தண்ணீருக்காக வரிசையில் இருக்கும் பிளாஸ்டிக் கேன்கள்.
மேலேயுள்ள இரு சோகங்களுக்கும் காரணம் தண்ணீர். வனபகுதிகள் இல்லாமையால் மழை கிடைக்காமலும், அடுத்தது பெய்த மழையை தடுத்து தாமதப்படுத்த வனங்கள் இல்லாமையாலும் ஏற்படுகின்றன. மழை பொழிவைப் பெற வனத்தை உருவாக்குவோம். பெய்த மழைநீரை சேமிக்க பழகுவோம். வருகின்ற காலம் புவி வெப்பத்தால் எப்படி வேண்டுமானாலும் மாறும். எனவே நீர் தேவையை குறைப்போம், மறுஉபயோகம், மறுசுழற்சி (Reduce, Reuse, Recycle) செய்து வாழ்கையை வளமானதாக மாற்றுவோம்.
எனது சென்ற வருட உலக தண்ணீர் தின பதிவைக் காண
http://maravalam.blogspot.com/2008/03/22.html
எனது சென்ற வருட உலக தண்ணீர் தின பதிவைக் காண
http://maravalam.blogspot.com/2008/03/22.html
படம் உதவி: வலை தளம்

உலக நீர் நாள் விழா
ReplyDeleteFirst Published : 24 Mar 2010 12:52:11 AM IST
Last Updated :
புதுச்சேரி, மார்ச் 23: புதுச்சேரி நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக நீர் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
÷தேசிய பசுமைப் படை சார்பில் இவ் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமையாசிரியர் ந.பரமசிவ ஐயர், நீரின் தேவை மற்றும் நீரை பாதுகாக்கும் முறைகள் குறித்து பேசினார்.
÷விழாவில் மரங்கள் அலங்கரிப்பு மற்றும் மரங்களை தத்துக்கொடுத்தல், 8-ம் வகுப்பு மாணவர்களை வழியனுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.÷குடிநீர் பற்றாக்குறை, மரங்கள் பாதுகாப்பு குறித்த நாடகங்கள், குழுப்பாடல்கள், கிராமிய நடனங்கள் நடைபெற்றது. தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் ஆர்.இளங்கீரன், ஆசிரியர்கள் கோ.இளங்கோவன், ந.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்