கன்றுகளை நட்டுப் பராமரித்தும், வினியோகம் செய்தும் சாதனை செய்யும் இவரை மேலும் விருதுகள் வந்தடையவும் இவரைப் போன்று மேலும் பலர் உருவாகவும் இந்த வலைப்பூ வாழ்த்துகிறது.

திரு. மரம் K. கருணாநிதி
எண் : 4  கடைவீதி
சங்கீதமங்கலம்  ( அஞ்சல் )
விழுப்புரம் மாவட்டம்

அலைபேசி : 93661 09510,  97878 76598


 
மேலும் இவர்களைப் பற்றியும் படியுங்கள்.




13 comments:

  1. வின்சென்ட்,

    உங்கள் வெளிக்கொணரும் முயற்சி வரவேற்கதக்கது, நன்றி,

    கன்றுகளை பொதுவாக எதனை அடி உயரம் வளர்த்து எடுத்து பிறகு எடுத்து நட்டால் சிறப்பாகவும் சேதாரம் அதிகம் ஆகாமல் வளரும் என தெரியபடுதினால் நலம்,

    வெவ்வேறு மரங்கள் வெவ்வேறு விதமான தகுதியை கொண்டிருக்கலாம்,


    நன்றி மீண்டும், உங்கள் பற்றிய புதிய தலைமுறை கட்டுரை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

    சஹ்ரிதயன்

    ReplyDelete
  2. உங்களுடன் இணைந்து நாங்களும் வாழ்த்துகிறோம் திரு.K. கருணாநிதி அவர்களை!

    ReplyDelete
  3. திருமதி.முத்துலெட்சுமி
    திருமதி. ராமலக்ஷ்மி

    உங்கள் இருவரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. திரு.சஹ்ரிதயன்
    உங்கள் வருகைக்கும கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. பொதுவாக 2 அடியிருந்தால் நல்லது. ஆனால் பொருட் செலவு போக்குவரத்தில் கஷ்டம் உண்டு. ஆடுகள் தின்னும் நாற்றுக்களை எவ்வளவு உயரமாக வளர்த்த முடியுமோ அவ்வளவு உயரம் வளர்த்தால் சேதத்தை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  5. would you plz inform me about his telephone number sir.
    love and grace

    ReplyDelete
  6. திரு.சிங்கம்

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி. விலாசத்துடன் அலைபேசி எண்ணை தந்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. miga uuyartha maram (manithan) karuna

    valga avarufaya ulagathin mel ulla karunai

    thirumalai samy

    ReplyDelete
  8. மகிழ்ச்சியா இருக்கு திரு கருணாநிதி பற்றிய செய்தி.

    ReplyDelete
  9. திரு.கபீஷ்

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. திரு.கருணாநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. திருமதி. கோமதி அரசு

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete