இரு வாரங்களுக்கு முன் சத்தியமங்கலம் - கோபி சாலையிலிருந்து சுமார் 2 கீ.மீ தூரத்தில் பசுமை நிறைந்த இப்பகுதியில் இரு மரங்களில் இயற்கையாக கட்டிய சுமார் 40 மலைந்தேனீக்களின் கூடுகளைப் பார்த்து அதிசயப்பட்டேன். மரங்களின் உரிமையாளர் திரு. மகாலிங்கம் சுற்றுவட்டாரத்தில் இது போன்ற தேன் கூடுகள் இல்லையென்றும் ,அவர்கள் தோட்டத்திலேயே இதே போன்ற மரம் இருந்தும் கூடுகள் இல்லாததை காண்பித்தார்.
காய்கறி பயிர்களில் நல்ல மகசூல் கிடைப்பதாக கூறிய அவர் டிராக்டர் கொண்டு நிலத்தை உழ முடிவதில்லை காரணம் புகை வாசம் வந்தாலே மனிதர்களை தேனீக்கள் தாக்க ஆரம்பித்துவிடுவதும் அது மாத்திரமன்று புகைபிடிப்பவர்களுக்கும் இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்றார். கூடுகள் 3 அடி வரை இருக்கும் போல் தோன்றுகிறது. பளு தாங்காமல் விழுந்து கிடந்த தேன் அடைகளைப் பார்த்தாலே பிரமிப்பாக இருந்தது. 
கீழே விழுந்த தேன் அடையுடன் திரு. மகாலிங்கம் தம்பதியினர்.




தமிழகத்தின் சுமார் 328 பறவைகளின் அங்க அடையாளங்கள், காணப்படும் இடங்கள், வாழ்வுமுறை, உணவு, குரல், இனப்பெருக்கம் என மிகத்தெளிவாக வண்ணப் படங்களுடன் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. ஆங்கிலம், தமிழ் கூடவே அறிவியல் பெயரும் இருப்பது பின்னாட்களில் குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். முனைவர்.K.ரத்னம் அவர்கள் தமிழ்துறைத் தலைவராக மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, தஞ்சாவூரில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








மாடித் தோட்டம், என்பது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறப்பாக இருந்திருக்கிறது. பாபிலோனின் தொங்கு தோட்டம் பண்டைய (Ancient World Wonders) உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இன்றைய பாக்தாத் (இராக்) நகரிலிருந்து சுமார் 50 கீ.மீ தொலைவில் அதன் சிதிலங்கள் உள்ளன.

இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பதாகவும், 2025 ஆண்டு அது 60 மில்லியனை தொடும் என கூறுகிறார்கள்.











சென்ற மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் என் கண்களுக்குப்பட்ட சில மண் அரிப்பு காட்சிகள். விவசாயத்தில் மிக முக்கியமானது மண் அரிப்பை தடுப்பது.Top Soil எனப்படும் வளமான மேல் மண் அது அடித்துச் செல்லப்பட்டால் விளைச்சல் குறையும். திரும்பவும் வளம் சேர்க்கவேண்டும். எனவே நல்ல விளைச்சலைப் பெற மண் அரிப்பை தடுப்பது மிக மிக அவசியம். வரும் முன் காப்போம்.

இயற்கை மூலதனங்களான காடுகள், தண்ணீர், மண்வளம், பல்லுயிர்வகைகள் மீதான மனிதனின் தேவைகள் அளவிற்கு மிக அதிகமாக இருப்பதால் இவ்வளங்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் இப்புவியின் திறன் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது என கூறி இத்தேவைகள் இப்படியே தொடர்ந்தால் 2030 ஆண்டுகளின் மத்தியில் இதே போன்ற இரண்டு உலகங்கள் தேவைபடும் என்று இவ்வமைப்பின் இயக்குனர் திரு.ஜேம்ஸ் லீபே கூறியுள்ளார்.
ஒவ்வோராண்டும் இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் இழப்புக்களை சுனாமி, காத்தரீனா முதல் நேற்றைய பாகிஸ்தான் நிலநடுக்கம் வரை கணக்கிட்டால் நிச்சயம் வருங்காலம் தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிக மோசமானதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.








