Wednesday, June 26, 2013

“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்



தாராளமயம், உலகமயம் என மக்களுக்கெதிரான சட்டங்கள், திட்டங்கள் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் உலக மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலையில் மக்கள் தாங்களே வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம். குறிப்பாக நீராதாரத்தைக் காப்பதில் தமிழகத்தில் சில ஊர்களில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. இது ஒவ்வொரு சிற்றூர்களிலும் நிகழ்ந்தால் எங்கும் சுபிட்சம் எதிலும் நிறைவு.   

சில  நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு

சேலம் மூக்கனேரி
மண்திட்டுக்ககளில் மரங்கள்


சேலம் மூக்கனேரி தூர்வாரப்பட்டு ஏரியின் நடுவில் மண்திட்டுக்கள் அமைத்து மரங்கள் வளர்க்கப்படும் அற்புதக் காட்சி.

குளம் காப்போம் குலம் காப்போம்

மண் திட்டுக்கள் உருவாக்கம்
கோவை மாநகரில் பெரியகுளத்தில் குளம் காப்போம் குலம் காப்போம் மூலம் தூர்வாரும் பணி கடந்த சிலவாரங்களாக நடைபெற்று மண் திட்டுக்கள் உருவாகியுள்ளன.

காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் சீரமைக்கப்பட்டு வாருங்கள் காடு வளர்ப்போம் நிகழ்வு வரும் 29-06-2013 அன்று நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
இதுவரை அங்கே செய்த வேலைகளை பேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார்கள். அதன் தொகுப்பு கீழே உள்ளது.



சென்னையின் குடிநீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வருகின்ற 3,4 - 08-2013 (இருதினங்கள்) நடைபெறவுள்ளது. முடிந்தவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்த நிகழ்வுகள் பற்றி பகிர்ந்திருக்கிறேன். வேறு நிகழ்வுகள் நடைபெறுமானால் பகிருங்கள், தெரிவியுங்கள்.



Photographs Source : Face Book & blogs

11 comments:

  1. இது போல் எங்கும் இருந்தால் சுபிட்சம் தான்...

    தங்களின் சேவைகளுக்கு... கலந்து கொள்ளும் அனைவருக்கும்... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இது போன்று அனைத்து ஊர்களிலும் நடை பெற வேண்டும்.

    தங்களின் சேவைகளுக்கும், அதில் கலந்து கொண்டவர்களுக்கும், கலந்து கொள்ள இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஊர்கூடி சுத்தம் செய்தால் முடியாத காரியமும் உண்டா. தன்னார்வ தொண்டர்கள் வாழக்.
    வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஊர்களில் இப்படி நல்ல மனிதர்கள் இருந்தால் நாடு நலம் பெறும். இத் தொண்டில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வின்சென்ட் இயற்கையின் மீதான உங்கள் ஆர்வம் பார்த்து ரொம்ப சந்தோசமாக உள்ளது. அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் இதுபோல ஒவ்வொரு இடங்களிலும் மக்களே முயற்சி செய்ய ஆரம்பித்தால் தான் மாற்றங்கள் வரும்.

    உங்கள் மற்ற பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். குளம் மறு சீரமைப்பு மரம் நடுதல் போன்றவற்றை பற்றி நானும் நண்பர்களுக்கு கூறி வருகிறேன்.

    ReplyDelete
  7. உங்களின் வருகைக்கும், கருத்துகளுக்கும்,செயல்பாடுகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

  8. "“நமக்கு நாமே” நோக்கதில் மக்கள் பயணம்"

    இப்படித்தான் பொற்கோவில் குளத்தை மக்களே முன் வந்து தூய்மைப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட நீரால் நிரப்பி புனிதக்குளம் உண்மையிலேயே புனிதமாயிற்று..!

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி. சென்னையில் பங்கு கொள்ள முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  10. உங்களின் வருகைக்கும், தகவலுக்கும்,மிக்க நன்றி.

    ReplyDelete
  11. உங்களின் வருகைக்கும், முயற்சிக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete